Total Pageviews

Monday, December 19, 2011

புகழ்ச்சி

மாதவன் தனி வீடு கட்டிப்போனதிலிருந்து அவனது அப்பாவை அவனது இளைய தம்பி மதுரவன் பார்த்துக் கொண்டான். மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்க்கும் மாதவன் மாதமொருமுறை வீடு திரும்பும்போதெல்லாம் அவனது அப்பா அவனது வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கிவிட்டு புறப்படுவார். 

 மாதவனின் தந்தை வரும்போதெல்லாம் மதுரவனைப் பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பார். தனது தம்பி அப்பாவை நல்லபடியாக பார்த்துக்கொள்கிறான் என்பதைக்கேட்க கேட்க மாதவனுக்கு சந்தோஷமாக இருக்கும். 

அவர் திரும்பிப்போனதும் மாதவனின் மனைவி கேட்டாள். `` ஏங்க, மாசம்தோறும் உங்கப்பா வரும்போதெல்லாம் அவர் செலவுக்கு காசு தர்றீங்க, பணம் தர்ற உங்களப்பத்தி ஒரு வார்த்த சொல்லம எப்பப்பாத்தாலும் உங்க தம்பியப் பத்தியே உயர்வா பேசறாரு, இது நல்லாவா இருக்கு!’’ 

மாதவனின் மனைவி மனசு நொந்தபடியே கேட்டாள். `` நான் காசு குடுக்கிறது வாஸ்தவம் தான், ஆனா எல்லாநாளும் அப்பா யார்கூட தங்கறாரு என் தம்பிகூடத்தானே, அவனப்ப்ற்றி உயர்வா பேசாம வேற யாரப்பத்தி பேசுவாரு!’’ 

அவனது ஒரே பதிலில் வாயடைத்தாள் அவனது மனைவி. `` என்னங்க, மாமா உங்க அண்ணன் வீட்டுக்கு போயிட்டு வந்துட்டாரு இனிமே உங்க அண்ணனப்பற்றித்தான் புகழ்ந்து பேசிகிட்டே இருப்பாரு, அவரு நம்ம கூடத்தானே தங்கறாரு, எப்பவாவது நம்மளப்பத்தி உயர்வா பேசறாரா?’’ 

மதுரவனின் மனைவியும் மனசு நொந்தபடியே கேட்டாள். `` அண்னன் மாசந்தோறும் காசு குடுக்கிறாரு நாம வெறும் சோத்தத்தானே போடறோம், காசு குடுக்கிற அண்ணனப்பத்தி உயர்வா பேசாம வேற யாரப்பத்தி பேசுவாங்க!’’ மதுரவனின் ஒரே பதிலில் வாயடைத்தாள் அவனது மனைவி. 

குங்குமம் 26-06-2011

No comments:

Post a Comment

தேடுனாலும் கிடைக்காது....

கல்லூரியில் படிக்கும் ஒரு பையன் தன்னுடன் படிக்கும் பெண்ணிடம் ஒரு காதல் கடிதம் வைக்கப்பட்ட புத்தகத்தை கொடுத்தான். அதில் அவன்... "*நீ என்...