Total Pageviews

Tuesday, July 10, 2018

வாழ்க்கை!






சிவப்பிரகாசத்துக்கு வலது கை தூக்க முடியாமல் போனபோதே புரிந்து போனது. பக்கவாதம். வயது எழுபத்தைந்து ஆகிறது. மனைவி போய்ச் சேர்ந்துவிட்டாள். 

பசங்க நான்கு பேரும் நான்கு ஊர்களில் வசதியாக இருக்கிறார்கள். பெண் அமெரிக்காவில், சொல்றேன்னு தப்பா நினைக்காத சிவா, இந்த நிலையில் நீ உன் சொத்துக்களை பிரிச்சி எழுதிக் கொடுத்திட்டின்னா உன்னை நடுவீதியில் விட்டுருவாங்க பசங்க' என்றார் வக்கீல் செந்தில்நாயகம்!

எல்லாம் ஒரு லாஜிக்தான் செந்தில்!

என்ன?

நான் சொத்துக்களை பிரிச்சிக் கொடுக்கலைன்னா எப்படா கிழம் மண்டையைப் போடும்னு என்னோட சாவைப் பத்தியே நினைச்சிட்டு இருப்பாங்க! 

நான் பிரிச்சிக் கொடுத்திட்டா என்னை காப்பாத்தாம மறந்துருவாங்க தான்! 

ஆனா நான் சாகணும்னு நினைக்க மாட்டாங்களே!  

நான் பாட்டுக்கு ஒரு ஓரத்தில் எங்காவது கிடந்துட்டுப் போறேன! 

நான் மீதி இருக்கிற நாளை வாழ நினக்கறேன் சார்!  

நான் சாகணும்னு யாரும் நினைக்கக்கூடாது!

தேர்வு முடிவு!




பையனின் தேர்வு முடிவைப் பார்த்ததும் சாந்திக்கு பகீரென்றது. 400 மார்க்குக்கு மேல் வரும் என்று எதிர்பார்த்திருந்தாள். ஆனால் 256 மார்க்குதான் வந்திருந்தது.

வெடித்துச் சிதறிய சாந்தியை கணவர் ஆறுதல்படுத்தினார்.

டென்ஷனாகாத.. இனிமே ஒழுங்கா படிப்பான்!

ஆமா கிழிப்பான், ஏண்டா, அடிக்கடி டி.வி. பார்க்காதே, படிக்கிற வழியைப் பாருன்னு எத்தனை தரம் சொன்னேன்.

பையன் அலட்டிக் கொள்ளவில்லை. தப்பு அவன் மேல இல்லடி, நம்ம மேலதான்!

நாம 
ன்னங்க பண்ணினோம்?

டி.வி. பார்க்காதே, படின்னு அவனைச் சொல்லிட்டு நாம டி.வி. பார்த்துட்டு இருந்தோம். சாயங்காலம் 6 மணிக்கு ஆரம்பிச்சு நைட்டு 10 மணி வரைக்கும் நீ சீரியல் பார்த்துட்டு இருந்தே!

இடையில் நான் நியூஸ் பார்த்துட்டு இருந்தேன். அவனை எங்கே படிக்க விட்டோம்? 

இனிமேலாவது நாம ஒழுங்கா இருப்போம்!

அவனை நல்ல படியா படிக்க விடுவோம் !

கடவுளை நம்பினோர் கைவிடப்படார் !


உருகி உருகி நான் பிராத்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது...

நான் : கடவுளே நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா?..

கடவுள் : தாரளமாக கேள்..

நான் : பொறுமையா கோபப்படாமல் பதில் சொல்வீர்களா?..

கடவுள் : சத்தியமாக!..

நான் : இன்னைக்கு ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளை கொடுத்தீங்க?..

கடவுள் : என்னப்பா சொல்லுற நீ?..

நான் : எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே லேட்..

கடவுள் : ஆமாம்! அவசரத்துல என்னை கூட கும்பிடாம ஆபீஸ்க்கு புறப்பட்டாய்..

நான் : கிளம்பினதே லேட் இதுல என் பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது..

கடவுள் : ஆமாம் எனக்கு தெரியும்..

நான் : சரி! பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல ஒரே டிராஃபிக் ஜாம். ஆபீஸ்க்கு ஒரு மணிநேரம் லேட்..

