நண்பனுக்கு ஆபரேசன் என்று கேள்விபட்டு அவனை பார்க்க குஜராத் அக்க்ஷதா மருத்துவமனைக்கு சென்றேன்.
ஆபரேசன் முடிந்து மயக்க நிலையில் படுத்திருந்தான் நண்பன். அவன் கண் விழிக்கும்வரை காத்திருப்போம் என்று வரவேற்ப்பறையில் அமர்ந்து தமிழ் வார இதழ் ஒன்றை படித்துக்கொண்டிருந்தேன்.
என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் " ஆப் சவுத் வாலா" என்று இந்தியில் கேட்டார்.
நான் 'ஆமாம் `என்று தலையாட்டினேன். அவர் முகம் மலர்ந்து தன்னை ஒரு ஆசிரியர் என்றும் தன்னோடு வேலை பார்பவர் ஒரு தமிழர் என்றும் சொன்னார்.
எனக்கு ஆர்வம் அதிகமாகி அந்த தமிழர் எந்த ஊர்காரர் என்று கேட்டேன் அவர் மார்த்தாண்டம் என்று சொன்ன போது நான் உச்சி குளிர்ந்தேன்.
எனது சொந்த ஊருக்கு பக்கத்து ஊர் என்பதால் அவரது அலைபேசி எண் கிடைக்குமா என்றேன். " ஓ தாராளமா" என்றபடி அவரது நம்பரை தந்துவிட்டு, அவருடன் தொடர்பு கொண்டு மருத்துவமனையில் என்னை சந்தித்த விஷயத்தை கூறிவிட்டு அவரது அலைபேசியை என்னிடம் தந்தார்.
நான் அவரிடம் அறிமுகம் செய்து கொண்ட போது குஜராத்தில் சொந்த ஊர்க்கார நண்பர் கிடைத்தார் என்ற மகிழ்சி ஏற்பட்டது . தொடர்ந்து தொடர்பு வெச்சிக்குவோம் என்றபடி அலைபேசியை அவரது நண்பரிடம் தந்தேன்.
"கண்டவங்களுக்கெல்லாம் என்னோட நம்பர எதுக்கு தர்றீங்க" என்று இந்தியில் அவரது நண்பருக்கு கேட்ட குரல் மெல்லமாய் எனக்கும் கேட்டது.
நன்றி :பாக்யா
No comments:
Post a Comment