ஊரிலிருக்கும் தனது கொழுந்தனார் வீட்டு கிரகப்பிரவேசம் முடிந்து சென்னை திரும்பிய காயத்ரி வந்ததும் வராததுமாக நச்சரிக்க ஆரம்பித்தாள்.
உங்க அண்ணன் வீட்டுல ஒரு ஏசி இல்ல, பேன் இல்ல, ரெண்டு நாள் தங்குறதுக்குள்ள போதும் போதுமுன்னு ஆயிடிச்சி, இனிமே ஊர்ல எந்த விசேஷம் வந்தாலும் என்னையும் என் குழந்தைகளையும் கூப்பிடாதீங்க!"
தனது வெறுப்பைக் கொட்டிவிட்டு உடை மாற்றச்சென்ற காயத்ரியை வழிமறித்தான் தினேஷ். ஊருல அண்ணன் வீட்டுல தங்குனது உனக்கு வேணுமுன்னா சந்தோஷமில்லாம இருக்கலாம், ஆனா நம்ம குழந்தைங்க ரெண்டு பேரும் அண்ணன் குழந்தைங்களோட எவ்வளவு சந்தோஷமா பழகி பாசத்த பகிர்ந்துகிட்டாங்க தெரியுமா?
ஏசி,பேன் இல்லாதது ஒரு குறையாவே அவங்களுக்கு தெரியல, சந்தோஷங்கறது வசதியப் பார்த்து வந்து சேர்றதில்ல, வசதி இல்ல த இடத்துல கூட நாமதான் சந்தர்ப்பத்த வர வழைச்சு சந்தோஷப்பட்டுகிடணும்!". தினேஷின் வார்த்தைகளை கேட்ட பிறகு காயத்ரிக்கு மீண்டும் வாய் திறக்க மனசு வராமல் ஊரிலிருந்த நாட்களை நினைவு கூர்ந்து தனக்குத்தானே சந்தோஷப்பட்டுக்கொண்டாள்
No comments:
Post a Comment