Total Pageviews

Tuesday, December 20, 2011

அப்பாவின் ஆசை

இணைய தளத்தில் www.vaangapazhakalam.com என்ற வெப்சைட்டை உலவ விட்டான் மனோகர். 

மறுநாளே மலைபோல் வந்து குவிந்தன மின்ன்ஞ்சல்கள். நிறைய கடிதங்கள் ' பெண்களுடன் பழக ஆசை!' என்று வந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியமானான் மனோகர். 

ஒரு பெண் பெயரில் மின்ன்ஞ்சல் முகவரி உருவாக்கி அதிலிருந்து பெண் எழுதுவதுபோல் ஒருவருக்கு பதில் அனுப்பினான் மனோகர். மறுநாளே உங்களைப்பார்க்க ஆசை, புகைப்படம் அனுப்பவும்' என்று கேட்டு பதில் வந்த்து. மனோகர் சிரித்தான். ' 

இந்த அப்பாவியை கீழ்ப்பாக்கம் அனுப்புவது என்று முடிவு செய்து, வெனிசுலா நாட்டு நடிகையின் புகைப்பட்த்தை வைத்து " நீங்களும் இதுபோல் புகைப்படம் அனுப்பி வைக்கவும்" என்று பதில் அனுப்பினான். எதிர்பார்த்த்துபோல் பதிலும் புகைப்படமும் இமெயிலில் வர யார் அந்த அப்பாவி என்று திறந்து பார்த்து அதிர்ந்தான். 

 அது அவனது அப்பாவின் புகைப்படம்.

No comments:

Post a Comment

தேடுனாலும் கிடைக்காது....

கல்லூரியில் படிக்கும் ஒரு பையன் தன்னுடன் படிக்கும் பெண்ணிடம் ஒரு காதல் கடிதம் வைக்கப்பட்ட புத்தகத்தை கொடுத்தான். அதில் அவன்... "*நீ என்...