Total Pageviews

Tuesday, December 13, 2011

சிங்கமும் பங்கும்!



சிங்கமும் புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிங்கம் பசுவைக் கொன்றது. புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.
தாய்புலியோ "நீ ஏன் டலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்று கேட்டது. குட்டி புலி சொல்லியது: "நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வரமுடியும். நான் எப்படி சிங்ஙத்தோடு விவாதிக்க முடியும்" அதைக்கேட்ட கோபமான தாய்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது.
சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.
தாய்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. "ஏன் இங்கே வந்தாய்?" கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது. பசுவில் பாதி கேட்க வந்த தாய்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: "ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்."
குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய தாய்புலியிடம் குட்டி கேட்டது: பசுவில் பாதி கேட்கப்போன நீங்களகுடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே? "மகனே... சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்து விட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக" என்றது தாய்புலி.
நீதி :நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.



No comments:

Post a Comment

ஒரு பெண்ணுக்கு வலியைக் கொடுத்து அவளைத் தொந்தரவு செய்தால், அவள் உங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துவிடுவாள், நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அவள் உங்களை மரணத்தின் தருவாயில் இருந்தும் காப்பாற்றுவாள்"

  தாகம் எடுத்த ஒரு மனிதன் ஒரு கிணற்றுக்குச் சென்றான், அங்கு ஒரு இளம் பெண் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தாள். அந்த மனிதன் அந்தப் பெண்ணிடம் தாக...