பேரரசன் ஒருவன் அடுத்த நாட்டைக் கைப்பற்ற நினைத்தான்.
பெரும்படையுடன் பனி
படர்ந்த மலைகளைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அங்கே துறவி ஒருவர்
இடுப்பில் கோவணத்துடன் தவம் செய்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த
பேரரசன் அந்தத் துறவியின் மீது இரக்கப் பட்டான்.
இந்தக் குளிரில் இவர் மேலாடை இன்றி நடுங்குவாரே. இவருக்கு உதவி செய்ய வேண்டும்' என்று நினைத்தான் அவன். தன் மேலாடையைக் கழற்றி அவர் மீது போர்த்தினான்.
விழித்த துறவி, ""தாங்கள் தந்த மேலாடை எனக்கு வேண்டாம். என்னை விட ஏழை யாருக்காவது தந்து விடுங்கள்!'' என்றார்.
கோவணத் துணியைத் தவிர இவருக்கு என்று சொந்தம் ஏதும் இல்லை, இவரை விட ஏழையான மனிதர் இந்த உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது' என்று நினைத்தான் அவன் உங்களை விட ஏழையை நான் எங்கே காண்பேன்?'' என்று கேட்டான்.
துறவி அவனைப் பார்த்து, ""நீ யார்? இவ்வளவு பெரும்படையுடன் எங்கே செல்கிறாய்?'' என்று கேட்டார்.
பேரரசன் நான். என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. பக்கத்து நாட்டைக் கைப்பற்றுவதற்காகப் பெரும்படையுடன் செல்கிறேன்!'' என்று பெருமையுடன் சொன்னான். உன்னிடமே ஏராளமான செல்வம் இருக்கும்போது, ஏன் பக்கத்து நாட்டின் மீது படை எடுக்கிறாய்?''
அந்த நாட்டுச் செல்வமும் சேர்ந்தால், நான் இன்னும் பெரிய செல்வனாகி விடமாட்டேனா? என் ஆணை அந்த நாட்டிலும் செல்லுமே!'' என்றான் அவன்.
இருக்கின்ற செல்வம் போதாது, இன்னும் வேண்டும் என்று நினைக்கிறாய். நீதான் உண்மையான ஏழை...
நீயே போர்வையை வைத்துக் கொள்!'' என்று நீட்டினார் அவர். தலை
கவிழ்ந்த அவன் படையெடுக்கும் எண்ணத்தை விட்டுவிட்டு நாடு திரும்பினான்.
Thanks to R.P.Karthik
No comments:
Post a Comment