Total Pageviews

Thursday, November 5, 2026

ஒரு கருணை மணம்படைத்த ஒரு திருடன !

 சென்னை மாநகரின் மய்யபகுதியில் ஒரு பங்களா வீடு. . அந்தவீடு இருக்கும் பகுதியில் அவ்வளவு வெளிச்சம் வேறு இருக்காது….. இரண்டு மூன்றுநாட்களாக அந்த பங்களா வீடுஉப்புறமாக பூட்டியே இருந்தது…

அவ்வப்போது சிறு சிறு திருட்டு தொழில் நடத்திக்கொண்டுவந்த வேலை கிடைக்காத பட்டதாரிஇளைஞன் ராஜாவிற்கு… அந்த வீடு தனிமையில் இருப்பது கண்களை உறுத்தியது…. எப்படியாவது ஆள் அரவமே இல்லாத அந்த வீட்டில் புகுந்து கிடைப்பதைசுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகி விட வேண்டுமென திட்டம் போட்டு வைத்திருந்தான்….. அதைஅந்த இரவே செயல் படுத்த அந்த வீட்டையே சுற்றி சுற்றி வந்தான்…ஒரு தாய்…. ஒரு தங்கை அடங்கியசிறு குடும்பம் தான் அவனுடையது…..

சொகுசாய் வாழ அவனுக்கு விருப்பமில்லை ..என்றாலும் தன் தங்கைக்கு ஒரு வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டுமே என்ற ஆதங்கத்தில் வேலை தேடினான் ஆனால்அவனை வறுமை விரட்டி கொண்டே இருந்தது…எந்த வேலையும் கிடைத்த பாடில்லை…. ஒரே ஒரு திருட்டு பெரியதாகசெய்து விட்டு வாழ்க்கையில் செட்டில்ஆகி விட வேண்டும் என்பதையே …..அவன்விரும்பினான்….


அவன் எதிர்பார்த்த இரவும் வந்தது.. மெல்லமெல்ல பூட்டியிருந்த அந்த வீட்டின் அருகே சென்று ஆராய்ந்தான்…எந்த ஆள் அரவமும்உள்ளே கேட்கவில்லை……ஆனால் வாசல் வழியிலேயே செல்ல எவ்வளவு முயன்றாலும் முடிய வில்லை….. உள் பூட்டுபோடப்பட்டிருந்தது….காம்பவுண்ட்டைசுற்றி கொண்டு பின்னால் இருக்கும் சிறு தோட்டம் வழியே சென்று மேலே பார்த்தான்…. தத்தி தாவி மொட்டை மாடிக்குசெல்ல நிறைய சிலாப்இருந்தது…. அதன் வழியேமெதுவாக ஏறி போனான்…மொட்டை மாடி அவனை வரவேற்றது…கீழே செல்ல கதவும் திறந்து இருந்தது…. அதன் வழியே கையில் கொண்டு வந்த டார்ச்சை அடித்து பார்த்தான்….. அவனை வரவேற்பதை போல் எல்லாம் திறந்தேஇருந்தது…மொத்தம் மூன்று தளம்…. இரண்டு கிரவுண்டில்கட்டப் பட்டபெரிய பெரிய அறைகள் காட்சி அளித்து கொண்டு இருந்தன…. செல்வ செழிப்பின் வாசம் அங்கிருந்த எல்லாஅறைகளும் பறைசாற்றிட்டின…. ஆகமொத்தம் அது ஒரு பணக்கார வீடு….. அழகு மாளிகை போல் அந்த இருட்டிலும் மின்னியது….. ஆங்காங்கு சிறு சிறு இரவு விளக்குகள் வண்ணத்தில் மின்னியது..அவன் எதிர்பார்த்த பீரோவும் ஒரு அறையில் அவன் கண்ணில் பட்டது….. சுற்றும் முற்றும் பார்த்தான்…. என்ன அதிசயம்…. பீரோ திறந்தே இருந்தது….. அதை லேசாக திறந்த அவனுக்கு தலை சுற்றியது….. கத்தையாக பண கட்டுகள்….. ஒரு பக்கம் நகை பெட்டிகள் இப்படி நிறையசெல்வங்கள் அங்கே கொட்டி கிடந்தன…..

பீரோவில் இருந்த ஒரு புடவையை எடுத்தான்……அதில் எல்லாவற்றையும்அள்ளி போட்டு மூட்டை கட்டினான்….. அறைக்கு வெளியே வந்து கண்ணில் யாராவது தெரிகிறார்களா.. என எட்டி பார்த்தான் ஒரு ஈ காக்கை இல்லை….. வந்த வழியே செல்ல கட்டிய மூட்டையை கையில் தூக்கி கொண்டு மெல்ல அடியெடுத்து வைத்தான்….

திடீரென்று எதிரே இருந்த அறையில் ஒரு பெண்ணின் முனகல் சப்தம்கேட்கவேகொஞ்சம் நின்று….மூட்டையை அந்த அறையிலேயே விட்டு விட்டுஎதிர் அறையில் கொண்டு வந்த டார்ச்சை அடித்து பார்த்தான்.,…அவன் கண்ட காட்சி அவனை மிரள வைத்தது…ஒரு முப்பது வயது மதிக்க தக்க ஒரு அழகிய இளம் பெண்….. கண்கள் இருண்டு போய்…எழுந்திருக்க கூட நாடி இல்லாமல் முனகிகொண்டு……இவனை தன் அருகில் வருமாறு மெல்ல சைகையால் அழைத்தாள்….. அந்த கைகளுக்கு கூட பலமில்லை…. உடனே துவண்டுகீழே விழுந்தது….

ராஜா டார்ச்சை அடித்து கொண்டே அவளருகில் சென்றான்…. அவள் சைகையிலேயே தனது பக்கத்தில் கட்டிலில் அமருமாறு கையெடுத்து அவனை கும்பிட்டாள்….. ராஜா அப்படியே அமர்ந்து அவளை உற்று நோக்கினான்…. அவள் தலையணையை தூக்கி அதன் அடியிலிருந்தகொத்து சாவியை எடுத்து அவனிடம் கொடுத்து….. இது பல பீரோக்களின் சாவி….. உனக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்து கொள்…ஒரே ஒரு உதவி மட்டும் எனக்கு செய்…. என் உயிரை மட்டும் காப்பாற்றி விடு…எனது கணவனோடு சேர்ந்து கொண்டு, அவர் வீட்டார் எனக்கு விஷம் வைத்து விட்டார்கள்…. மெல்ல மெல்ல என் உயிர் போய் கொண்டு இருக்கிறது…….. உன்னிடம் உள்ள செல் போனில் நான் சொல்லும்எண்ணில் என் குடும்ப டாக்டருக்கு ஒரு போன் மட்டும் போட்டு…. கோமதி இங்கே செத்து கொண்டு இருப்பதாக சொல்லி….டாக்டர் விக்னேஷை இங்கே வரவழைத்துவிடு…உன்னை யார் என கேட்டால் மாமா பையன் என்று சொல்…. எல்லா போனையும்எடுத்து சென்று விட்டார்கள்…….இவை எல்லாவற்றையும்முக்கி முனகிசொல்ல அவளுக்குஅரை மணி நேரம் பிடித்தது…அவள் போன் எண்ணை சொல்லி விட்டு மயங்கி விட்டாள்…

கோமதி சொன்ன எண்ணுக்கு ஒரு கால் போட்டான் ராஜா….. அவள் சொன்ன எல்லா விஷயத்தையும்டாக்டர் விக்னேஷ்க்கு தெளிவாக கூற….. அவர் தனது மருத்துவ மனையிலிருந்து ஆம்புலென்சில்ஒரு டீமையேஅழைத்து கொண்டு புறப்பட்டு விட்டார்…அதற்குள் ராஜா ப்ரிட்ஜ்ஜில் பால் பாக்கெட் இருக்கிறதா என பார்த்தான்…நல்ல வேளை ஒன்று இருந்தது.. அதை கொண்டு போய் சமையல் அறைக்கு சென்று அதை நன்றாககாய்ச்சி ஒரு தம்ளரில் பதமாக ஆற்றிஎடுத்து வந்து அவளை தொட்டுஎழுப்பினான்….கோமதி மெல்ல கண் திறக்க….அவளை மெதுவாக கட்டிலில் தலையணை போட்டு சாய்வாகஉட்கார வைத்துகொஞ்சம் கொஞ்சமாக பாலை அவளுக்கு ஊட்டினான்….. அவளும் மெல்ல குடித்தாள்….. குடிக்கும் போதே அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது….. அவள் புடவையிலேயேஅந்த கண்ணீரை துடைத்துவிட்டான் ராஜா…பின்பு அவளைபடுக்கவைத்து விட்டு வாசலை திறந்து விட்டான்…. பட்ட பகல் போல் வெளிச்சம் அங்கு பரவவிட்டான்….