கடவுள் : ஆமாம்! தெரியும்..

நான் : மதியம் சாப்பிட கொஞ்சம் லேட் ஆகிடிச்சு அதுக்குள்ளே கேண்டீன்ல சாப்பாடு காலியாயிடுச்சு கடைசீயில பசிக்கு ஏதோ கிடைச்சதை அரைகுறையா சாப்பிட்டுட்டு வந்தேன்..

கடவுள் : ஆமாம் அதுவும் தெரியும்..

நான் : வங்கியில் பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன். அது விஷயமா ஒருத்தர் கிட்டே ஃபோனை எதிர்பார்த்திருந்தேன். சாயந்திரம் வீட்டுக்கு திரும்பும்போது அவர் கிட்டேயிருந்து எனக்கு கால் வந்தது. பேட்டரியில சார்ஜ் இல்லாம மொபைல் அந்த நேரம் பார்த்து ஆஃப் ஆயிடிச்சு..

கடவுள் : ஆமாம் தெரியும்..

நான் : அதை பிடிச்சி! இதை பிடிச்சி! முட்டி மோதி வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் ரூம்ல ஏ.சி.யில உட்கார்ந்து டி.வி.யை பார்த்து ரிலாக்ஸ் பண்ணலாம்னா ஏ.சி. ரிப்பேர் ஆகி வேலை செய்யல..

இன்னைக்கு எனக்கு எதுவுமே சரியில்லையே ஒரு நாள் உங்களை கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா?..

(கடவுள் பலமாக சிரிக்கிறார். சில வினாடிகள் கழித்து! பேச ஆரம்பிக்கிறார்)

கடவுள் : இன்னைக்கு உன் கர்மாவின் படி மிகவும் மோசமான நாள். நீ காலை அசந்து தூங்கிகிட்டிருக்கும்போதே மரணதேவன் உன்னை நோக்கி வந்துட்டான். அவன் கூட வாக்குவாதம் பண்ணி உன்னை காப்பாற்ற வேண்டி உன்னை கொஞ்சம் அதிக நேரம் தூங்க வெச்சேன்...

நான் : (அதிர்ச்சியுடன்) ஓ..

கடவுள் : உன் பைக்கை பஞ்சராக்கினேன். ஏன்னா! நீ ஆபீஸ் போகும்போது நீ போற ரூட்ல பிரேக் பிடிக்காம தாறுமாறா ஓடுற வேன் ஒன்னு உன் மேல இடிக்கிறதா இருந்தது. அந்த வேன் ஆக்சிடெண்ட்டாகி தான் டிராபிக் ஆச்சு. நீ பைக்ல போயிருந்தா அந்த வேன் மரணதேவன் கணக்குப்படி உன் மேல இடிச்சிருக்கும்..

நான் : (அடக்கத்துடன்) ஓ..

கடவுள் : மதியம் உனக்கு சாப்பாடு கிடைக்காம போனதுக்கு காரணம் கடைசீயா மிச்சமிருந்த குழம்புல எலிக்கு வெச்சிருந்த எலி பாஷாணம் எப்படியோ தவறி விழுந்துடிச்சு! யாரும் அதை கவனிக்கல அதை நீ சாப்பிட்டிருந்தா என்னாகியிருக்கும்?..

நான் : (கண்கலங்கியபடி) ம்ம்..

கடவுள் : சாயந்திரம் உன் அலைபேசி சுவிச் ஆப் ஆனதுக்கு காரணம்! அந்த நபர் உனக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டிவிட இருந்தார். எனவே அதிலிருந்து காப்பாற்ற வேண்டி உன் ஃபோனை செயலிழக்கச் செய்துவிட்டேன்..

நான் : ம்ம்..

கடவுள் : அப்புறம் அந்த ஏ.சி. மெஷின் எர்த் கோளாறு ஏற்பட்டு அதில் முறையற்ற முறையில் கரண்ட் வந்துகொண்டிருந்தது. ஒருவேளை முகம் கழுவிக்கொண்டு ஈர கைகளுடன் எப்போதும் போல நீ சுவிச்சை தொட்டிருந்தால் அந்த கணமே தூக்கி எறியப்பட்டிருப்பாய், ஆகையால் அதை செயலிழக்கச் செய்தேன்.

