Total Pageviews

Tuesday, November 22, 2011

தாய் மனம்


குழாயடியில் தண்ணீர் பிடிக்க குடத்துடன் வந்தாள் சரோஜா.அங்கு அவளது பரமவிரொதி பொன்னுத்தாயி தண்ணிர் பிடித்தபடி நின்றிருந்தாள்.

நெருப்பு வைத்தால் சட்டென்று பற்றிக்கொள்வதைப்போல இருவரும் இருக்கும் இடத்தில் சண்டை தானாய் பற்றிக்கொள்ளும். அன்றும் வாய்ச்சண்டை பலமாகி வார்த்தை பிரயோகங்களில் அனல் தெறித்துக்கொண்டிருந்தது.

பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய சுரேஷ் தனது தாயார் சரோஜாவைத்தேடி குழாயடிக்கு வந்து அங்கு நடக்கும் சண்டையை வேடிக்கை பார்த்தபடி நின்றான்.

சுரேஷ்சைப்பார்த்ததும் பொன்னுத்தாயி சமாதானமாகி மேற்க்கொண்டு சண்டை போடுவதை நிறுத்திக்கொண்டாள். சரோஜா விடாமல் வாய் வலிக்கும்வரை திட்டி தீர்த்துவிட்டு சுரேஷ்சையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டாள்.

`` ஏன் பொன்னுத்தாயி அவ இம்புட்டு பேசறா கேட்டுகிட்டு சும்மா நிக்கற, பதிலுக்கு நாலு வார்த்த பேச வேண்டியதுதானே!’’ அவளோடு தண்ணீர் பிடிக்க வந்த பாக்ய்ம மெல்லக்கேட்டாள்.

`` இதுக்கு முன்னால எங்க ரெண்டு பேருக்கும் சண்டை நடந்தப்போ அவ பேச்சுக்கு நான் தாழ்ந்து குடுக்கல, அந்த கோவத்த அவ புள்ளமேல காட்டி புள்ளய அடிச்சுபுட்டா, இண்ணைக்கு அதுமாதிரி நடந்துடக்கூடாதுன்னுதான் நான் தாழ்ந்து போயிட்டேன்!’’ சொல்லிவிட்டு குடத்தை தூக்கிக்கொண்டு நடந்த பொன்னுத்தாயியை ஆச்சரியமாகப் பார்த்தாள் பாக்யம்.

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...