Total Pageviews

Tuesday, December 20, 2011

பெருமை

துணி வியாபாரம் செய்யும் எனது நண்பனின் கடைக்குச் சென்றிருந்தேன். சூரத்திலிருந்து வந்திருந்த விற்பனை பிரதிநிதி ஒருவர் என் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார். இந்தி தெரிந்த அவர் தமிழை அரையும் குறையுமாக பேசியது என்க்கு சலிப்பை ஏற்படுத்தியது. என் நண்பனுக்கு இந்தியில் சரளமாக பேச வரும், இருந்தாலும் அவருடன் தமிழிலேயே பேசினான். ஒரு வழியாக தனது வியாபாரத்தை முடித்துக்கொண்டு அவர் வெளியேறியதும் என் நண்பனிடம் மெல்ல கேட்டேன்.

 " உனக்குததான் இந்தி நல்லா பேச வருமே பிறகு ஏன் இந்தியுல பேசல!" மெல்லிய புன்னகை ஒன்றை நழுவ விட்டு சொன்னான். 

 " வட நாட்டுலயிருந்து இங்க வந்து தமிழ் மொழிய கத்துகிட்டு நம்ம கிட்ட பேசுறப்போ நான் இந்தியுல பேசியிருந்தா தமிழ் மொழிய இன்னும் கத்துக்கணுங்கற ஆர்வத்த விட்டுடுவார், 

தொடர்ந்து இப்பிடி பேசினா இன்னும் கொஞ்ச நாள்ல தெளிவா பேச ஆரம்பிப்பார்., 

நம்ம தாய் மொழிய வட நாட்டுக்காரங்க பேசுறது நமக்கு பெருமை தானே!" என்ற்போது என் நண்பனைப் பார்க்க எனக்கு பெருமையாக இருந்தது. 

குங்குமம் வார இதழில் வெளிவந்தது

ஏமாற்றம்

ஊரிலிருக்கும் அப்பாவுக்கு மணியார்டர் அனுப்பி வைத்தால் தாமதமாகப் போய்ச் சேருமென்று கருதி, வங்கியில் அப்பா பெயரில் கணக்கு ஒன்று தொடங்கி டெபிட் கார்டும் வாங்கித்தந்தேன்.

சம்பளம் வாங்கியதும் முதல் வேலையாக அப்பா கணக்கில் பணம் போட்டுவிட்டு தகவல் தெரிவித்தேன். ஏ.டி.எம் சென்டரிலிருந்து பணம் எடுத்துக்கொண்டதாக அப்பாவும் தகவல் தெரிவித்தார்.அடுத்து நான்கு மாதங்கள் தொடர்ந்து வங்கியில் பணம் போட்டும் அவர் எடுக்கவில்லை.

தொலைபேசியில் அப்பாவை தொடர்பு கொண்டு "வங்கியிலிருந்து ஏன் பணம் எடுக்கவில்லை" என்று கேட்டேன். ``முன்னயெல்லாம் மணியார்டர் வரும். நீ பணத்த அனுப்பியிருக்கிற விசயத்த தபால்காரர் வந்து சொல்றப்போ கேக்குற என்க்கு ஒரு சந்தோஷம், 

அந்த பணத்துலயிருந்து அஞ்சோ பத்தோ இனாமா தபால்காரருக்கு தர்றப்போ அவர் முகத்துல தெரியுற மகிழ்ச்சி

 இதெல்லாம் டெபிட் கார்டுல பணம் எடுக்கறப்போ கிடைக்கலப்பா என்ற போது அவரது ஏமாற்றம் புரிந்தது. 


குங்குமம் வார இதழில் வெளிவந்தது

பீடி புகைப்பதை நிரந்தரமாக நிறுத்த

மடியிலிருந்த பீடிகட்டிலிருந்து ஒன்றை உருவி பற்றவைத்து, பீடிக்கட்டை தலைமாட்டில் வைத்துவிட்டு தூங்கிப்போனான் தாசையா. 

விடிந்ததும் புகை பிடிக்க பீடிக்கட்டை துளாவியபோது அது இல்லாமல் குழம்பிப்போனான். மறுநாள் ராத்திரி வழக்கம்போல் பீடி புகைத்துவிட்டு தூங்குவதுபோல் நடித்தான். 

