Total Pageviews

Wednesday, September 3, 2025

#மாறாத_தழும்புகள் !

 

மாறாத_தழும்புகள் !

முனியம்மாளுக்கு கணவன் இல்லை ஒரே ஒரு மகன்தான் பொம்பள பிள்ளை கிடையாது மகனுக்கு திருமணம் ஆகி ஒரு பையன் இருக்கிறான் மருமகள் மலர்கொடி அவருக்கு தைராய்டு பிரச்சனை அதனால் உடம்பு குண்டாக இருக்கும்..

முனியம்மாள் அரசு பள்ளிக்கூடத்தில் சத்துணவு ஆக்கும் வேலை செய்து வருகிறாள்.

மருமகள் உடம்பு குண்டாக இருப்பதால் அவளால் அதிக வேலை செய்ய முடியாது வீட்டு வேலை மட்டும் செய்வாள்..

மகன் மூட்டை தூக்கும் தொழிலாளி ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்கு வேலை செய்தால் 250 ரூபாய்க்கு குடித்துவிடுவான்..

பேரன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறான்..

மகனுக்கு திடீரென்று ஒரு நாள் உடம்புக்கு சரியில்லாமல் போக 
அவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்கள் மருத்துவமனையில் உங்கள் மகனின் உடல்நிலை ரொம்ப மோசமாக இருக்கிறது 50,000 பணம் கட்டுங்கள் என்றார்கள்..

மருமகள் மலர்கொடி ஊருக்கு வந்து வட்டி கொடவாங்கல் செய்யும் வள்ளிக்கண்ணு அவர்களிடம் ரூ.50,000 பணத்தை வாங்கிக் கொண்டு மருத்துவமனையில் செலுத்திய பின் கணவக்கு சிகிச்சையை தொடங்கினார்கள்...

உங்களின் கணவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் பத்து நாட்கள் தொடர்ந்து இங்கே இருக்க வேண்டும் அதற்கு செலவாகும் என்று சொன்னார்கள்.. தாய் மனசு சும்மா இருக்கும் என்ன ?மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பணத்தை நான் தருகிறேன் என்று கூறிவிட்டு வந்துவிட்டால் முனியம்மாள்...

ஊருக்கு வந்து வள்ளிக்கண்ணுவிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று தன் மருமகளிடம் கொடுத்துவிட்டு ஊருக்கு வந்து விட்டாள்...

தன் கணவனை அருகிலிருந்து கவனித்துக் கொண்டாள் மலர்கொடி உடலிலும் சரி ஆகிவிட்டது வீட்டுக்கு வந்து விட்டார்கள் ஆனால் கணவனால் வேலை செய்ய முடியாது.

முனியம்மாள் ஒரு ஆள் வேலை செய்து பேரன் படிக்க வேண்டும்,வீட்டு செலவு எல்லாத்தையும் கவனிக்க வேண்டும், வட்டி பணம் கட்ட வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தால்...

வட்டிக்கு பணம் வாங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது "வள்ளிக்கண்ணு வட்டி பணம் கேட்டு வீட்டுக்கு வந்து விட்டார்..

பணம் இருந்தால் தானே கொடுக்க முடியும் ஐயா இந்த மாதம் பணம் இல்லை அடுத்த மாதம் சேர்த்து தருகிறோம் என்று சொல்லிவிட்டார்கள்..

முனியம்மாள் 2 லட்ச ரூபாயும் வட்டியும் முதலுமாக எப்படி கட்டபோறமோ??என்று நினைத்துக் கொண்டே சத்துணவு சமைத்துக் கொண்டிருந்தாள்..

மறு மாதம் வந்துவிட்டது வள்ளிகண்ணு வீட்டுக்கு வந்தார் வட்டி பணம் என்னாச்சு? என்று கேட்டார் ஐயா இந்த மாதமும் பணம் இல்லை அடுத்த மாதம் பணம் கொடுத்து விடுகிறோம் என்று சொன்னாள் இந்த மதமே கொடுக்க முடியவில்லை அடுத்த மாதம் எப்படி கொடுப்பே?? ??என்று கெட்ட வார்த்தையால் திட்டினார்..
அப்போது மருமகள் மலர் கொடி வீட்டுக்குள் சென்று விட்டாள் முனியம்மா ஒன்று சொல்கிறேன் கேள் உன் மருமகளை என் கூட படுத்து வட்டியை கழிக்க சொல் என்றார் .முனியம்மாளுக்கு தூக்கி வாரி போட்டது போல் இருந்தது..

