Total Pageviews

Tuesday, December 6, 2011

அட‌க்‌க‌த்‌தி‌ல் உ‌ய‌ர்‌ந்தவ‌ர்க‌ள்



கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு குறுகலான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.



யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது. அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து வ‌ழி விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.


அ‌‌ப்போது அந்த யானையுட‌ன் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்த ம‌ற்றொரு யானை இ‌ந்த யானையை‌ப் பா‌ர்‌த்து, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.


அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:

"நான் இடறி ப‌ன்‌றி ‌மீது ‌விழு‌ந்து‌வி‌ட்டா‌ல் பன்றி நசுங்கி விடும். அ‌தி‌ல்லாம‌ல் அது வாலை ஆ‌ட்டி‌க் கொ‌ண்டு வரு‌கிறது. நானோ சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்தா‌ல் நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."


நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

அ‌திக ‌திறமையு‌ம், ஆ‌ற்றலு‌மகொ‌ண்டவ‌ரஅட‌க்க‌த்துட‌னவா‌ழ்வதையு‌ம், ஒ‌ன்று‌மதெ‌ரியாதவ‌‌ர்க‌ளதலை‌‌க்கண‌த்துட‌ன் ‌தி‌ரிவதையு‌மநா‌மபா‌ர்‌த்து‌ள்ளோ‌ம

Thanks to webdunia

No comments:

Post a Comment

தேடுனாலும் கிடைக்காது....

கல்லூரியில் படிக்கும் ஒரு பையன் தன்னுடன் படிக்கும் பெண்ணிடம் ஒரு காதல் கடிதம் வைக்கப்பட்ட புத்தகத்தை கொடுத்தான். அதில் அவன்... "*நீ என்...