நண்பரின் அறையில் தங்கியிருந்தேன். அதிகாலை ஐந்து மணிக்கு அவசரமாக என்னை எழுப்பி இரு சக்கர வாகனத்தில் அவனை ரயில் நிலையம் வரை கொண்டு விடுமாறு கேட்டான்.
நண்பர் வண்டியை ஓட்ட இருவரும் ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டோம், துரதிர்ஷ்டவசமாக வண்டியில் பெட்ரோல் இல்லாமல் வண்டி பாதி வழியில் நின்றது.
வண்டியை சாய்த்து படுக்க வைத்து அது நனைத்திருந்த பெட்ரோலில் அருகிலிருந்த பெட்ரொல் பங்க் வந்து சேர்ந்தோம். பங்க் திறக்கப்படாமல் பூட்டி கிடந்தது. மீண்டும் அடுத்த பங்க் நோக்கி விரைந்தோம் சிறிது தூரம் சென்றதும் வண்டி சுத்தமாய் நின்று போனது.
நண்பன் வண்டியை என்னிடம் தந்துவிட்டு பெட்ரோல் பங்க் திறக்கும்வரை காத்திருந்து பெட்ரோல் அடித்துவிட்டு திரும்பி செல்லுமாறு சொல்லிவிட்டு எதிரில் வந்த பஸ்ஸை கை காட்டி நிறுத்தி ஏறிக்கொண்டான்.
பெட்ரோல் இல்லாத வண்டியை உருட்டிகொண்டு அந்த குளிரில் நடந்தபோது எரிச்சலாக வந்தது.
சட்டென்று அந்த விஷயம் நினைவுக்கு வர அந்த சங்கடமான சூழ்நிலையிலும் நான் வாய் விட்டு சிரித்தேன், காரணம் நண்பன் அவசரத்தில் கெல்மெட்டை கழட்டாமல் அப்படியே வண்டி ஏறியதுதான்.
சிறிது நேரத்தில் நண்பர் தொலைபேசியில் அழைத்தார். அவர் சொன்ன விஷயம் கேட்டு மேலும் சிரித்தேன். பஸ்ஸில் கெல்மெட் தலையில் இருப்பதை மறந்து அப்படியே இருந்துவிட்டாராம் எனக்கு போன் செய்து அலைபேசியை காதில் வைக்க போன போது தான் அவரது தலையில் கெல்மெட் இருப்பதே நினைவுக்கு வந்ததாம்.
பஸ்ஸில் பிரயாணம் செய்யவும் கெல்மெட் அணிய வேண்டுமா என்று சக பிரயாணிகள் அவரை ஒருமாதிரியாகப் பார்த்ததில் கூச்சத்தில் நெளிந்தாராம் எனது நண்பர்.
நன்றி :பாக்யா
No comments:
Post a Comment