Total Pageviews

Wednesday, November 23, 2011

திவ்யாவிற்கு என்ன ஆயிற்று?



ராகவனுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் தான் ஆகிறது. கோவையில் கம்ப்யூட்டர் கம்பெனியில் சர்விஸ் இஞசினியர் வேலை. அவனும் அவன் மனைவி திவ்யா அவன் அம்மாவும் மட்டுமான சிறு குடும்பம். திவ்யா கம்ப்யூட்டர் கிளாசுக்குப் போகிறாள். பதினோரு மணி முதல் பன்னிரண்டு மணி வரை தான். இன்று அவ்வளவாக சர்விஸ் இல்லை. புது மனைவியோடு ஜாலியாயிருக்க சீக்கிரமே வீட்டிற்கு வந்துவிட்டான்.என்ன பயன்.
        
மணி மூன்றாகிறது இன்னமும் திவ்யா வரக்காணோம். இந்த ஊரில் அவளுக்கு யாரையும் தெரியாது. அப்படியிருக்க எங்கே போயிருப்பாளோ?

ஏப்பா ராகவா மணி மூணாகுது சாப்பிடுப்பா”.
         
நீ வேறே கொஞசம் சும்மாயிரும்மா. டென்சன் பண்ணாதே.”
-அம்மா வேறே அவனது பிரைவசியில் நந்தி மாதிரி.

சார் போஸ்ட்”-என்று ஒரு கார்டை விட்டெறிந்து விட்டுப் போனார் தபால்காரர். அதை எடுத்துப் பார்த்தான் அவனது தங்கை கீதா வியாழக்கிழமை மதுரையிலிருந்து எழுதியது. ஏதோ இன்டர்வ்யூவுக்கு திங்கட்கிழமை 12 மணிக்கு வருவதாய் எழுதியிருக்கிறாள். நான்கு நாட்கழிந்து வந்து சேர்ந்திருக்கிறது.

வாலில் ஆட்டோ சத்தம். திவ்யாவும் தங்கை கீதாவும் இறங்கினார்கள்.

என்ன அண்ணா எப்படியிருக்கே. ம்மா நீ எப்படியிருக்கே உடம்புக்கெல்லாம் பரவாயில்லையா?”     “ யிருக்கு.”

 
ஏம்மா ஒரு நால் நாள் முன்னாடியே லெட்டர் போட்டிருக்கக்கூடாது. அது சரி  உங்க அண்ணிய எப்படி புடிச்சே?”
          

கம்ப்யூட்டர் சென்டருக்கு முன்னாடிதான் வெளியுர் பஸ் ஸ்டாப். இறங்கினதும் அண்ணி நின்னாங்க டைமில்லாத தாலே அவசரமா ஆட்டோ புடிச்சு இன்டாவ்யூக்கு போயிட்டோம்.”
          
அது சரி ஒரு போனாவது பண்ணியிருக்கலாம்.    சாப்பிடலாமவாங்க.”
.
 இரவு. படுக்கையறை. திவ்யா பால் செம்போடு உள்ளே வந்தாள்
 உர்ரென்று உட்கார்ந்திருந்தான் ராகவன்
ஜயாவுக்கு இன்னும் கோபம் தீரலேயா”.

எப்படி தீரும் நீ எங்க போனயோ. எப்படி பதட்டமாயிடுச்சு தெரியுமா?”

ஏங்க கல்யாணமாயி ஆறு மாசந்தா ஆச்சு நமக்குள்ளே. இந்த ஆறு மாச பழக்கத்துக்கே இப்படி பதறறீங்களே உங்கள பெத்து இருபத்தஞ்சு வருசம் வளர்த்த தாங்கம்மா நான் வந்தவுடனே உதாசீனப்படுத்தறீங்க. முதியோர் இல்லம் கொண்டு போய் சேர்க்கணும்ங்கறீங்க இது எப்படி நியாயமாகும்.?”


ந்த வார்த்தையில் ராகவன் ஆடிப்போனான். அப்படி ஒரு கோணத்தில் அவன் நினைக்காததை நினைத்து வெட்கி தலை குனிந்தான்.

No comments:

Post a Comment

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...