ஒரு மணி நேரம் கழிந்ததும் அவனது மகன் ரமேஷ் பூனை நடை நடந்து வந்து பீடிக்கட்டை மெல்ல எடுத்தான். சட்டென்று அவனைப் பிடித்து கன்னத்தில் பளாரென்று அறைந்தான் தாசையா. '' ஏண்டா இந்த வயசுல உனக்கு பீடி கேக்குதா உன்ன...'' மீண்டும் அடிக்க கையை ஓங்கினான் தாசையா. '' அடிக்காதீங்கப்பா, 

விடிஞ்சா பீடிகட்ட எடுத்துகிட்டு டாய்லெட் போவீங்க, உள்ளேயிருந்து பீடி குடிப்பீங்க, அப்பறமா நான் போகும்போது உள்ளே ஒரே பீடி நாத்தமா இருக்கும், 

அதான் உங்க பீடிகட்ட எடுத்து ஒளிச்சு வெச்சேன்!'' மகன் சொன்னது சுளீரென்று வலிக்க பீடி புகைப்பதை நிரந்தரமாக நிறுத்துவது என அந்த நிமிடமே தீர்மானித்தான் தாசய்யா

தவறு -பெற்றோரை அழைத்து வரவும்

தனது மகனின் டைரியில் "பெற்றோரை அழைத்து வரவும்" என்ற வரிகளைப் படித்ததும் சிவாக்கு சைவ நாடிகளும் ஸ்தம்பித்தன. " ஏண்டா, ஸ்கூல்ல என்னடா தப்பு செஞ்ச?" எட்டாவது வகுப்பில் படிக்கும் தனது மகனை முறைத்தபடியே கேட்டான் சிவா. 

" நான் எதுவும் தப்பு செய்யல!" முகத்திலடித்தார் போல் பதிலளித்தான் அவனது மகன். சிவா அவனது மகன் படிக்கும் பள்ளிக்கூடம் சென்று வகுப்பாசிரியரைச் சந்தித்து விபரம் கேட்டார், தனது மகன் என்ன தப்பு செஞ்சானோ என்ற கவலையோடு.

 " சார் உங்க பையன் அவன் கூடப்படிக்கிற மாணவிகள்கிட்ட பேசுறப்போ கோபம் வந்தா ' மூதேவி, பேந்தை, கஸ்மாலம், சாவு கிராக்கியின்னு ரொம்ப மோசமா திட்டுறான், நீங்க தான் அவனுக்கு புத்திமதி சொல்லி திருத்தணும்!" அந்த வகுப்பாசிரியர் அமைதியாகச் சொன்ன போது சிவாக்கு அது சுருக்கென்றிருந்தது.

 தனது மகன் முன்னிலையில் தனது மனைவியை திட்டும் வார்த்தைகளை கேட்டு அவன் வகுப்பில் படிக்கும் மாணவிகளை திட்டுகிறான், திருந்த வேண்டியது என் மகனல்ல, நான்' என்றபடி தலைகுனிந்து வீட்டுக்கு திரும்பினான்

இத முதல்லயே சொல்லியிருக்கக்கூடாதா!''

மருத்துவமனையின் பி.ஆர்.ஓ யார் என வரவேற்பறையில் கேட்டுத் தெரிந்துகொண்டு அவரைப் பார்க்கச்சென்றான் செந்தில். 

`` மேடம்... பி.ஆர்.ஓ கயல்விழிங்கிறது...'' `` நாந்தான், என்ன விஷயம்?''

 `` உங்கள பார்த்துட்டு போலாமுன்னுதான் வந்தேன்!'' தயங்கியபடியே சொன்னான் செந்தில். `` பார்த்துட்டு போறதுக்கு நான் என்ன பார்க்கா... இல்ல சினிமாவா?'' எரிச்சலாகக் கேட்டாள் கயல்விழி. `` உங்ககூட கொஞ்சம் தனியாப் பேசணும்!'' ``

என்ன?'' முறைத்தாள் கயல்விழி. `` நான் சிகரெட் பிடிக்கமாட்டேன், டிரிங்ஸ் வாரத்துல ஒருநாள், லேடீஸ் சகவாசம் சுத்தமா கிடையாது!'' `` யோவ், வெளியே போய்யா, வாட்ச்மேன்....'' உரக்க சத்தமிட்டாள் கயல்விழி. 

``என்னப்பத்தி சொன்னா எதுக்கு வெரட்டறீங்க?'' பரிதாபத்துடன் கேட்டான் செந்தில். `` 

அதுக்கு எனக்கென்ன அவசியம்!'' மீண்டும் எரிந்து விழுந்தாள். 

