Total Pageviews

Monday, November 23, 2015

புதையல் !



ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேன்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருன்ட்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.

முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா "இரண்டடி" என்று சொல்வதற்கு பதிலாக "ஓரடி" என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை.

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது.

'இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும்' என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே!

அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் 'சரி.. தோண்டியது வீணாக வேண்டாம்' என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

பிரச்சனைகள் தீர வழி !



குருவும் சீடர்களும் காட்டு வழியே பயணம் செய்தனர்.

அப்போது குரு தன் சீடர் ஒருவரிடம் அதோ அந்த செடியை பிடுங்கு என்றார். சீடர் உடனே பிடிங்கி எறிந்தார்.

சிறிது தொலைவு சென்றதும், முன்பை விட சற்று பெரிய செடியை காட்டி அதை பிடுங்கு என்றார் குரு.
மற்றொறு சீடர் வெடுக்கென பிடிங்கி எறிந்தார்.
கொஞ்ச தூரம் குருவும் சீடர்களும் நடந்தனர். இப்போது குரு ஒரு சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த செடியை காட்டி பிடுங்கு என்றார்.

முதலாமவர் முயன்றார் முடியவில்லை. மற்றொறு சீடர் முயன்றார், முடியவில்லை, இப்படியா எல்லா சீடர்களும் முயன்று முடியவில்லை.
எங்களால் முடியவில்லை என்றனர்.

குரு சொன்னார்-பிரச்சினைகளும் இந்த செடியை போல தான் என்று.புரியாத சீடர் ஒருவர் , அது எப்படி செடியும் பிரச்சினையும் ஒன்றாகும் குரு என்றார்.

சிரித்தபடியே , சிறிய செடியை உங்களால் பிடுங்க முடிந்தது . ஆனால் சற்றே பெரியதான செடியை பிடுங்க முடியவில்லை. அது போல பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாம் ,
பிரச்சினைகள வளரவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது என்றார்.

சிங்கமாய் இரு. நாயைப் போல இராதே!



ஞானியைச் சந்தித்த பக்தன் ஒருவனிடம் சிங்கமாய் இரு. நாயைப் போல இராதே! என சுருக்கமாக அறிவுரை கூறினார். 

அதன் உள்ளர்த்தம் விளங்காத பக்தன், ஞானியையே விளக்கம் தர வேண்டினான்.

ஒரு சிங்கத்தின்மீது அம்பு எய்யப்படுமானால் அது அம்பை பொருட்படுத்தாமல், எய்தவனை நோக்கியே பாயும். ஒரு நாயின் மீது எதையாவது வீசி எறிந்தால், அது எறியப்பட்ட பொருளை நோக்கியே ஓடும். எறிந்தவனைப் பற்றிக் கவலைப்படாது.

அதுபோல் வாழ்வில் கஷ்டங்களையும் பிரச்னைகளையும் எதிர்கொள்ள நேரும்போது சிங்கத்தைப்போல் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், அதை அளித்த இறைவனைப் பற்றி நினைக்க வேண்டும். 

பிரச்னைகளைத் தீர்க்கும் வழியையும், வலிமையையும் எனக்குத் தர வேண்டும் என அவரிடம் பிரார்த்திக்க வேண்டும். அதை விடுத்து நாயைப் போல் பிரச்னைகள் பின்னே ஓடக்கூடாது! 
 என ஞானி கூற, தெளிவு பெற்றான் பக்தன்.

இறைவனைச் சென்று அடைந்த பழங்கள்



நீ எனக்குக் கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன்; ருசியாக இருந்தது
 
 ஒரு செல்வந்தர் இருந்தார்.ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார்.
 
ஏழைப் பணியாள் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலை யிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு விட்டான்..
 
மீதிப் பழங்களை கோவிலில் கொடுத்தான். அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார்.கனவில் இறைவன் வந்து நீஎனக்குக் கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன்;ருசியாக இருந்தது என்றான்.
 
செல்வந்தனுக்கு மிகக் கோபம் வந்தது. ஒரு குலை பழம் கொடுத்திருக்க இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப்பட்டான்.
மறு நாள் காலை அந்தப் பணியாளைக் கூப்பிட்டு விசாரித்தான். 
 
