Total Pageviews

Saturday, October 24, 2026

10,000 டாலர் பரிசு !

அமெரிக்க நகர் ஒன்றில், சர்தார் ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது. சர்தாரும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை

முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது.

இறங்கி வந்த போலிஸ் அதிகாரி , அவரிடம் 'குட் ஈவ்னிங் சார்..'

அவர் 'குட் ஈவ்னிங்...

ஏதாவது பிச்சனையா?'.

போலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்.

அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.

அவர் ஒரு சந்தோஷமாக ஒரு பெரு மூச்சு விட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார்.

போலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'

அனாதைகள் !

 

கல்யாணத்துக்கு முன்னே உன்னை என்ன கேட்டேன்….

என்ன கேட்டே சொல்லி தொலை…..

சொந்த வீடு இருக்கான்னு கேட்டேன் இல்ல……

ஆமா இருக்கு……ஆனா முழுசா கடனில் இருக்கு…..

கார் இருக்கான்னு கேட்டேன் இல்லையா……

ஆமா இருக்கு….. ஆனா எக்கசக்க due கட்டலே….. அதனாலே 

புடிங்கிக்கினுபோயிட்டாங்க……

தோட்டம் தொறவு இருக்கானு கேட்டேன்…. நியாபகம் இருக்கா…..

ஆமா இருக்கு…. ஆனா அது பக்கத்து வீடு….

தங்கைங்க….எத்தனை பேருன்னு கேட்டேன்இல்லையா…..

ஆமா கேட்டே……ஆனா எல்லாரும் வெளி நாட்டுல இருக்காங்க…..தீபா கண்ணு…..

அப்பா யாரு….. அவரு எங்கேன்னு சொன்னியா…..

அவரு என்னை அனாதையா விட்டுட்டு எங்கேயோ போனாரு……திரும்பி வரலே…..

சரி உனக்கு அம்மா இருக்கிறதா சொன்னியே…. அவங்க எங்கே காணலை…..

அவங்க பத்து வருஷத்துக்கு மேலே நோயாளியா சொந்த காரங்க வீட்டில் இருக்காங்க….

முதல்ல உனக்கு வேலை இருக்கா…..

இப்ப தானே கல்யாணம் ஆச்சி……இனிமேல் தான் தேடணும்……சரி…. இப்ப நான் சில கேள்விகள் உன்னைகேக்கலாமா…..

எனக்கென்ன பயம் இருப்பதை சொல்றேன் சங்கர்….கேளு…..

நீ…. முதல்லே எங்கே வளர்ந்தே…..

அநாதை ஆசிரமத்திலே…..

யாரு உன்னை சேர்த்தது……

எங்க அப்பா…. சித்தி கொடுமையிலே என்னை சேர்த்து விட்டு விட்டு போனதா….. விடுதி காப்பாளர் சொன்னார்…..

உனக்கு சொந்த அம்மா இல்லையா.. ..

அவங்கதவறிபோனதாலேஇரண்டாம் கல்யாணம் எங்கப்பா பண்ணிக்கிட்டாரு…..

ஆசிரமத்திலே சேர்ந்த காலம் எப்போது. .. எத்தனைவருஷம் அங்கே இருந்தே…..

ஆறு வயசுலே எங்கப்பா சேர்த்தாரு…. இப்போ வயசு இருபத்து மூணு. ….வருஷம் ரெண்டு தரம் வருவாரு….. என்னை பார்ப்பாரு. …. ஆசிரமத்துக்கு நன் கொடையா பல லட்சங்களை கொடுத்து விட்டு…. என்னைபார்த்து எனக்கு முத்தம் கொடுத்துட்டு அழுதுக்கினே போயிடுவாரு..

இப்ப ஏன் வருவதில்லை….

அது தான் தெரியலே…. ஒரு வேளை அவருக்கு ஏதாவது ஆகி இருக்குமோ…. அவர் அட்ரஸ் கூட விடுதி காப்பாளருக்கு சொல்லலை… எனக்கும் தெரியாது சங்கர்…. அவரை பார்த்து அஞ்சு வருஷம் ஆச்சு…. அவரு இருக்காரா….. இல்லை….

தீபா…வாயை மூடு…நீ நினைக்கிற மாதிரிஎதுவும் நடந்து இருக்காது…. ஒரு நாள் உங்கப்பாவை கண்டிப்பா பார்ப்பே…. சரி உனக்கு கல்யாணம் யாரு செய்து வைச்சது…..

உனக்கும் எனக்கும் விடுதி காப்பாளர் செய்து வைச்சாரு….

அப்போ நீயும் அநாதை….. நானும் அநாதை இல்லையா……

ஆமா சங்கர்……

அப்ப…. ஏன் தீபா.. எல்லாம் தெரிஞ்சி இருந்தும் இப்படி வேணுன்னே சண்டை போடுறே….

சும்மா……நாளைக்கே நமக்கு வசதி வாய்ப்பு வந்து, பணக்காரரா ஆயிட்டோம்னு வைச்சிக்க….. அப்பசண்டை போட தெரியாதே….. அதனாலே இப்பவே இந்த ஒத்திகை சங்கர்…..************

(சார் போஸ்ட் குரல் கேட்டு சங்கர் ஒரு தபால் வாங்கி வந்தான்)என்ன சங்கர் போஸ்ட்……

தீபா நமக்கு நல்ல காலம் பொறந்திடுச்சு… ஆவண காப்பாக கவர்மெண்ட்ஆபிலிருந்து. எனக்குசி.ஏ..வேலைக்கு அப்பாய்மெண்ட் ஆர்டர் வந்திருக்கு ….

