நடைபாதை. ஓர் இளைஞன். கையில் பாட்டில்.
“”இது சுறுசுறுப்பு டானிக்… காலையில் ஒரு ஸ்பூன்… மாலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்… நாள் பூராவும் சுறுசுறுப்பு கிடைக்கும்!”
என்று கூவி விற்றான். நிறைய பேர் வந்தார்கள். வாங்கினார்கள்… சாப்பிட்டார்கள்… சுறுசுறுப்பாகத்தான் இருந்தது. கொடுத்த காசு வீண் இல்லை. மருந்து தீர்ந்ததும் மறுபடியும் அந்த வியாபாரியைத் தேடினார்கள். கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து… அதே வியாபாரி பலூன் விற்றுக் கொண்டிருந்தான். “”அடடா! உங்களை எங்கேயெல்லாம் தேடுவது… அந்த சுறுசுறுப்பு டானிக் இன்னும் தேவை… எங்கே இருந்தீர்கள் இதுவரைக்கும்….?” “”சிறையிலே இருந்தேன்!” ”ஏன்?” ”போலி மருந்து விற்பனை பண்ணினதுக்காக இரண்டு வருடம் தண்டனை!” “”உங்க மருந்து போலி மருந்தா? யார் சொன்னது அப்படி? உங்க மருந்தை சாப்பிட்டு நான் சுறுசுறுப்பு பெற்றது உண்மை!”
“”அப்படி இல்லே! நான் வெறும் தண்ணியிலே உப்பு, மிளகு, சீரகம், வெந்தயத்தைப் பொடி பண்ணி கலந்து வித்தேன்.”
”அப்படின்னா… எங்களுக்கு சுறுசுறுப்பு கொடுத்தது…?” உங்க நம்பிக்கை!நம்பிக்கை தான் வாழ்க்கையின் உந்து சக்தி!”நம்பிக்கையோடு நடைபோடக் கற்றுக் கொண்டால் தோல்வியைக் கண்டு துவண்டு போகவேண்டிய சூழ்நிலை ஏற்படாது ` ` |
Total Pageviews
61,240
Thursday, November 24, 2011
நம்பிக்கைதான் வாழ்க்கை
Subscribe to:
Post Comments (Atom)
மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !
ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...
-
ச னிக்கிழமைதோறும் தனது தாய் வீட்டுக்குப் போக வேண்டும் என்று அடம்பிடிக்கும் தனது மனைவி ஆனந்தியை கோபத்தில் முறைத்தான் தீபக் . வாரம்தோறும் ...
-
நவம்பர் 16 சர்வதேச சகிப்புத் தன்மை தினம். உலக மக்களிடையே சகிப்பு தன்மையை உருவாக்க வேண்டும் உலக மக்களிடையே சகிப்பு தன்மையை உருவாக்க வ...
-
உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா ??? காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள். நிறுவ...
No comments:
Post a Comment