Total Pageviews

Tuesday, December 20, 2011

பெருமை

துணி வியாபாரம் செய்யும் எனது நண்பனின் கடைக்குச் சென்றிருந்தேன். சூரத்திலிருந்து வந்திருந்த விற்பனை பிரதிநிதி ஒருவர் என் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார். இந்தி தெரிந்த அவர் தமிழை அரையும் குறையுமாக பேசியது என்க்கு சலிப்பை ஏற்படுத்தியது. என் நண்பனுக்கு இந்தியில் சரளமாக பேச வரும், இருந்தாலும் அவருடன் தமிழிலேயே பேசினான். ஒரு வழியாக தனது வியாபாரத்தை முடித்துக்கொண்டு அவர் வெளியேறியதும் என் நண்பனிடம் மெல்ல கேட்டேன்.

 " உனக்குததான் இந்தி நல்லா பேச வருமே பிறகு ஏன் இந்தியுல பேசல!" மெல்லிய புன்னகை ஒன்றை நழுவ விட்டு சொன்னான். 

 " வட நாட்டுலயிருந்து இங்க வந்து தமிழ் மொழிய கத்துகிட்டு நம்ம கிட்ட பேசுறப்போ நான் இந்தியுல பேசியிருந்தா தமிழ் மொழிய இன்னும் கத்துக்கணுங்கற ஆர்வத்த விட்டுடுவார், 

தொடர்ந்து இப்பிடி பேசினா இன்னும் கொஞ்ச நாள்ல தெளிவா பேச ஆரம்பிப்பார்., 

நம்ம தாய் மொழிய வட நாட்டுக்காரங்க பேசுறது நமக்கு பெருமை தானே!" என்ற்போது என் நண்பனைப் பார்க்க எனக்கு பெருமையாக இருந்தது. 

குங்குமம் வார இதழில் வெளிவந்தது

No comments:

Post a Comment

ஒரு பெண்ணுக்கு வலியைக் கொடுத்து அவளைத் தொந்தரவு செய்தால், அவள் உங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் பறித்துவிடுவாள், நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அவள் உங்களை மரணத்தின் தருவாயில் இருந்தும் காப்பாற்றுவாள்"

  தாகம் எடுத்த ஒரு மனிதன் ஒரு கிணற்றுக்குச் சென்றான், அங்கு ஒரு இளம் பெண் தண்ணீர் இறைத்து கொண்டிருந்தாள். அந்த மனிதன் அந்தப் பெண்ணிடம் தாக...