என்னை வணங்க மறந்ததால் அன்று முழுதும் நீ சோதனையை சந்தித்தாய் என்று என்னை தவறாக நினைத்துகொண்டாய். ஆனால் அனுதினமும் நீ என்னை வணங்கி வந்த காரணத்தால் நீ என்னை மறந்த அன்றும் கூட நான் உன்னை காக்க மறக்கவில்லை..

நான் : இப்போ புரிகிறது இறைவா! என் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பும் அக்கறையும். இது புரியாமல் உங்களை ரொம்பவும் நிந்தித்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்..

கடவுள் : மன்னிப்பு கேட்காதே! என்னை நம்பு, எப்போதும் எந்த சூழ்நிலையிலும். அது போதும்!..

நான் : நிச்சயமாக..

கடவுள் : நீ திட்டமிடுவதை விட உனக்காக நான் திட்டமிடுவது எப்போதும் சரியாகவே இருக்கும்..

நான் : இனி நிச்சயம் உங்களை சந்தேகப்படமாட்டேன். உங்கள் அருளை சந்தேகப்படமட்டேன். கண்ணை இமை காப்பது போல ஒவ்வொரு கணமும் நீங்கள் என்னை காப்பதை புரிந்துகொண்டேன்..

கடவுள் : என்னை நம்பியிருப்பவர்களை நான் என்றும் கைவிடுவதில்ல!!!

நம்மை படைத்த இறைவன் எப்போதும் எந்த நேரங்களிளும் எந்த சூழ்நிலையிலும் நம்மை கைவிட போவதில்லை...

ஓம் சிவ சிவ ஓம்

Tuesday, November 21, 2017

சுதந்திரம் !


ஒழுக்கம் !

அப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார்,

“செல்லம்!.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”

பொண்ணு  கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னாள் “நூல்தாம்ப்பா பட்டத்தை இழுத்துப் பிடிச்சிருக்கு”.

அப்பா சொன்னார், “இல்லை மகளே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு”

மகள் சிரித்தாள். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.

“ஒழுக்கம் இப்படியானதுதான் மகளே!. அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். அதிலிருந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரம் என்று நினைத்திருக்கிறாய். ஆனால் அந்த சுதந்திரம் ரொம்ப தாற்காலிகமானது. சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய்.

ஒழுக்கம்தான் உன்னைக் கொடி கட்டிப் பறக்க வைத்துக் கொண்டிருப்பது. உன்னை அதிலிருந்து அறுத்துக் கொள்ளாதே” என்றார்

ஏமாற்றுதல்! ஏமாற்றதே ! ஏமாறாதே !


ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர். அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு வெகுவாக சந்தேகம். தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்தம் இருந்தது. அரை கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை. எடை குறைவாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.


சண்டை முற்றி ஒரு நாள் நீதிபதி முன் வழக்கு வந்தது.

வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிறுத்துக் காட்டிய ரொட்டிக் கடைக்காரர்,

"பாருங்கள் 450 கிராம் தான் இருக்கிறது. இப்படித்தான் என்னை பலமுறை ஏமாற்றி இருக்கிறார். இவரை தண்டியுங்கள்" என்று கூச்சலிட்டார்.

நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து "என்ன சொல்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் 50 கிராம் குறைவாகத் தரலாமா? அது குற்றமில்லையா?"என்று கேட்டார்.

"ஐயா.. என்னிடம் எடைக்கல் கிடையாது. அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக் கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவது வழக்கம். பெரும்பாலும் இவரது கடை ரொட்டியைத் தான் வாங்குகிறேன். அதையே அவ்வாறு பயன்படுதுவேன். பாக்கெட் மீது எடை 500கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி இவரது ரொட்டியை எடைக் கல்லுக்குப் பதிலாக தராசில் பயன்படுத்துவேன். இப்போது பாருங்கள் என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சம எடையாக இருக்கும்." என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார்.

சமமாக இருந்தது.

நீதி: எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே ஒழிய தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை.


Friday, November 17, 2017

குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் !

ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.

குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் "எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?" என்று கேட்டான்.

