"ஜாமிட்டிரி பாக்ஸ் பென்சில் பாக்ஸ் ரெண்டுல ஏதாவது ஒண்ணு வாங்கு" அடம்
பிடிக்கும் தனது மகன் ஜானுவிடம் அமைதியாய் சொன்னார் சீனிவாசன்.
``முடியாது எனக்கு ரெண்டும் வேணும்!'' என்று மறுபடியும் அடம் பிடித்தான் ஜானு.
சீனிவாசனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வர அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தார்
அழுகையும் ஏமாற்றமும் கன்னத்தில் வாங்கிய அடியும் அவனை உலுக்க அன்றைய இரவு
சங்கடத்தோடு நகர்ந்து போனது.
மறுநாள் காலை பள்ளிக்கூடம் போக தயாராகையில்
ஜானுவுக்கு தலை சுத்துவதுபோல் தோன்ற தனது ஞாபசக்தியை மொத்தமும் இழந்து நின்றான்
ஜானு.
அவனை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்கரிடம் காட்டி பதட்டமானார்
சீனிவாசன்.
"ஜானுவுக்கு வந்திருக்கிறது டிஸ்ஸோஸியேட் அம்னீஷியங்கிற வியாதி, இது மன
அழுத்தத்தாலயும், பயத்தாலயும் வர்ற நேய், மூணு மாசம் தொடர்ந்து சிகிட்சை
எடுத்தா இழந்த ஞாபகசக்திய திரும்ப கொண்டு வந்துடலாம் அதுக்கு
முப்பதாயிரத்துக்கு மேல செலவாகும்"
டாக்டர் சொல்லி முடித்த போது ஐம்பது ருபாய்
பென்சில் பாக்ஸ் வாங்கி தராமல் போனதற்க்கு இத்தனை பெரிய செலவா என்று மயங்கி
சரிந்தார் சீனிவாசன்
நன்றி :பாக்யா