ஒரு பெரிய
பணக்காரன். அவனுக்கோ மனதில் திருப்தியும் அமைதியும்
இல்லை. பணத்தால் அடையக்கூடிய சுகமெல்லாம் அடைந்த பின்னும்
அவனுக்குள் ஒரு வெற்றிடம்.
தன்
செல்வமனைத்தையும் ஒரு பெட்டியில் வைத்து அங்கு வந்த ஒரு ஞானியைப் போய்ப்
பார்த்தான்.
அவரிடம்,
''சுவாமி, என்னுடைய சொத்து முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு
நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தாருங்கள். ஞானி சிரித்தார்.
அடுத்த கணம்
அந்தப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தார். செல்வந்தனுக்கோ பயங்கர
அதிர்ச்சி.
வாழ்நாள்
முழுவதும் தேடிய சொத்தை ஒரு போலிச் சாமியாரிடம் கொடுத்து ஏமாந்து போய் விட்டோமே
என்ற கவலையுடன் அவரைப் பின் தொடர்ந்து ஓடினான்.
ஞானி எங்கெங்கோ
சுற்றி ஓடி விட்டு மீண்டும் முதலில் இருந்த இடத்துக்கே திரும்ப வந்தார்.
பணக்காரனும்
மூச்சிரைக்க பின்னாலேயே அங்கு வந்து சேர்ந்தான். ஞானி அந்தப் பெட்டியை அவனிடமே திரும்பக் கொடுத்தார்.
அவனுக்கோ மட்டற்ற
மகிழ்ச்சி. பணம் திரும்பக் கிடைத்ததில் நிம்மதி.
இப்போது ஞானி
அவனிடம் சொன்னார், ''இங்கே நீ வருமுன் இந்த பெட்டி உன்னிடம்
தான் இருந்தது. அப்போது அதிலிருந்த செல்வத்தால் உனக்கு
மகிழ்ச்சி இல்லை. அதே பெட்டிதான் உன்னிடம் இப்போது
இருக்கிறது. ஆனால் உன் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சி; நிம்மதி. மகிழ்ச்சியும் நிம்மதியும்
வெளியில் இல்லை நம்மிடம் தான் உள்ளது.''
No comments:
Post a Comment