Total Pageviews

Wednesday, August 22, 2012

மகிழ்ச்சியும் நிம்மதியும் வெளியில் இல்லை நம்மிடம் தான் உள்ளது.''


ஒரு பெரிய பணக்காரன். அவனுக்கோ மனதில் திருப்தியும் அமைதியும் இல்லை. பணத்தால் அடையக்கூடிய சுகமெல்லாம் அடைந்த பின்னும் அவனுக்குள் ஒரு வெற்றிடம். 

தன் செல்வமனைத்தையும் ஒரு பெட்டியில் வைத்து அங்கு வந்த ஒரு ஞானியைப் போய்ப் பார்த்தான். 

அவரிடம், ''சுவாமி, என்னுடைய சொத்து முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தாருங்கள். ஞானி சிரித்தார். 

அடுத்த கணம் அந்தப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார். செல்வந்தனுக்கோ பயங்கர அதிர்ச்சி. 

வாழ்நாள் முழுவதும் தேடிய சொத்தை ஒரு போலிச் சாமியாரிடம் கொடுத்து ஏமாந்து போய் விட்டோமே என்ற கவலையுடன் அவரைப் பின் தொடர்ந்து ஓடினான். 

ஞானி எங்கெங்கோ சுற்றி ஓடி விட்டு மீண்டும் முதலில் இருந்த இடத்துக்கே திரும்ப வந்தார்.

பணக்காரனும் மூச்சிரைக்க பின்னாலேயே அங்கு வந்து சேர்ந்தான். ஞானி அந்தப் பெட்டியை அவனிடமே திரும்பக் கொடுத்தார்.

அவனுக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. பணம் திரும்பக் கிடைத்ததில் நிம்மதி.

இப்போது ஞானி அவனிடம் சொன்னார், ''இங்கே நீ வருமுன் இந்த பெட்டி உன்னிடம் தான் இருந்தது. அப்போது அதிலிருந்த செல்வத்தால் உனக்கு மகிழ்ச்சி இல்லை. அதே பெட்டிதான் உன்னிடம் இப்போது இருக்கிறது. ஆனால் உன் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சி; நிம்மதி. மகிழ்ச்சியும் நிம்மதியும் வெளியில் இல்லை நம்மிடம் தான் உள்ளது.''

நீண்ட ஆயுளுக்கு என்ன வழி?


ஒரு சம்சாரி எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தால் அதிக ஆண்டுகள் வாழலாம் என்கிற கேள்வி அவன் மனதைத் துளைத்துக் கொண்டிருந்தது.
நூறாண்டுகள் வாழ்ந்த ஒருவரைப் போய்ப் பார்த்தான்.
அவரிடம், “அய்யா! நூறு ஆண்டுகள் வாழ்ந்து விட்டீர்களே எப்படி என்று சொல்லுங்களேன்?” என்று கேட்டான்.
அதற்கு அவர், “நான் மாமிசம் சாப்பிடமாட்டேன்.  குடிப்பழக்கம் என்னிடம் உண்டு அதனால் தான்!” என்று பதிலளித்தார்.
உள்ளறையிலிருந்து இலேசான இருமல் சத்தம் கேட்டது.
அங்கே இருமுவது யார்? என்று கேட்டார் சம்சாரி.
 
“எனது அண்ணன்தான்” என்றார் அந்த நூறாண்டு மனிதர்.
 “உங்களுக்கே வயது நூறாகிறது. உங்களுக்கு ஒரு அண்ணனா? அவரை நான் பார்க்க வேண்டுமே” என்றார் சம்சாரி.
அவரைப் பார்த்த சம்சாரி,  “அய்யா! உங்க தம்பி நூறு வருடம் வாழ்வதைப் பெருமையாக இருக்கிறது, ஆனால் அவருடைய அண்ணன் நீங்கள் அதைக் காட்டிலும் கூடுதலான் ஆண்டு வாழ்ந்து வருகிறீர்களே? எப்படி இத்தனை ஆண்டுகள் உங்களால் வாழ முடிகிறது?” என்று கேட்டார்.
“நான் தினமும் மாமிசம் சாப்பிடுவேன். குடிப்பழக்கம் எனக்கு இருப்பதால் தினமும் எனக்கு குடிக்காமல் இருக்க முடியாது” என்றார் அந்த நூறாண்டு மனிதரின் அண்ணன்.
சம்சாரிக்குத் தலையைச் சுற்றியது.
-நடிகர் ரஜினிகாந்த் சொன்ன குட்டிக்கதை

ஆசை அழித்து விடும்!


முனிவர் ஒருவரின் தவத்தை மெச்சி கடவுள் அவருக்கு காட்சி கொடுத்து, "என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார்.

“தங்கள் தரிசனமே எனது தவத்தின் நோக்கம்; வேறெதுவும் வேண்டாம்” என்றார் அந்த முனிவர்.

கடவுள், “நான் உனக்கு ஒரு விருஷத்தை வரமாக தருகிறேன். கற்பக விருஷம் மாதிரி. இதனிடம் கேட்கக் கூட வேண்டாம். அதனடியில் நின்று கொண்டு யார் என்ன நினத்தாலும் அது உடனே நடக்கும்” என்று அருளினார் .
இந்த மரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இது நமக்கு ஆசையை வளர்த்து நம்மை பாவம் செய்ய வைக்கும் என்று சிந்தித்த முனிவர் அங்கிருந்து ஓடி விட்டார்.