அவன் இரண்டு பழங்களைப் பசியினால் தான் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு, மீதிக் குலையைக் கோவிலில் கொடுத்து விட்டதைச் சொன்னான்.

 செல்வந்தனுக்குப் புரிந்தது .அந்த ஏழை சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று!


Wednesday, November 4, 2015

குடிகாரன் !


ஏழை...





பேரரசன் ஒருவன் அடுத்த நாட்டைக் கைப்பற்ற நினைத்தான்.

 பெரும்படையுடன் பனி படர்ந்த மலைகளைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அங்கே துறவி ஒருவர் இடுப்பில் கோவணத்துடன் தவம் செய்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த பேரரசன் அந்தத் துறவியின் மீது இரக்கப் பட்டான்.

இந்தக் குளிரில் இவர் மேலாடை இன்றி நடுங்குவாரே. இவருக்கு உதவி செய்ய வேண்டும்' என்று நினைத்தான் அவன். தன் மேலாடையைக் கழற்றி அவர் மீது போர்த்தினான்.

விழித்த துறவி, ""தாங்கள் தந்த மேலாடை எனக்கு வேண்டாம். என்னை விட ஏழை யாருக்காவது தந்து விடுங்கள்!'' என்றார்.

கோவணத் துணியைத் தவிர இவருக்கு என்று சொந்தம் ஏதும் இல்லை, இவரை விட ஏழையான மனிதர் இந்த உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது' என்று நினைத்தான் அவன் உங்களை விட ஏழையை நான் எங்கே காண்பேன்?'' என்று கேட்டான்.

துறவி அவனைப் பார்த்து, ""நீ யார்? இவ்வளவு பெரும்படையுடன் எங்கே செல்கிறாய்?'' என்று கேட்டார்.

பேரரசன் நான். என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. பக்கத்து நாட்டைக் கைப்பற்றுவதற்காகப் பெரும்படையுடன் செல்கிறேன்!'' என்று பெருமையுடன் சொன்னான். உன்னிடமே ஏராளமான செல்வம் இருக்கும்போது, ஏன் பக்கத்து நாட்டின் மீது படை எடுக்கிறாய்?''

அந்த நாட்டுச் செல்வமும் சேர்ந்தால், நான் இன்னும் பெரிய செல்வனாகி விடமாட்டேனா? என் ஆணை அந்த நாட்டிலும் செல்லுமே!'' என்றான் அவன்.

இருக்கின்ற செல்வம் போதாது, இன்னும் வேண்டும் என்று நினைக்கிறாய். நீதான் உண்மையான ஏழை... 

நீயே போர்வையை வைத்துக் கொள்!'' என்று நீட்டினார் அவர். தலை கவிழ்ந்த அவன் படையெடுக்கும் எண்ணத்தை விட்டுவிட்டு நாடு திரும்பினான்.

 Thanks to R.P.Karthik

Saturday, July 11, 2015

சென்னையில் இப்படி இருந்த தான் வசதியா வாழ முடியும் !





கிராமத்தில் இருந்து சென்னை அடுக்கு மாடிக்கு ....

சென்னையில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன் தன்னுடைய கிராமத்திற்கு சென்று அவனின் அப்பாவிடம் நான் சென்னையில் ஒரு வீடு வாங்க போகிறேன் .. ரூ. 5 லட்சம் பணம் கேட்டான் , அதற்கு அவர் இன்னும் உன்னக்கு திருமணமே ஆகவில்லை அதற்குள் ஏன் அவசரம் என்றார் .இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் வாங்கிவிடலாம் பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம் தேவைப்படும் ... தினம் தினம் விலை ஏறி கொண்டேபோகிறது என்றான் ... 

யோசித்த அப்பா சரியான முடிவு தான் .. ஆனால் நான் ஒரு விவசாயி உன்னை படிக்க வைக்க வாங்கிய கடனை உண் சம்பளத்தில் தான் அடைக்க ஆரம்பித்து இருகின்றோம் . திடீரென்று 5 லட்சம் கேட்டால் எப்படி??? நமது விவாசய நிலத்தில் ஒரு பகுதியை விற்றுவிட்டு இங்கு வாங்கிய கடனை அடைத்துவிட்டு மீதம் உள்ள பணத்தில் சென்னையில் வீடு வாங்கலாம் என்றான் ...

