Total Pageviews

Tuesday, December 6, 2011

நீங்கள் ஆடுகள் இல்லை. சிங்கக்குட்டிகள்



காட்டில் ஒரு கர்ப்பிணி சிங்கம் இருந்தது. ஒரு ஆட்டு மந்தையைப் பார்த்ததும் அது பசி வேகத்தில் பாய்ந்தது. பாய்ந்த வேகத்தில் சிங்கக் குட்டியை ஈன்றது. ஆனா‌ல் ‌பிரசவ‌த்‌தி‌ன் போது அ‌ந்த ‌சி‌ங்க‌ம் அ‌ங்கேயே உ‌யி‌ரிழ‌ந்தது. 

அ‌ந்தச் சிங்கக் குட்டியோ ஆட்டு மந்தையில் சேர்ந்து கொண்டது. காலப் போக்கில் தானும் ஒரு ஆடு என்று நினைத்துக் கொண்டு அந்த சிங்கக் குட்டி 'மே...மே' என்று கத்தியது. புல் தின்றது, பாய்ந்து வரும் சிங்கங்களைப் பார்த்து பயந்து ஓடியது. தனது உட‌லா‌ல் ‌சி‌ங்கமாக இரு‌ந்த போது‌ம், அது மனதள‌வி‌ல் ஆடாகவே வா‌ழ்‌ந்தது.

ஒரு சிங்கம் இதைக் கவனித்து விட்டது. தனியாக அந்தச் சிங்கக் குட்டியை அழைத்து "நீ ஆடு அல்ல, சிங்கம்" என்று சொன்னது. தன்னைப் போல் கர்ஜனை செய்யச் சொன்னது. ஆனால் அந்த சிங்கக் குட்டியோ, நான் ஆட்டுக் குட்டிதான் என்று மீண்டும் மே...மே என்று கத்தியது.

ஆனா‌ல் அ‌ந்த சிங்கம் விடவில்லை. எ‌ப்படியாவது இ‌ந்த ‌சி‌ங்‌க‌க் கு‌ட்டி‌க்கு உ‌ண்மையை பு‌ரிய வை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று அத‌ற்கான உ‌த்‌தியை யோ‌சி‌த்தது. கடை‌சியாக ஒரு யோசனை ‌பிற‌ந்தத. அந்தக் ‌சி‌ங்க‌க் குட்டியை அழைத்துக் கொண்டு போய் ஒரு குளத்தில் தன் பிம்பத்தைப் பார்க்கச் சொன்னது. அந்தக் குட்டியும் சிங்கமும் ஒரே மாதிரி இருப்பதை அன்றுதான் அந்த ‌சி‌ங்க‌க் குட்டி உணர்ந்து கொண்டது. உடனே தானும் பெரிதாய்க் குரல் கொடுத்து கர்ஜனை செய்தது. 

இந்தக் கதையைச் சொன்ன சுவாமி விவேகானந்தர், "நீங்கள் ஆடுகள் இல்லை. சிங்கக்குட்டிகள். உங்களை நீங்களே ஆடுகள் என்று மனவசியம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். அதை விட்டுவிடுங்கள். நீங்கள் சிங்கங்கள் என்பதை உணருங்கள். அளவிட முடியாத வலிமை உங்களுக்கு உண்டு" என்று போதிக்கிறார். 

உ‌ங்க‌ள் ‌திறமைகளை தொல‌ை‌க்கா‌ட்‌சி‌யிலு‌ம், ‌வீடியோ ‌விளையா‌ட்டுக‌ளிலு‌ம் தொலை‌க்கா‌தீ‌ர்க‌ள்.

Thanks to webdunia

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...