Total Pageviews

Sunday, May 17, 2015

குறுக்குப் பாதை !


ஒரு மாட்டு வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.

‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.

‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.

‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’

‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.

சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு மாட்டு வண்டிக்காரனுக்குக் கோபம்.‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.

‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.

சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது.

தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்திக் கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.

வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.

”எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண் பதறிவு” -
 குறள் 423
Thanks to DINAKARAN.COM

'முதியோர் இல்லம் !

என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த 'முதியோர் இல்லத்தில்' இருந்து பேசினாங்க... "உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க"...!!!என்ற மனைவியை திரும்பிப் பார்த்தான் அவன்

ஏன் என்னவாம் ...? இப்ப தானே போன மாசம் போய் பார்த்துட்டு வந்தேன் என்றவனிடம் , "போய் என்னனுதான் பாத்துட்டு வாங்க"...? நீங்க பாட்டுக்கும் இது 'தான் சாக்குன்னு' இப்பவே கூட்டிகிட்டு வந்துடாதீங்க...! இங்க ஏற்கனவே ஏகப்பட்ட செலவு இருக்கு..! இதுக்கு நடுவுலே அவங்களை வேற பாக்க முடியாது. 'பொண்ணு படிப்புச்' செலவுக்கே இங்க 'முழி' பிதுங்குது, இதுலே உங்க அம்மா 'வைத்திய செலவு' வேற செய்யமுடியாது பார்த்துக்கங்க'...என்றாள்

சரி... சரி... விடு நான் பார்த்துக்கறேன் என்ற அவன் மனதிலும் அம்மாவை பற்றிய இனம் புரியாத பயமும், அதே நேரம் மனைவி மீது கோபம் கோபமாய் வந்தது.

மறுநாள் காலை அம்மாவை பார்க்க'முதியோர் இல்லம்' சென்ற சந்துரு அங்கிருந்த மேடத்திடம் விபரம் கேட்க, அவங்க அம்மா கொடுக்க சொன்னதாக அவர்கள் அவன் கையில் 'ஒரு கவரை' கொடுத்தாங்க. அதை பிரித்த பார்த்த போது அவன் பெயருக்கு '2 லட்ச ரூபாய்க்கான டி.டி யும்', ஒரு கடிதமும் இருந்தது. படித்த அவன் அதிர்ந்து போனான் .அதில்

அன்பு மகனுக்கு,

உன் தந்தை இறந்தபோது 'உன்னை நான் சுமையாக' அப்போது நினைக்கவில்லை.

இப்போதும் உனக்கு 'நான் சுமையாக' இருக்க விரும்பவில்லை.

உன் மனைவி எதிர்பார்ப்பது போல் என்னால் 'உடல் உழைப்பை தர முடியவில்லை.

நீ கஷ்ட படுவதை பார்க்க என்னால் முடியவில்லை. ஆகவே

இப்போதும் எனது "கிட்னீயை" விற்று அந்தப்பணத்தை உனக்கு கொடுத்திருக்கிறேன்.

கடனையெல்லாம் அடைத்து விட்டு என் 'பேத்தியை' நன்கு படிக்க வை..!.அவள் நாளை 'உன்னை உன் மனைவியை' காப்பாத்துவா.! பாத்துக்க எல்லாத்தையும்,

நீங்க எல்லாம் 'நல்லாருக்க' நான் அந்த கடவுள் கிட்ட வேண்டிகிறேன்...! நான் போகிறேன்...? அன்பு அம்மா ...!

அவன் அப்படியே 'இடிந்து' போய் விட்டான். இன்றுவரை
'மனதிற்குள் சொல்லி'... சொல்லி... 'அழுது' கொண்டுதான் இருக்கிறான்...! என் 'நண்பன்'...!

நீதி: 'அன்பு' என்பது 'அன்னையிடம்' மட்டுமே எல்லா காலங்களிலும் 'அமுதமாய்' கிடைக்கும். '

"தாயின் அன்பை யாருக்காகவும் தள்ளி வைக்காதீர்கள்"...!

அன்பு கொண்ட அனைவர்க்கும்'....!

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...