5 லட்சம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள தொகைக்கு என்ன பண்ணுவ என்று கேட்க .. மகன் -அதை வங்கி லோன் தரும் ..நாம் அதை மாதம் தவனை முறையில் 20 வருஷதிருக்கு செலுத்தலாம் என்றான் ... எந்த மாதிரியான வீடு எப்டி இருக்கும் என்று கேட்க .. 300 வீடு கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு ,சகல வசிதிகளும் இருக்கும் ..அடுக்குமாடி என்றவடுன் அவர் முகம் மாறியது .. ஆனால் மகன் ஆசைகேற்ப ஒரு பகுதி விவசாய நிலத்தை விற்று வீடு வாங்க பணம் கொடுத்தார் ..
வீடு வாங்கிய பின்பு அப்பாவை சென்னை வாருங்கள் என்றான் .. அவரும் புதிய வீட்டை பார்க்க மிகுந்த ஆசையோடு வந்து அடைந்தார் ...ஒவ்வொரு வீட்டுக்கும் நல்ல இடைவெளி விட்டே பார்த்து பழகிய மனிதன் இப்படி ஒரு வீட்டை பார்த்து அசந்து நின்றார் .. 

உள்ளே சென்று 900 சதுர அடி வீட்டை பார்த்து இதை வாங்கவா நம்மக்கு சோறு போட்ட நிலத்தை விற்க சொன்ன என்றார் ....இது எல்லாம் உங்களுக்கு புரியாது இங்க அப்டிதான் ...என்னோட லைப் சென்னையில்தான் இன்னிமே நம்ம ஊருக்கு விசேசத்துக்கு மட்டும் தான் வர போறேன் .. இங்க தனி வீடு எல்லாம் வாங்க முடியாது அதுக்கு கோடி கணக்குல பணம் வேணும் ...பேசாம தூங்குங்க வந்தது அசதியா இருக்கும் ...மனம் கேட்காமல் உறங்கினர் ....
மாலை வேலையில் வீட்டை விட்டு வெளியே வந்தார் .. மற்ற வீடுகள் அனைத்தும் உள்ளே பூட்ட பட்டு இருந்தது ... கீழ இறங்கி வந்தவர் சில பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளை பூங்காவில் விளயாட வைத்து கொண்டு இருந்தார்கள் ... இவருக்கு மனதில் ஒரு சந்தோஷம் அதை பார்த்த படி நின்று கொண்டுஇருந்தர் ...பக்கத்தில் வந்த செக்யூரிட்டி அய்யா நீங்க சரவணன் சார் அப்பாவா என்றான்... அமாம் என்றார் .. சார் சொல்லிட்டு தான் போனாரு ... வாங்க சார் டீ சாபிடலாம் என்றான்... சரி என்று நகரும் போது ஏன் பா இங்க யாருமே ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்க மாட்டாங்களா எல்லாம் வீடு உள்ள பூட்டிகிறாங்க ???? 

அது எல்லாம் அப்படிதான் அய்யா ... எல்லாத்துக்கும் நிறைய வேலை ...காலையில ஆரம்பிச்சு நைட் வரைக்கும் .. பல வீட்ல கணவன் மனைவி ரெண்டு பேரும் வேளைக்கு போறாங்க ... அவுங்க சின்ன பசங்கள பக்கதுல இருக்க ஹோம் ல விட்ருவாங்க .. நைட் யாரு முதல வரங்களோ அவுங்க கூட்டிட்டு வருவாங்க ...பெத்த புள்ளைய யாருகிட்டயோ விட்டு போவாங்கள ??? ஏன் அவுங்க அப்பா அம்மா எல்லாம் எங்க வர மாட்டங்கள ??? அதுவா இவங்கு இருக்க பிஸில ... பெதவுங்கள பார்க்க முடியாதுனு ....ஒன்னும் அவுங்க சொந்த ஊர்ல விட்ருவாங்க ..இல்லாட்டி முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்ட்ருவங்க .. இதை கேட்ட ஆச்சிரியத்தில் நின்று கொண்டு இருக்க .. இதோ போராறே சேகர் சார் உங்க வீட்டுக்கு எதிர்த்த வீடு தான் இப்போ கூட இவர் பையன அங்க இருந்து தான் கூட்டிட்டு வரறாரு ...