கடவுளே. … இந்த அனாதைகளுக்கு கண்ணை திறந்துட்டே.. …. நன்றி கடவுளே……

சங்கர். நம்ம வீட்டு முன்னாடி ஒரு காரு வந்து நிக்குது பாரு….

யாரோ பெரியவரு வராரே. … ஆ. …. அப்பா. .. எங்கப்பா சங்கர்.. (தீபாவின்அப்பா வேதசலம்காரிலி ருந்துஇறங்கி வந்துசங்கர்…தீபா இருவரையும் அணைத்து கொண்டு அழுதார்)தீபாவும் அழ……அங்கு சில நிமிடங்கள் மவுனம்நிலவியது….. வேதசலம்தீபாவின் சித்திஇறந்து விட்டதாக சொன்னார்….. தனக்கு தீபாவை தவிர வேறு வாரிசு ஏதும் இல்லை என கூறி இருவரையும் தன்னுடன் அழைத்து கொண்டார்…. அவ்விரு இளங் குயில்களுக்கு உண்மையில் பெருவாரியான சொத்துகளும் ஆளும் தகுதி இறைவனால் கொடுக்கப்பட்டது….

Sunday, October 11, 2026

கடவுள் நம்பிக்கை !

 

கப்பல் ஒன்று கடலில் வழி தவறி செல்லும் போது பெரும் புயலில் சிக்கி மூழ்கியது... அதில் இருந்த ஒருவன் மட்டும் எப்படியோ தப்பினான்... !அருகிலுள்ள தீவில் அவன் கரையேறினான்...!!

இறைவா…இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்து விடு....!!என வேண்டினான்.ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பேன்...?என் மனைவி மக்களை பார்க்க வேண்டாமா...??” என்று கண்ணீர் விட்டு பிரார்த்தனையும் செய்தான்...!!

எந்த உதவியும் அவனுக்கு கிடைக்க வில்லை...!!

இப்படியே சில நாட்கள் ஓடின...!!

தன்னை காத்துக் கொள்ள,தீவில் கிடைத்த பொருட்கள்,மற்றும் கப்பலின் உடைந்த பாகங்களை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டினான்....!!அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள்,மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப் படுத்தி தங்கியும் வந்தான்.....!!

இப்படியே நாட்கள் ஓடின...!!.

இவன் பிரார்த்தனையை மட்டும் விடவே இல்லை.கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை நம்பிக்கையோடுதேற்றிக் கொண்டான்.ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்று விட்டு திரும்புகையில்,அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது.பட்ட காலிலே படும் என்பது போல…எது நடக்கக் கூடாதோ அது நடந்து விட்டது.இவன் தங்குவதற்கென்று இருந்த ஒரே ஒரு குடிசையும் ,வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரை யாகியிருந்தன.அதை பார்த்த இவன் அலறித் துடித்தான்.எல்லாமும் போய்விட்டது.இவனிடமிருந்த மிச்ச சொச்ச பொருட்களும் போய் விட்டது.

“இறைவா… !என்னை காப்பாற்றும் படி தானே உன்னை மன்றாடினேன்.நீ என்ன வென்றால் இருப்பவற் றையும் பறித்துக் கொண்டாயே…!!

இது தான் உன் நீதியோ…?”என்று கதறி அழுகிறான்.அப்போது ஒரு கப்பலின் பெரும் ஹாரன் சப்தம் இவனை எழுப்பியது.இவன் இருந்த தீவை நோக்கி அது வந்து கொண்டிருந்தது.

“அப்பாடா…நல்ல வேளை…ஒரு வழியாக இங்கிருந்து தப்பித்தோம்.யாரோ நம்மை காப்பாற்ற வருகிறார்கள்.”என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான்.கப்பல் சிப்பந்திகள் அவனை,லைஃப் போட்டில் வந்து அழைத்து சென்றார்கள்.தான் இங்கே தனியாக தீவில் மாட்டிக் கொண்டிருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்டான்...!!

“தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதை பார்த்தோம்…. !யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி,சிக்னல் கொடுக்கிறார்கள் என்று நினைத்தோம்” என்கிறார்கள் அவர்கள்......!!

அப்போது இவனுக்கு குடிசை எரிந்ததற்கான காரணம் இவனுக்கு புரிந்தது.இறைவனுக்கு நன்றி சொன்னான்.அந்த வழியில் கப்பல்கள் பெரும்பாலும் வருவதே மிக மிக அரிதான நிலையில்,குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் ,தன் நிலை என்ன வாகியிருக்கும் என்று அவனுக்கு அப்போது புரிந்தது.அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான்.

வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாமும் இப்படித் தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக எடைபோட்டு விடுகிறோம்.

ஒரு சில நேரங்களில் நம்மை காக்கவே இறைவன் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான்.அவன் தரும் சோதனைகள் அனைத்தும்,நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே ...!!"

சோதனை மேல் சோதனை என்றால்"..…இறைவனின் அருட்பார்வை உங்கள் மீது விழுந்து விட்டது....!!என்றே அர்த்தம் !!!

வெகு விரைவிலே நல்லது நடக்கும் என்று நம்புங்கள்.

ஒரு கருணை மணம்படைத்த ஒரு திருடன !

  சென்னை மாநகரின் மய்யபகுதியில் ஒரு பங்களா வீடு. . அந்தவீடு இருக்கும் பகுதியில் அவ்வளவு வெளிச்சம் வேறு இருக்காது….. இரண்டு மூன்றுநாட்களாக அந...