கோபிக்கு காலையிலேயே இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை.
எப்போதும் போல ஆயிரம் எடுத்து வைத்தான். நூறு நூறாக பிரித்தான்.
பின் எப்பவும் போல குளித்து விட்டு, கடைக்கு போனான். கடையில் சென்று பார்த்த பின் தான் ஒன்பது நூறுகள் மட்டும் இருப்பது தெரிந்தது.
இது என்றுமே நடந்ததில்லையே! இன்று எப்படி? என்ற கேள்வி அவனைக் குடந்தது. ஒரு வேளை நமது கணக்கு தப்பாக இருக்குமோ. இல்லையே... மொத்தம் ஆயிரம்..பத்து நூறுகள் இதுதானே வழக்கமான கணக்கு. தப்பாக வாய்ப்பேயில்லையே. ஒருவேளை மகன் ஆனந்து எடுத்திருப்பானோ?
அவனக்கு இந்த வயதில் இந்த நூறு அவசியம் இல்லையே. அதனால் அவனுக்கு ஒரு உபயோகமும் இல்லை.சே..வெள்ளிக் கிழமையும் அதுவுமா இப்படி நடக்கனும்..என்ன செய்ய"என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு பரிச்சயமான குரல் கேட்டது. என்னங்க.."
பார்வதி அவன் மனைவி அழைத்தாள். என்ன.." என்றான் கோபி. ஒரு விடயம் சொல்றேன்..கோவிக்காதீங்க" சீக்கிரம் சொல்லு..நானே ரொம்ப குழப்பமாயிருக்கேன்" ஏங்க என்ன ஆச்சு" வழக்கமா இருக்கிற பத்து நூறுல இன்னக்கி ஒன்னு காணோம்..அதான்" அதாங்க நானும் சொல்ல வந்தேன். இன்னக்கி வெள்ளி கிழமையில்லையா. குளிச்சிட்டு வந்து பார்த்தா தலைல வைக்க பூ இல்லை. அதான் நீங்க வாங்கி வச்ச ஆயிரம் பூவிலிருந்து ஒரு நூறு எடுத்துகிட்டேன். உங்க கிட்ட சொல்ல வரதுக்குள்ள நீங்க கடைக்கு வந்துட்டீங்க. அதான் நானே நூறு பூவ வாங்கிட்டு கடைக்கு வந்துட்டேன்"
ஒரு நிம்மதி பெரு மூச்சோடு அவள் வாங்கி வந்த பூவை எடுத்துக் கொண்டான் கோபி.