Total Pageviews

Sunday, July 15, 2012

ஏமாத்துறது எனக்கு கைவந்த கலை"



முக்கினாள், முனகிணாள்,சிணுங்கிணாள் ...

வேண்டாம் அருண் ....விடுங்க ப்ளீஸ்....

நாம பழகி சில நாட்கள் தானே ஆகுது..கல்யாணத்துக்கு முன்ன இதெல்லாம் வேண்டாம்  அருண்..ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க!!!

ஹேய்! நம்ம காதலப்பத்தி வீட்ல சொல்லிட்டேன்.அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க..அப்ரம் ஏன் கவலைப்புடுற?

கண்டிப்பா உன்ன நான் கல்யாணம் பன்னிப்பேன் இது சத்தியம் என்றான் அருண்..!!

மீண்டும் சிணுங்கினாள் மோனிகா....

இன்பம் முடிந்தது

பொழுதும் விடிந்தது.

சில நாட்களுக்கு பிறகு..

அருணின் அலுவலகத்துக்குள் புகுந்தாள் மோனிகா..

”என்ன ஏமாத்த எப்டி மனசு வந்துது அருண்.. நான் அப்டியா பழகினேன்?இப்டி பண்ணிட்டியே” நீ நல்லாவே இருக்க மாட்டடா...பாவி.

கண்ணீர் வடித்தாள் கூச்சளிட்டாள்...

ஹேய் நிறுத்து! 1000 ரூபாய் கட்டொன்றை எடுத்து மோனிகாவின் முகத்தில் வீசினான் அருண்.


அதை மகிழ்வுடன் எடுத்தாள் மோனிகா.

"தேங்க்யூ வெரிமச் அருண்.ஆக்சுவல்லி என்னோட ரேட் பத்தாயிரம்தான். நல்ல பொண்ணுங்ககிட்ட நடிச்சி ஏமாத்துறது எப்படி உன்னோட வேலையோ...அதே போல உன்ன மாதிரி இருக்குற பணக்கார பசங்கள ஏமாத்துறது எனக்கு கைவந்த கலை"

குட் பை அருண்.


மனசுக்குள் புழுங்கினான் அருண் எய்ட்ஸ் பயத்தோடு..!!!



Thanks to Mazhi.com

Tuesday, July 10, 2012

பாசிடிவ் Approach

Add caption

மெடிகல் ரெப் வேலைக்கான இண்டர்வியூ நடந்து கொண்டிருந்தது.

கடைகளில் கணக்கெழுதிச் சம்பாதிக்கும் அப்பா, நோயாளி அம்மா, கல்யாணத்துக்காக காத்திருக்கும் தங்கை என்று ஒவ்வொருவராய் நினைவில் வந்து போக... தன்னுடைய முறைக்காக காத்திருந்தான் குமார்.

இண்டர்வியூ முடிந்து வெளியே வந்தவர்கள் ' சம்பந்தமில்லாம கேள்விகேட்கிறாங்கப்பா ' என்று முணுமுணுத்தார்கள்.

ஜி.எம்.கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் குமார் உடனுக்குடன் பதிலைக் கூற... அவர் அவனிடம்...

"மிஸ்டர் குமார்! இண்டர்வியூவுக்கு வந்திருந்த எல்லோரும் சர்ட்டிபிகேட் மட்டும்தான் கொண்டு வந்திருந்தாங்க. நீங்க மட்டும்தான் எப்படியும் இந்த வேலை கிடைச்சிடும்கற தன்னம்பிக்கையில் மத்தியான சாப்பாட்டைக் கூட கையோடு கொண்டு வந்திருக்கீங்க! வெரி பாசிடிவ். இந்த மாதிரி தன்னம்பிக்கை உள்ளவங்களாலதான் எங்க கம்பெனி தயாரிக்கும் மருந்துகளை டாக்டர்களிடம் பேசி மார்க்கெட்டிங் செய்ய முடியும் ".

இண்டர்வியூ!


ராஜ் அண்ட் கோ கம்பெனியில் காலியாக இருந்த ஒரு டைப்பிஸ்ட் பதவிக்கு பத்து பேர் இண்டர்வியூவுக்காக அழைக்கப்பட்டிருந்தனர். அதில் பிளஸ் 2 முடித்ததும் மேலே படிக்க வசதியில்லாததால் டைப்ரைட்டிங் படித்து பாஸ் செய்த கையோடு அப்ளிகேஷன் போட்டிருந்த ஹரியும் ஒருவன்.

எம்.டி. ரூமுக்கு வெளியே ஆறாவது ஆளாக உட்கார்ந்திருந்த ஹரி இன்டர்வியூ முடித்து வெளியே வருபவர்களைக் கூர்ந்து கவனித்து வந்தான். மூன்றாவதாக வந்தவன் "மூணு கேள்வி கேட்டார், பதில் சொன்னேன். பிறகு பேப்பரை கொடுத்து ஒரு லெட்டர் டைப் செய்து தரச் சொன்னார். டைப் அடிச்சா பேப்பரில் ஒண்ணுமே தெரியலை. அந்த நிமிஷம் பார்த்துட்டு அனுப்பிட்டார்" என்றான் அழாத குறையாக.

ஐந்தாவதாக வந்தவனும் அதையே சொல்லிட்டு "ரிப்பன் இல்லாத டைப்ரைட்டரில் எப்படி சார் டைப் அடிக்க முடியும்னு கேட்டேன், வெளியே போகலாம்னு கையால காண்பிச்சார், வந்துட்டேன் " என்று டைப்ரைட்டரில் ரிப்பன் இல்லாத புது தகவலைச் சொல்லிட்டுப் போனான்.

இதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தான் ஹரி.
அவனுடைய முறை வந்து உள்ளே அழைக்கப்பட்டான், அவனையும் ஒரு கடிதம் டைப் செய்து தரச் சொன்னார் எம்.டி.

ஹரி டைப் செய்து கொடுத்த கடிதத்தைப் பார்த்துவிட்டு, அவனுக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கச் சொன்ன எம்.டி.யை வியப்புடன் பார்த்தார் மேனேஜர்.

"இவன் மட்டும் எப்படி ரிப்பன் இல்லாத டைப்ரைட்டரில் கடிதத்தை டைப் செய்தான்னு தானே பார்க்கறீங்க? இவனுக்கும் எல்லோரையும் போலவே இரண்டு பேப்பர் மட்டுமே கொடுத்தேன். டைப்ரைட்டருக்குப் பக்கத்தில் வச்சிருந்த கார்பனை பேப்பர்களுக்கு நடுவில் வச்சு டைப் அடிச்சிருக்கான். மேலே இருக்கற பேப்பரில் ஒன்னும் தெரியாதுன்னாலும் கார்பனுக்கு கீழே இருந்த பேப்பரில் டைப் அழகா பதிஞ்சு கடிதத்தை ரெடி பண்ணிட்டான். இவனை மாதிரி சமயோசிதமா நடந்துக்கறவங்களால்தான் எந்த இடையூறுகளையும் சமாளிக்க முடியும்" என்றார் எம்.டி சிரித்துக்கொண்டே.

சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு !

  ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங...