Total Pageviews

Tuesday, December 13, 2011

நல்ல நண்பன்


ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்,

இளைஞனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன்                       35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.
இளைஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.

என் நண்பனே. நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆனால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார்.இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது.

 நீ வார்த்தைகளால் உண்டாக்கும் வடுவிற்கும், செயல்காளால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.
என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்ககையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதைய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்,


என்னை மன்னித்து விடு, நான் உன்னில் ஏதாவது வடுவை உண்டாக்கி இருந்தால்.

சிங்கமும் பங்கும்!



சிங்கமும் புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிங்கம் பசுவைக் கொன்றது. புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.
தாய்புலியோ "நீ ஏன் டலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்று கேட்டது. குட்டி புலி சொல்லியது: "நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வரமுடியும். நான் எப்படி சிங்ஙத்தோடு விவாதிக்க முடியும்" அதைக்கேட்ட கோபமான தாய்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது.
சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.
தாய்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. "ஏன் இங்கே வந்தாய்?" கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது. பசுவில் பாதி கேட்க வந்த தாய்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: "ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்."
குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய தாய்புலியிடம் குட்டி கேட்டது: பசுவில் பாதி கேட்கப்போன நீங்களகுடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே? "மகனே... சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்து விட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக" என்றது தாய்புலி.
நீதி :நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.



Saturday, December 10, 2011

இங்கே கணவர்கள் விற்கப்படும்..!



ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..
அது என்னன்னா...!

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு
 தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.

ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..
அப்டியே வெளிய தான் போக முடியும்.

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா......கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது

முதல் தளத்துல அறிக்கை பலகைல

 "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா

இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் "  அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.
மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு  பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

நாலாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு. இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?

கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு  பண்ணிட்டு மேல போனாள்.

ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.
அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள  முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல

"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை
திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...

பார்த்து பதனமாக

Tuesday, December 6, 2011

நீங்கள் ஆடுகள் இல்லை. சிங்கக்குட்டிகள்



காட்டில் ஒரு கர்ப்பிணி சிங்கம் இருந்தது. ஒரு ஆட்டு மந்தையைப் பார்த்ததும் அது பசி வேகத்தில் பாய்ந்தது. பாய்ந்த வேகத்தில் சிங்கக் குட்டியை ஈன்றது. ஆனா‌ல் ‌பிரசவ‌த்‌தி‌ன் போது அ‌ந்த ‌சி‌ங்க‌ம் அ‌ங்கேயே உ‌யி‌ரிழ‌ந்தது. 

அ‌ந்தச் சிங்கக் குட்டியோ ஆட்டு மந்தையில் சேர்ந்து கொண்டது. காலப் போக்கில் தானும் ஒரு ஆடு என்று நினைத்துக் கொண்டு அந்த சிங்கக் குட்டி 'மே...மே' என்று கத்தியது. புல் தின்றது, பாய்ந்து வரும் சிங்கங்களைப் பார்த்து பயந்து ஓடியது. தனது உட‌லா‌ல் ‌சி‌ங்கமாக இரு‌ந்த போது‌ம், அது மனதள‌வி‌ல் ஆடாகவே வா‌ழ்‌ந்தது.

ஒரு சிங்கம் இதைக் கவனித்து விட்டது. தனியாக அந்தச் சிங்கக் குட்டியை அழைத்து "நீ ஆடு அல்ல, சிங்கம்" என்று சொன்னது. தன்னைப் போல் கர்ஜனை செய்யச் சொன்னது. ஆனால் அந்த சிங்கக் குட்டியோ, நான் ஆட்டுக் குட்டிதான் என்று மீண்டும் மே...மே என்று கத்தியது.

ஆனா‌ல் அ‌ந்த சிங்கம் விடவில்லை. எ‌ப்படியாவது இ‌ந்த ‌சி‌ங்‌க‌க் கு‌ட்டி‌க்கு உ‌ண்மையை பு‌ரிய வை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று அத‌ற்கான உ‌த்‌தியை யோ‌சி‌த்தது. கடை‌சியாக ஒரு யோசனை ‌பிற‌ந்தத. அந்தக் ‌சி‌ங்க‌க் குட்டியை அழைத்துக் கொண்டு போய் ஒரு குளத்தில் தன் பிம்பத்தைப் பார்க்கச் சொன்னது. அந்தக் குட்டியும் சிங்கமும் ஒரே மாதிரி இருப்பதை அன்றுதான் அந்த ‌சி‌ங்க‌க் குட்டி உணர்ந்து கொண்டது. உடனே தானும் பெரிதாய்க் குரல் கொடுத்து கர்ஜனை செய்தது. 

இந்தக் கதையைச் சொன்ன சுவாமி விவேகானந்தர், "நீங்கள் ஆடுகள் இல்லை. சிங்கக்குட்டிகள். உங்களை நீங்களே ஆடுகள் என்று மனவசியம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். அதை விட்டுவிடுங்கள். நீங்கள் சிங்கங்கள் என்பதை உணருங்கள். அளவிட முடியாத வலிமை உங்களுக்கு உண்டு" என்று போதிக்கிறார். 

உ‌ங்க‌ள் ‌திறமைகளை தொல‌ை‌க்கா‌ட்‌சி‌யிலு‌ம், ‌வீடியோ ‌விளையா‌ட்டுக‌ளிலு‌ம் தொலை‌க்கா‌தீ‌ர்க‌ள்.

Thanks to webdunia

. யானைக்கு ஒரு காலம் வந்தால்



ஒரு சமயம் வைகுண்டவாசனான திருமாலின் தலையில் இருந்த கிரீடம், அவரது பாத அணிகளைப் பார்த்து ஏளனம் செய்தது.

நான் திருமாலின் தலை மீது அமர்ந்திருக்கிறேன், நீயோ அவரது காலடியில் கிடக்கிறாய். அதுமட்டுமல்லாமல், மானிடர்கள் கூட அவர்களது வீட்டிற்குள் உன்னை அனுமதிப்பதில்லையே? வீட்டுக்கு வெளியேதான் விட்டுவிட்டு செல்கிறார்கள்.


ஆனால் என்னைப் போன்ற கிரீடங்களை மிகவும் பாதுகாப்பான இடத்திலும், தகுதியான இடத்திலும் அமர வைக்கிறார்கள். உன்னைப் போன்று வெளியே போட மாட்டார்கள் என்று கூறி பாத அணிகளை எள்ளி நகையாடியது கிரீடம்.

பாவம் செருப்புகள், எம்பெருமான் நடக்கும்போது அவைகள் அழுதன. அதைக் கேட்ட திருமால், எனது பாதங்களைப் பாதுகாத்து வரும் பாதுகைகளே, உங்களுக்கு ஏற்பட்ட துக்கம் என்ன என்று கேட்டார்.

அதற்கு, பாதுகைகளும், தங்களது குறைகளைக் கூறின.

குறைகளைக் கேட்ட திருமால், இதற்கா நீங்கள் அழுகிறீர்கள்? கவலையை விடுங்கள். நான் ராம அவதாரத்தின் போது உங்களை 14 ஆண்டுகள் அரியாசனத்தில் அமர வைத்து அரசாட்சி செய்யும்படி செய்கிறேன் என்று வாக்களித்தார்.

அதன்படியே, ராம அவதாரம் எடுத்து, ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்ட போது, பரதன் ராமரின் பாதுகைகளை பெற்று, அவற்றை சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி செய்தான். அப்போது பாதுகைகள் தங்களது நிலையை எண்ணி மகிழ்ந்தன.

ஒவ்வொரு நாளும் பரதன் சிம்மாசனத்தின் முன்பு அமர்ந்து பாதுகைகளை வணங்கிய போது, அவனது தலையில் இருந்த கிரீடம் வெட்கி தலை குனிந்து தனது தவறுக்கு மானசீகமாக வருந்தியது.

இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளும் நீதி என்னவென்றால், எவரையும் இழிவாக எண்ணிப் பேசக் கூடாது. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பதுதான்.
Thanks  to webdunia

நல்ல மனதுடன் எதைச் செய்தாலும் அது நல்லதாகவே இருக்கும்

 
 
ஒரு புத்த குருவும், அவருடைய சிஷ்யரும் ஆற்றைக் கடந்து மறு கரைக்குச் செல்ல வேண்டிய நிலையில் கரைப் பகுதிக்கு வந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒரு பெண்மணி, குருவிடம், நானும் இந்தக் கரையைக் கடந்து அக்கரைக்குச் செல்ல வேண்டும். உங்களால் எனக்கு உதவ முடியுமா என்று கோரினாள்.

சரி என்ற குரு, அந்தப் பெண்ணை தோளில் தூக்கிக் கொண்டு ஆற்றில் இறங்கினார். சிஷ்யனுக்கு பயங்கர அதிர்ச்சி. ஒரு துறவி, ஓர் இளம் பெண்ணை தோளில் தூக்கிச் செல்வது தகுமா? துறவியின் புனிதத் தன்மை கெட்டு விடுமே என்று பதறினான்.

மறு கரை வந்ததும், குரு அந்தப் பெண்ணை இறக்கிவிட்டுவிட்டார்.

சிஷ்யனுக்கோ மனதில் பெரும் குழப்பம். குருவிடம் எப்படிக் கேட்பது என்று புரியாமல் மனதில் இதைப் பற்றிய அலசியபடி வந்து கொண்டிருந்தான்.

நீண்ட தூரம் சென்ற பின் மரத்தடி ஒன்றில் இருவரும் ஓய்வெடுக்க அமர்ந்தனர். அப்போது அந்த சிஷ்யன் தனது மனதில் இருந்த கேள்வியை குருவிடம் கேட்டான்.

அதற்கு குரு இவ்வாறு பதிலளித்தார், நான் அந்தப் பெண்ணை ஆற்றங்கரையிலேயே இறக்கிவிட்டுவிட்டேன். நீ இன்னும் இறக்கி வைக்கவில்லையா? என்று கேட்டார்.

உடனே சிஷ்யன் தலைகுனிந்து நின்றான்.

நீதி : எந்த ஒரு காரியமும் நமது மனதை அடிப்படையாக வைத்தேப் பார்க்கப்படுகிறது. நல்ல காரியத்தையும் கெட்ட மனதுடன் செய்யும் போது அதன் பலனும் கெட்டதாகவே முடியும். நல்ல மனதுடன் எதைச் செய்தாலும் அது நலலதாகவே இருக்கும்.
 
Thanks to webdunia
 

அட‌க்‌க‌த்‌தி‌ல் உ‌ய‌ர்‌ந்தவ‌ர்க‌ள்



கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு குறுகலான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.



யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது. அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து வ‌ழி விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.


அ‌‌ப்போது அந்த யானையுட‌ன் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்த ம‌ற்றொரு யானை இ‌ந்த யானையை‌ப் பா‌ர்‌த்து, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.


அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:

"நான் இடறி ப‌ன்‌றி ‌மீது ‌விழு‌ந்து‌வி‌ட்டா‌ல் பன்றி நசுங்கி விடும். அ‌தி‌ல்லாம‌ல் அது வாலை ஆ‌ட்டி‌க் கொ‌ண்டு வரு‌கிறது. நானோ சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்தா‌ல் நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."


நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

அ‌திக ‌திறமையு‌ம், ஆ‌ற்றலு‌மகொ‌ண்டவ‌ரஅட‌க்க‌த்துட‌னவா‌ழ்வதையு‌ம், ஒ‌ன்று‌மதெ‌ரியாதவ‌‌ர்க‌ளதலை‌‌க்கண‌த்துட‌ன் ‌தி‌ரிவதையு‌மநா‌மபா‌ர்‌த்து‌ள்ளோ‌ம

Thanks to webdunia

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...