பத்துநிமிடம்சென்றிருக்கும்…….விக்னேஷ்மருத்துவ குழு வந்து சேர்ந்தது…..ஆம்புலென்சிலிருந்து குளுகோஸ் ஸ்டாண்ட் இறக்கப்பட்டது….கோமதிக்கு டிப்ஸ் ஏற்றப்பட்டது…. ப்ளட் டெஸ்ட் ஆம்புலென்சிலேயேசெய்யப்பட்டது…. கோமதி சாப்பிட்ட பண்பட்டர்ஜாமில் ஸ்லோபாய்சன் கலக்க பட்டிருப்பது தெரிய வர….. அனைத்து ஆவணக்களையும்ஒன்று விடாமல் தயார் செய்தார் விக்னேஷ்…அந்த விஷத்திற்கு ஏற்றாற்போல் போல் முறிவு டிப்ஸ்சுடன் ஏற்ற பட்டது….. ..கொஞ்சம் கொஞ்சமாக கோமதி முகத்தில் தெளிவு வந்தது….. விஷ முறிவு முழுவதும் சரியானது….

போலீசுக்குதகவல்கொடுக்கப்பட்டது…ராஜா கூட இருந்து கோமதியை கவனித்து நன்றாக பார்த்து கொண்டான்

திருச்சியில் முக்கிய கல்யாணம் இருப்பதாக பொய் சொலலிவிட்டுசென்ற கோமதியின் நாத்தானார்…. மாமியார்…கணவர் மகேஷ் மூவரும் கைது செய்ய பட்டனர்…

பெரிய தொழில் அதிபர் மகளை காதலித்து மணந்த மகேஷ…கொஞ்சம் கொஞ்சமாகமனம் மாறினான்….. கோமதியின் தந்தைமூலம் கிடைத்த கோடி கணக்கான சொத்து அவனையும் அவனது….தாய்…. மற்றும்அவனதுஅக்காள் மகள்…. அக்காள் ஆகியோர் மனதை மாற்றியது…. கோமதியை யாருக்கும் தெரியாமல் ஸ்லோபாய்சன் வைத்து அவள் கதையை முடித்து விட்டு தன் அக்காள் மகளை மணந்து கொண்டு இன்பமாக காலம் ஓட்டலாம்….என்று குடும்பம் முழுவதும் திட்டம் போட்டது…..

கோமதியின் திமிர் வாதம்.. தான்பணக்காரி என்ற ஆணவம்….மற்றும்அகந்தைஎல்லாம் இந்த குடும்பத்திற்கு பிடிக்கவில்லை….எனவே இப்படி ஒரு முயற்சியில் இறங்கியது….. ஒரு கருணை மணம்படைத்த ஒரு திருடனால் காப்பாற்ற பட்டாள்…. கோர்ட்டில்விவாக ரத்து வழங்க பட்டது கைதானஅனைவருக்கும் ஏழு வருடங்கள் சிறை தண்டனை வழங்க பட்டது…..கடைசியில் ராஜாவையேமணந்து நல்லவளாக மாறி….அனைவருக்கும் நல்லது செய்தாள்….. பல அனாதை ஆசிரமம் அமைத்துஅனைவருக்கும் உதவும் குணத்தால்உயர்ந்தாள்…(1968ல் செய்தி பத்திரிக்கையில் வந்த ஒரு நிகழ்வின் உண்மை நிழல் இக்கதை)

ஒரு கருணை மணம்படைத்த ஒரு திருடன !

  சென்னை மாநகரின் மய்யபகுதியில் ஒரு பங்களா வீடு. . அந்தவீடு இருக்கும் பகுதியில் அவ்வளவு வெளிச்சம் வேறு இருக்காது….. இரண்டு மூன்றுநாட்களாக அந...