Total Pageviews

Tuesday, December 20, 2011

சந்தேகம்

தனக்கு வரும் வரன்களையெல்லாம் வீட்டில் அம்மா வேண்டாமென்று ஒதுக்கி விடும்போதெல்லாம் சரஸ்வதிக்கு ஒரு வித கவலை வந்து ஒட்டிக்கொண்டது. 

 எனது சம்பாத்யம் அம்மாவுக்கு தேவை அதனால் மறுக்கிறார்களா என்ற சந்தேகம் மெல்ல எழுந்தது. அதை உறுதி செய்வது என தீர்மானித்தாள். '' 

அம்மா ஆபீஸ்சுல என்கூட வேலை பார்க்குற ஒருத்தர விரும்பறேன் அவரையே கல்யாணம் பண்ணிக்கலாமுன்னு இருக்கிறேன்!" 

அம்மாவின் மனநிலையை புரிந்துகொள்ள அசாத்யமாய் ஒரு பொய்யைச் சொன்னாள் சரஸ்வதி. " கேட்கிறதுக்கு ரொம்ப மகிழ்சியா இருக்கு, உன் ஜாதகத்துல காதல் கல்யாணம் தான் கைகூடுமுன்னு எழுதியிருக்கு அதனாலதான் வந்த வரன்களையெல்லாம் வேண்டாமுன்னு திருப்பி அனுப்பியிட்டேன்!'' 

மகிழ்ச்சி பொங்க சொன்ன தனது அம்மாவை அனியாயமாக சந்தேகப்பட்டுவிட்டோமே என்று கவலை படிந்த முகத்துடன் பார்த்தாள். 

வேலையில் கண்ணாக இருந்ததில் எந்த காதலும் வந்து ஒட்டாமல் போக, ஏன் அம்மாவிடம் ஒரு பொய்யைச்சொல்லி மாட்டிக்கொண்டோம் என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள் சரஸ்வதி 

பாக்யா

No comments:

Post a Comment

பெற்ற தாயை பெண்டாட்டிக்காக விட்டுத் தருபவன் ஆம்பளையே இல்லை.

என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த '#முதியோர்இல்லம்' இருந்து கடிதம் வந்திருக்கு . "உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க"...!!!...