குயவன் "அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை.. நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு ... கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உன்னைப் போல வெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது? அலுப்புத் தட்டுகிறது போ!" என்று கொட்டாவி விட்டான்.

அதற்கு வைர வியாபாரி சொன்னான் "உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி... நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப் படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு? உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே. வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம். இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும்..." என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான்.

எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா? மகிழ்ச்சியான வேலைதான் எது? என்று இருவரும் சிந்தித்தார்கள். அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை.

ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று "ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்று கேட்டார்கள்.
பெரியவர் புன்னகைத்துக் கொண்டே "உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?" என்று கேட்டார்.

அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில் கூறினார்கள்.

"உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்?" என்று அவர்களிடம் கேட்டார்.

"எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்!" பயத்துடன் பதில் சொன்னார்கள்.

"அப்படியானால் உங்கள் வேலைக்கு என்ன மதிப்பு?" பெரியவர் கேட்டார்.

"களிமண்ணை பாண்டமாக உருவாக்குவதும், இயற்கையில் கிடைக்கும் வைரத்தை மின்னல் போல் பளபளக்கச் செய்வதும்தான்" என்று இருவரும் சொன்னார்கள்.

"உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். அந்தத் திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள். 
 
மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் உங்கள் நோக்கிலேயே இருக்கிறது. செய்யும் வேலையில் இல்லை. குறைகளை அவற்றை நிறை செய்யும் வாய்ப்பாகப் பார்ப்பவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். குறையை அதில் உள்ள சிரமங்களாகப் பார்ப்பவன் வருத்தத்துடன் இருக்கிறான்" என்று முடித்தார்

விவாகரத்து ! ...................விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை பந்தம் என்றென்றும் அறுபடாது.

புதுமணத் தம்பதிகள் அவர்கள்.
கடுமையான கருத்து வேறுபாடு.
விவாகரத்தில் போய் நிற்கிறது.



யார் யாரோ சமாதானம் செய்தும் அவர்கள் இருவரும் சமரசம் ஆகவில்லை.
ஒரு நாள் ஓர் உறவுக்கார பெரியவர் அவர்கள் வீட்டுக்கு வருகிறார். சமாதானம் செய்ய,,,,
இவர்கள் அலட்சியமாக வரவேற்று பேசுகின்றனர்.
பிரச்னை தீரவில்லை.
இறுதியாக பெரியவர் ஒரு கருத்தை முன் வைக்கிறார்.
நான் சொல்வதை நீங்கள் செய்து விட்டால், நீங்கள் உங்கள் விருப்பப்படி பிரியலாம் எனச் சொல்ல, அவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
இப்போது பெரியவர், ஒரு பூ கட்டும் மெல்லிய நூலை காண்பித்து இதனை நீங்கள் பிய்க்க வேண்டும்(இழுத்து அறுக்க வேண்டும்)
என்கிறார்.
தம்பதியர் முகத்தில் அலட்சிய புன்னகை.
ப்பூ... இவ்வுளவு தானா?என்பது போல...
பெரியவர் அந்த நூலின் ஒரு முனையை தம்பதியரின் கையிலும்,
மறு முனையை தன் கையிலும் வைத்துக் கொண்டு,
அறுக்கச் சொன்னார்.
தம்பதியர் நூலை இழுக்க,.....
பெரியவர் அவர்கள் இழுத்த, இழுப்புக்கெல்லாம்
கூடவே செல்கிறார்.
நூல் இறுகவே அவர் விடாமல் தளர்வாகவே,
பிடித்தபடி உடன் செல்ல,
கடைசி வரை அவர்களால் அந்த மெல்லிய நூலை அறுக்கவே முடியவில்லை.
பெரியவர் சொன்னார்...
இந்த மெல்லிய நூல் தான் வாழ்க்கை...
விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை பந்தம் என்றென்றும் அறுபடாது.
இழுத்துப் பிடித்தால், பட்டென தெறித்து பயனில்லாமல் போய்விடும் என்றார்.
படாரென அவர் காலில் விழுந்த தம்பதியர், வாழ்க்கைத் தத்துவத்தை புரிந்து கொண்டோம் எனக் கூறி வணங்கினர்.
வாழ்க வளமுடன்.

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...