திகைத்து நின்ற பெரியவர் .. தான் மகனிடம் ஏதும் கேட்காமல் ஒரு வாரம் பல்லை கடித்து கொண்டு கடந்தார் ...ஒரு நாள் மாலை கீழே நின்று கொண்டு இருக்கும் போது .. பக்கத்தில் வந்த சேகரை பார்த்தார் ... என்ன தம்பி ஆச்சிரியமா இருக்கு ..இன்னக்கி வேலை இல்லையா ?? இல்ல அய்யா .. லீவ் போட்டுட்டேன் ... எதுவுமே பிடிக்கலே ... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு ... ஓஹோ சரி சரி ... எங்க உங்கள் மனைவி என்றார் ... அவளுக்கு செகண்ட் ஷிபிட் நைட் 12 மணி ஆகும் .. அதுவரைக்கும் நான் பையன பார்த்துக்குவேன் ...

 அப்புறம் கலையில நான் வேளைக்கு போயிருவேன் ... அவ வீடு வேலையெல்லாம் முடிச்சுட்டு பையன பக்கத்துக்கு ஹோம் ல விட்டுட்டு வேளைக்கு போய்டுவா என்றான் சேகர் ... அப்போ நீங்க ரெண்டு பேரும் பேசிக்கவே மாட்டிங்கள ??? சண்டே மட்டும் தான் பேச முடியும் அதுவம் அவளுக்கு முன்றாவது ஷிபிட் நைட் 10 மணிக்கு போய் கலையில் 6 மணிக்கு வருவா .. அப்போ ஒரே தூக்கம் தான் .. சாய்ந்தரம் எதாவது ஹோட்டல் போய்ட்டு சாப்பிட்டு வருவோம் என்றான் ... எதுக்கு பா இப்டி கஷ்ட படனும் ??? இப்படி இருந்த தான் இங்க வாழ முடியும் .. அதற்கு அந்த பெரியவர் .. நீங்க சொல்றது தப்பு இப்படி இருந்த தான் வசதியா வாழ முடியும் அப்டி சொல்லுங்க .. என்றார் .. அதை கேட்டவுடன் செவியில் அறைந்தது போல இறந்தது சேகருக்கு ...

அடுத்த நாள் தான் மகனிடம் நான் ஊருக்கு போறேன் பா என்றார் பெரியவர் ..என்ன அப்பா இவளவு அவசரம் ....ஒன்னும் இல்ல படிச்சா நல்ல இருக்கலாம் ...அப்டிங்கற எண்ணத்துல தான் உன்னை கடன வாங்கி படிக்க வச்சேன்.. ஆனா நீ இன்னும் உன் வாழ்கையே ஆரம்பிகல அதுக்குள்ள அடுத்த 20 வருஷத்துக்கு கடன்காரன் அயிட்ட ... இனிமே உனக்கு கல்யாணம் பண்ண அவளுக்கு அப்புறம் உன் குழந்தைக்கு சேர்த்து உன் மனைவியும் வேலைக்கு போகணும் ... கடைசியா படிப்பு உன்ன ஒரு கடன் காரண தான் ஆக்கும் நு தெருஞ்சு இருந்த உன்ன படிக்கவே வச்ருகமட்டேன் ....

விவசாயம் செஞ்சாலும் நான் யார்கிட்டயும் உண் படிப்க்கு தவிர கடன் வாங்கல .... இனிமே உன் வாழ்கையில நிமதியே கிடயாது அப்டிங்க்ரத நினைக்கிற போது தான் கஷ்டமா இருக்கு ...

மீண்டும் திரும்பி வருவாய் என்று நம்பிகையுடன் கிளம்புகிறேன் என்று தனது கிராமத்திற்கு சென்றார் ...

அவருக்கு எப்படி தெரியும் இந்த சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும் தான் எக்ஷிட் கிடையாது என்று ...

சரவணனும் ,சேகரும் அவர் அவர் வேலையை செய்ய தொடிங்கினர்கள் ......

எழுதியவர்: Jainul Abdulwaha

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...