வழக்கம் போல் வேலைக்கு சென்றால் 
அவர் சொன்ன வார்த்தை மனதுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. 

நாம வேலையில் இருக்கும் போது இறந்து விட்டால் மருமகளுக்கு வேலை கிடைக்கும் உதவித்தொகையும் கிடைக்கும் என்று ஒரு கணம் எண்ணினாள்..

தன் முந்தானை எடுத்தால் தீயில் வீசினால்  தன் சேலை தீப்பிடித்து  மனதை கல்லாக்கி கொண்டு அய்யோ அய்யோ என்று கத்த வில்லை உடல் கருகியது இறந்துவிட்டால் ஆம்புலன்ஸ் வந்தது உடல் கூறு ஆய்வுக்காக எடுத்து சென்றார்கள். 

சமையல் செய்யும்போது சேலையில் தீப்பிடித்து உடல் கருகி விட்டது என்று அறிவித்தார்கள்.. மாமியாரின் வேலை மருமகளுக்கு கிடைத்தது உதவி தொகை ஒரு லட்ச ரூபாய் கிடைத்தது அந்த பணத்தை வட்டிக்கு வாங்கிய 
வள்ளிகண்ணுக்கு கொடுத்து விட்டாள்.

மீதி பணத்தை கொஞ்சம் கொஞ்சமா தருகிறேன் ஐயா என்று சொல்லிவிட்டாள். 

மாமியார் வேலையை மருமகள் பார்த்தாள் 

மறு மாதம் பிறந்து விட்டது 
காலையில் வள்ளிகண்ணு  வீட்டுக்கு வந்து விட்டார் வட்டி பணம் கொடு என்றார் ஐயா பணம் இல்லை அடுத்த மாதம் சேர்த்து தருகிறேன் என்று சொல்லும்போது 
மகன் அம்மா நான் கல்லூரிக்கு போயிட்டு வாரேன் என்று சொன்னான்..

நீ எல்லாம் படிச்சு கலெக்டரா ஆக போற?? என் வீட்டில் வந்து மாடு மேய்த்து வட்டி கட்டு என்று சொன்னார்.. சரி ஐயா அவன் கல்லூரி விடுமுறை நாட்களில் மாடு மேய்க்க வருவான் என்றாள். மலர் கொடி 

அப்படி இருந்தும் அவர் வாய் அடங்கவில்லை இப்படி ஊரான் பணத்தில் உடம்பை வளர்க்க வேண்டுமா?? என்று கேட்டார் மகனுக்கு கோபம் வந்துவிட்டது வள்ளிக்கண்ணுவை அடிக்க பாய்ந்தான்  அம்மா தடுத்துவிட்டாள். மகனே இவரை அடிக்க வேண்டாம் வேறு விதமாக அடிக்க வேண்டும் என்று சொல்லி விட்டாள்..
மகனுக்கு ஒன்றும் புரியவில்லை..

சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் வள்ளிக்கண்ணு வீட்டுக்கு போய் மாடு மேய்த்து வந்தான் மகன்.. கல்லூரி படிப்பை முடித்தான் ஐயா ராசா கலெக்டருக்கு படிக்க என்ன செய்ய வேண்டும் என்று அம்மா கேட்டாள் 
அம்மா அதற்கு (ஐ ஏ எஸ்) படிக்க வேண்டும் என்று சொன்னான்.
நீ கலெக்டர் ஆக வேண்டும் என்றாள் இவனும் விடாம முயற்சி செய்து  ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி பெற்றான்.

நல்ல சம்பளமா வாங்கி வட்டியும் முதலுமாக வள்ளிக்கண்ணுவுக்கு கொடுத்து விட்டார்கள்....

தன்னுடைய சொந்த மாவட்ட கலெக்டராக மாறுதல் வந்து... (காலச்சக்கரம் சுற்றும் அல்லவா?)

