பூமியில் சிலகாலம் தங்கியிருந்தார் கடவுள்.
அவரிடம், 'எனக்கு அது வேண்டும்;
இது வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டே இருந்தனர் மக்கள்.
சலித்து போன
கடவுள், எத்தனையோ இடம் மாறினார்.
ஆனால் தொல்லை ஓயவில்லை. கடைசியாக ஒரு முடிவு செய்தார். மனிதர்கள் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே அது.
ஆனால் தொல்லை ஓயவில்லை. கடைசியாக ஒரு முடிவு செய்தார். மனிதர்கள் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே அது.
தேவர்களிடம் கருத்து கேட்டார்.
"இமயமலைக்கு சென்று விடுங்கள்..." என்றனர் சிலர்.
"அங்கு மனிதர்கள் எளிதாக வந்து விடுவாரகளே" "நிலாவுக்கு செல்லுங்கள்" என்றனர் வேறு சிலர்.
"எப்படியாவது அங்கும் வந்து விடுவார்கள்... ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டும்" என்றார் கடவுள்.
அவர்களின் ஆலோசனை எதுவும் கடவுளுக்கு திருப்தி அளிக்கவில்லை.
கடைசியாக ஞானி ஒருவர் யோசனை தெரிவிக்க கடவுளின் முகம் மலர்ந்தது.
"யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரே இடம் மனிதர்களின் மனம் மட்டுமே" அதற்குள் தங்கி கொண்டால் யாராலும் உங்களுக்கு தொல்லை இருக்காது. என்பது தான் அது.
"கடவுளை வெளியுலகில் மனிதன் தேட, கடவுளோ நெஞ்சினில் குடியிருக்கிறார்".
No comments:
Post a Comment