 `` நேத்து என் அம்மா அப்பா உங்க வீட்டுக்கு வந்து சம்பந்தம் பேசி, நீயும் ஒரு தடவ பொண்ண பார்த்துட்டு வான்னு சொன்னாங்க, அதான் வந்தேன்!'' 

சட்டென கய்ல்விழியின் முகத்தில் வெட்கம் அமர `` இத முதல்லயே சொல்லியிருக்கக்கூடாதா!'' என்று நெளிய ஆரம்பித்தாள் செந்திலுக்கு அது மிகவும் பிடித்திருந்தது.

இன்ஸ்பெக்டர் அங்கிள்?

கோவை செல்லும் தனியார் சொகுசு பேருந்தில் மனைவியை அனுப்பிவைத்துவிட்டு நான் ஆபீஸ் போன அரை மணி நேரத்தில் மனைவியிடமிருந்து மிஸ்ட் கால். 

உடனடியாக என் மொபையிலிருந்து தொடர்பு கொண்டேன். ''ஹலோ இன்ஸ்பெக்டர் அங்கிளா ? நல்லாயிருக்கீங்களா அங்கிள்? எங்கேயிருந்து பேசறீங்க? சேலத்துலயிருந்தா? சேலத்துல என்ன பார்க்க வர்ரீங்களா, வாங்க அங்கிள் பஸ் சேலம்கிட்டே வரும்போது உங்களுக்கு கால் பண்றேன் தாங்ஸ் அங்கிள், மாமிய கேட்டதாச் சொல்லுங்க!'' என்று பேசி இணைப்பை துண்டித்தாள் என் மனைவி. 

எனக்கு எதுவும் புரியவில்லை . மறுபடி அவள் கோவை போய் சேர்ந்தபின் ராத்திரி ஒன்பது மணிக்கு போன் செய்தாள். '' என்னங்க பஸ்ஸுல எனக்கு பின் ஸீட்டுல உட்கார்ந்திருந்தவன் சரியில்லை, 

ஜாடை மாடையா பேசுறதும், டீஸ் பண்றதுமா இருந்தான் அதான் அப்படி பேசினேன் அதுக்கப்புறம் அவன் கப்சிப்னு ஆயிட்டான் நானும் தொந்தரவு இல்லாம நிம்மதியா வீடு வந்து சேர்ந்தேன். அவளது சாதுர்யம் கண்டு அசந்து போனேன்

ரயில் வண்டியில் பிஸ்கெட்

ரயில் வண்டியில் நானும் என் மனைவியும் அமர்ந்திருக்க,எதிரில் இரண்டு வயது குழந்தையும் அதன் பெற்றோரும் அமர்ந்திருந்தனர். 

குழந்தை என் மனைவியிடம் ஒட்டிக்கொள்ள, தனது கைப்பையிலிருந்து பிஸ்கெட் பாக்கெட் ஒன்றை எடுத்து குழந்தையிடம் நீட்டவும், நான் 'தராதே" என்று பார்வையால் அதட்டினேன். 

அது அவளுக்கு சங்கட்த்தை ஏற்ப்படுத்த, முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருந்தாள். அடுத்த நிறுத்த்த்தில் குழந்தையும் பெற்றோரும் இறங்கியதும் என் மனைவி கேட்டாள். 

 " குழந்தை எவ்வளவு அன்பா என்கூட பழகிச்சு, ஒரு கவர் பிஸ்கெட் தந்தா குறைஞ்சா போயிடுவேன்!" சற்று கோபமாகவே கேட்டாள் என் மனைவி. 

" ரயில் பயணங்கள்ல சாப்பிடுற பொருள்ல மயக்க மருந்து தடவிக் குடுத்து பணத்தையும் பொருளையும் திருடிகிட்டு போற இந்தக் காலத்துல, நீ பிரியமா பிஸ்கெட் தரப்போயி அதுல மயக்க மருந்து தடவியிருக்குமோன்னு ஒரு நிமிஷம் குழந்தையோட அப்பா அம்மா சந்தேகப்பட்டுட்டா 

நிலமை என்னாகும் யோசிச்சு பாரு, அதான் தராதேன்னு தடுத்தேன்!" 

என்ற போது அவள் முகத்தில் பரவிக்கிடந்த கோபம் விலகி புன்னகை படர ஆரம்பித்த்து

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...