வட்டி கொடவாங்கள் வாங்கல் வள்ளிக்கண்ணு பணத்தை எல்லாம் பிள்ளைகள் பிடுங்கிக் கொண்டு அவரை சோத்துக்கு கூட வழியில்லாமல் ஆக்கிவிட்டார்கள்...
அந்த சமயம் தமிழக அரசு முதியோர் உதவித் தொகை விண்ணப்பிக்கலாம் என்று ஒரு அறிவிப்பு வந்தது. ஊரிலுள்ள முதியோர்கள் எல்லோரும் விண்ணப்பித்தார்கள் வள்ளிக்கண்ணும் விண்ணப்பித்திருந்தார்..

எல்லா விண்ணப்பங்களும் ஆட்சியர் கைக்கு சென்றது தன்னுடைய கிராமத்தில் உள்ள முதியோர்களின் விண்ணப்பத்தை தனியாக எடுத்தார்.
அதில் வள்ளிக்கண்ணு பேரும் இருந்தது அதை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்தார் தன் அம்மாவிடம் விசாரித்தார் அவர் பணத்தை எல்லாம் மகன்கள் பிடுங்கி விட்டார்கள் இப்போது சாப்பாட்டுக்கு கூட வழியில்லை என்றாள்.

அம்மா முதியோர் உதவி தொகை வேண்டும் என்று வள்ளிக்கண்ணு விண்ணப்பித்திருக்கிறார் என்று மகன் கூற மகனே நீ என்கிட்ட கேட்டயா நான் இவரை அடிக்கவா என்று இப்போது அடி என்றாள்.. எப்படி அம்மா அடிப்பேன்?? என்றான் வார்த்தைகளால் அடி என்றால் அம்மா.

கலெக்டர் நம்ம ஊருக்கு வருவதை தெரிந்த வள்ளிக்கண்ணு கலெக்டர் வீட்டுக்கு வந்தார். ஐயா என்னுடைய பெயர் வள்ளிக்கண்ணு என்றார் எனக்கும் நல்ல தெரியும் ஐயா நான் கலெக்டராக இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்று சொன்னார்..
எனக்கு புரியவில்லையே என்று சொன்னார் வள்ளிக்கண்ணு
எங்க அம்மா உங்களிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார்கள். அப்போது நீங்கள் என்ன சொன்னீர்கள் ஊரான் பணத்தில் இப்படி உடம்பை வளர்க்க வேண்டுமா?? என்று கேட்டீர்கள். அது மட்டும் இல்லாமல் நீ படிச்சு கலெக்டர் ஆகப் போற? என் வீட்டுல மாடு மேய் என்று சொன்னீர்கள?? அந்த வார்த்தை தான் இன்று என்னை கலெக்டர் ஆக்கியிருக்கிறது...
என் உடம்பில் எத்தனையோ காயங்கள் ஏற்பட்டிருக்கிறது எல்லாம் தழும்புகளும் மறைந்து விட்டது ஆனால் நீங்க சொன்ன அந்த (காயத்தின் தழும்பு மட்டும் இன்னும் மாறவில்லை). ஊரான் பணத்தில் உடம்பை வளர்க்க வேண்டுமா என்று சொன்ன வார்த்தை. வள்ளிக்கண்ணு தலை குனிந்து விட்டார் ஐயா உங்களை பழி வாங்க வேண்டும் என்று நினைத்தால் நான் உங்க விண்ணப்பத்தை இப்போதே கிழித்து போட முடியும் ஆனால் அதை செய்ய மாட்டேன். கண்டிப்பாக உதவி தேவை கிடைக்கும் காலம் சக்கரம் சுழண்டு கொண்டே இருக்கும் மறந்து விடாதீர்கள்....

ஆயுதம் எடுக்காதே 
அறிவை பயன்படுத்து...

உண்மையும் கற்பனையும் கலந்த
கதை....

No comments:

Post a Comment

#மாறாத_தழும்புகள் !

  மாறாத_தழும்புகள் ! முனியம்மாளுக்கு கணவன் இல்லை ஒரே ஒரு மகன்தான் பொம்பள பிள்ளை கிடையாது மகனுக்கு திருமணம் ஆகி ஒரு பையன் இருக்கிறான் மருமகள்...