இரண்டு பட்டாம்பூச்சிகள் காதலித்தன. யாருக்கு இன்னொருவர் மேல் நேசம் அதிகம் என்பதில் இருவருக்கும் போட்டி.
ஒரு தடாகத்திலிருந்து தாமரையைக் காட்டி, “நாளை காலை யார் இதன் மீது முதலில் அமர்கிறார்களோ அவர்களுக்குத்தான் அதிக நேசம்” என்று தீர்மானித்தன.
மறுநாள் காலை, தாமரை மலர்வதற்கு முன்பாகவே ‘படப’ வென சிறகடித்து வந்த ஆண் பூச்சி ஆவலோடு காத்திருந்தது.
தாமரை மலர்ந்து அடுத்த விநாடி அதில் அமர்ந்தது. அதிர்ந்தது. தாமரைக்குள்ளே பெண் பட்டாம்பூச்சி செத்துக் கிடந்தது.
தன் அன்பை உணர்த்த முதல் நாள் மாலையே வந்து அமர்ந்து கொண்ட அந்த பட்டாம்பூச்சி, தாமரை மூடிக் கொண்டதால் மூச்சுத் திணறி இறந்தது. அந்த வண்ணத்துப் பூச்சியின் நேசம் தான் தாமரையின் வாசமாய் இன்று வரை வாழ்கிறது.
No comments:
Post a Comment