ரம்யாவின் திருமணத்திற்க்கு முந்தின நாள் இன்னொரு தோழி சொன்ன தகவலைக் கேட்டு திருமணத்திற்க்கு போக வேண்டாமென முடிவெடுத்தாள் மேகலா.
`ஏன் போகல' அப்பா கேட்டார்.
ரம்யாவ கல்யாணம் பண்ணிக்கப்போற மாப்பிள்ளை முதல்ல நம்ம வீட்டுக்கு வந்து என்னத்தான் பொண்ணு பார்த்துட்டு போனார். நகை ரொக்கம் ரொம்ப குறைச்சலா இருக்குன்னு அவங்க வீட்டுல வேண்டாம்னு சொல்லிட்டாங்க, ரெண்டு நாள் கழிச்சு மாப்பிள்ளை என்ன சந்திச்சு பெத்தவங்க பேச்ச மீற முடியல, என்ன மன்னிச்சுடுங்கன்னு சொல்லிட்டுப்போனார்.
நாளைக்கு ரம்யா கல்யானத்துக்குப்போயி வாழ்த்துறப்போ மாப்பிள்ளை என்னை பார்த்துட்டாருன்னா ஒரு குற்ற உணர்வு வரலாம், சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல எதுக்கு சங்கடம்' என்ற அவளது பதிலில் சிலிர்த்தார் அப்பா.
No comments:
Post a Comment