ஒரு நாள் அந்த வழியே ஆடு மேய்த்துக் கொண்டு வந்த ஒரு இளைஞன் வந்தான். அந்த மரத்து நிழலில் கொஞ்சம் படுத்து ஓய்வெடுக்க நினத்தான்.

அந்த மரத்தடியில் வந்து படுத்துக் கொண்டே யோசித்தான், “இது என்ன பொழைப்பு; தினம் தினம் ஆட்டை மேய்ச்சிட்டு, ஒரு நல்ல சாப்பாடு கூட சாப்பிட்ட முடிவதில்லை. அரண்மனையில் சாப்பிடற விருந்து மாதிரி சாப்பாடு கிடைச்சா தேவலை”

அந்த மரத்தினடியிலிருப்பவர் எதை நினைத்தாலும் மரம் தரக்கூடியது என்பதால் அவன் கண் முன்னே அவனுக்கு ராஜோபசார விருந்து படைக்கப்பட்டிருந்தது. அவன் பயந்து போய் விட்டான். இது ஏதாவது பிசாசு அல்லது பூதத்தின் வேலையாக இருக்குமோ என்று அந்த மரத்தை சுற்றி சுற்றி வந்தான். ஒன்றுமில்லாததால், பயம் தெளிந்து அந்த விருந்தை ஆவலுடன் சாப்பிட்டா ன்.

அவன் மீண்டும் யோசித்தான், “சாப்பிட்டதுக்குப் பின்னால் வசதியாகப் படுக்க வேண்டும்”

அந்த மரம் அவன் நினைத்தபடி அவனை நல்ல கட்டில் மெத்தையில் படுக்க வைத்தது.

தூக்கத்திலிருந்து விழித்த அவன், “நான் நடுக்காட்டில இப்படி மரத்துக்கடியில் படுத்திருக்கிறேனே திடீரென்று புலி வந்து நம்மை அடிச்சுக் கொன்று விட்டால் ….”. 

அவன் எண்ணப்படியே புலி வந்து அவனை அடித்துக் கொன்றது.

ஆசை மட்டும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாய் வந்து நம்மை அழித்துவிடுகிறது.

- ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன கதை

கழுதைக்கு வந்த ஆசை!



ஒரு எஜமானன் வீட்டில் ஒரு கழுதையும் நாயும் இருந்தன.

ஒர் நள்ளிரவில் கழுதை கத்தியது

வீட்டுக்காரன் கதவைத்திறந்துகொண்டு வெளியே வரவில்லை.

மீண்டும் கழுதை கத்தியது.

வீட்டுக்காரன் கதவைத்திறந்துகொண்டு வெளியே வந்தான்.

கைத்தடியால் ஒங்கி ஒரு போடுபோட்டன். கழுதை அலறிப்போயிற்று.

நாய் சொன்னது. ‘நானும் குலைக்கிறேன் இப்போது நம் வீட்டுக்காரன் என்னை என்ன செய்கிறான் பார்’ என்றது.

கழுதை அதையும் பார்ப்போம் என்றது.

சொல்லியபடியே நாய் குலைக்க வீட்டுக்காரன் கதவைத்திறந்துகொண்டு வெளியில் வந்து சுற்றிச் சுற்றிப்பார்த்துவிட்டு பின் கதவு தாளிட்டுக்கொண்டான்.

கழுதைக்கு ஆத்திரமாய் வந்தது.

நாய் சமாதானம் சொன்னது.’ இந்த இடம் சரிவராது ஆளுக்கு ஆளுக்கு ஒரு சட்டமாய் இருக்கு. நாம் இருவரும் இந்த எஜமான் வீட்டைவிட்டு ஒடிவிடுவோமா’
 நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ஆனாலும்’ கழுதை லேசாக இழுத்து நிறுத்தியது
 ஏன் என்ன சொல்கிறாய்’ நாய்த் திருப்பிக் கேட்டது.
 நம் எஜமானனுக்கும் அவன் மனைவிக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு வரும்’
 வந்தால்’ ‘ உன்னைப் போய் நான் கட்டிகிட்டதுக்கு தெருவுல கட்டிக்கிடக்கிற அந்தக் கழுதைய கட்டிகிட்டுகுடும்பம் பண்ணுலாம்’ இப்படியேத்தான் அடிக்கடி நம் எஜமான் மனைவியிடம் புலம்புகிறார் என் நீண்ட காதுகளால் நானே கேட்டிருக்கிறேன்’.

‘ அப்புறம்’

‘ ஒருக்கால் எஜமான் அப்படி ஒரு நோக்கத்தோடு என்னைத்தேடி வரும்போது நான் இங்கு இருக்கவேண்டும் அல்லவா அதான் பார்க்கிறேன்’ என்றது கழுதை..
 நீ சொல்வதும் ஒரு விதத்தில் சரித்தான்’ நாய் பதில் சொன்னது.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை



ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

Thanks to Udayakumar

சீறு ! அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து !

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.


ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.

Wednesday, August 1, 2012

விதியை வென்ற மதி!

விதியை வென்ற மதி!
ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்
; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.


இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்
எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.


மன்னன் வந்தான்
, அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான்
, ”மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!

கட்டளைகள் பறந்தன
; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க
, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம்
, இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான்
மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?”
தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!
அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?”
தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!
பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?”
அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்
; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள்
, தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த
4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை
; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.


மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை
?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.


ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்
; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

Thanks to only superstar.com

சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு !

  ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங...