பையனின் தேர்வு முடிவைப் பார்த்ததும் சாந்திக்கு பகீரென்றது. 400 மார்க்குக்கு
மேல் வரும் என்று எதிர்பார்த்திருந்தாள். ஆனால் 256 மார்க்குதான்
வந்திருந்தது.
வெடித்துச் சிதறிய சாந்தியை கணவர் ஆறுதல்படுத்தினார்.
டென்ஷனாகாத.. இனிமே ஒழுங்கா படிப்பான்!
ஆமா கிழிப்பான், ஏண்டா, அடிக்கடி டி.வி. பார்க்காதே, படிக்கிற வழியைப் பாருன்னு எத்தனை தரம் சொன்னேன்.
பையன் அலட்டிக் கொள்ளவில்லை. தப்பு அவன் மேல இல்லடி, நம்ம மேலதான்!
நாம என்னங்க பண்ணினோம்?
டி.வி. பார்க்காதே, படின்னு அவனைச் சொல்லிட்டு நாம டி.வி. பார்த்துட்டு இருந்தோம். சாயங்காலம் 6 மணிக்கு ஆரம்பிச்சு நைட்டு 10 மணி வரைக்கும் நீ சீரியல் பார்த்துட்டு இருந்தே!

இடையில் நான் நியூஸ் பார்த்துட்டு
இருந்தேன். அவனை எங்கே படிக்க விட்டோம்?
இனிமேலாவது நாம ஒழுங்கா இருப்போம்!
அவனை நல்ல படியா படிக்க விடுவோம் !
மாற்றம் நன்மையில் முடியட்டும்
ReplyDelete