மருத்துவமனையின் பி.ஆர்.ஓ யார் என வரவேற்பறையில் கேட்டுத் தெரிந்துகொண்டு அவரைப் பார்க்கச்சென்றான் செந்தில்.
`` மேடம்... பி.ஆர்.ஓ கயல்விழிங்கிறது...''
`` நாந்தான், என்ன விஷயம்?''
`` உங்கள பார்த்துட்டு போலாமுன்னுதான் வந்தேன்!'' தயங்கியபடியே சொன்னான் செந்தில்.
`` பார்த்துட்டு போறதுக்கு நான் என்ன பார்க்கா... இல்ல சினிமாவா?'' எரிச்சலாகக் கேட்டாள் கயல்விழி.
`` உங்ககூட கொஞ்சம் தனியாப் பேசணும்!''
``
என்ன?'' முறைத்தாள் கயல்விழி.
`` நான் சிகரெட் பிடிக்கமாட்டேன், டிரிங்ஸ் வாரத்துல ஒருநாள், லேடீஸ் சகவாசம் சுத்தமா கிடையாது!''
`` யோவ், வெளியே போய்யா, வாட்ச்மேன்....'' உரக்க சத்தமிட்டாள் கயல்விழி.
``என்னப்பத்தி சொன்னா எதுக்கு வெரட்டறீங்க?'' பரிதாபத்துடன் கேட்டான் செந்தில்.
``
அதுக்கு எனக்கென்ன அவசியம்!'' மீண்டும் எரிந்து விழுந்தாள்.
`` நேத்து என் அம்மா அப்பா உங்க வீட்டுக்கு வந்து சம்பந்தம் பேசி, நீயும் ஒரு தடவ பொண்ண பார்த்துட்டு வான்னு சொன்னாங்க, அதான் வந்தேன்!''
சட்டென கய்ல்விழியின் முகத்தில் வெட்கம் அமர `` இத முதல்லயே சொல்லியிருக்கக்கூடாதா!'' என்று நெளிய ஆரம்பித்தாள் செந்திலுக்கு அது மிகவும் பிடித்திருந்தது.
No comments:
Post a Comment