Total Pageviews

Wednesday, March 23, 2016

அறிவும் திறமையும் !

நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல
goundamani images க்கான பட முடிவுgoundamani images க்கான பட முடிவுgoundamani images க்கான பட முடிவுgoundamani images க்கான பட முடிவு
தலைக்கனம் பிடித்த ஒரு பண்டிதர் இருந்தார். அடர்த்தியான புருவம் , பெரிய மீசை , அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்க்குச்சி போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே அவரது அடையாளம் . 

வீதியில் அவரைக் கண்டுவிட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும் ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால் மட்டந்தட்டிவிடுவார். இதில் சிலர் அழுதுவிடுவது கூட உண்டு. 

ஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை. ஊர் எல்லை வரை வந்து விட்டார். அங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதரைப் பார்த்து விட்டார்.

அவரது உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும், அதை அவர் சுத்தமாய்த் துவைத்து , நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதம் அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது. இது பண்டிதருக்கு எரிச்சலை மூட்டியது. இன்று இந்த மனிதனைக் கதறி அழவைத்தே ஆகவேண்டுமென்று முடிவெடுத்து அவரது கடையை நெருங்கினார். 

" என்னப்பா ! முடி வெட்ட எவ்வளவு ? சவரம் பண்ண எவ்வளவு ?" என்றார்.
அவரும் "முடிவெட்ட நாலணா , சவரம் பண்ண ஒரணா சாமி ! " என்று பணிவுடன் கூறினார். பண்டிதர் சிரித்தபடியே ,
"அப்படின்னா என் தலையை சவரம் பண்ணு " என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார் .
வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை . வேலையை ஆரம்பித்தார் .
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான். நாவிதர் கோபப்படுவார் என்று எதிர்பார்த்திருந்தார். அவர் அமைதியாக இருக்கவே அடுத்த கணையைத் தொடுத்தார் . 

" ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது . உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க ? 

" இந்தக் கேள்வி அவரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.
"நல்ல சந்தேகங்க சாமி . நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனாலதான் நாங்க நாவிதர்கள். எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா? " 
இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது. அடுத்த முயற்சியைத் துவங்கினார் .
"இதென்னப்பா,கத்தரிக்கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு . கோல் எங்கே போச்சு ?''

இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது. 

"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க " என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் . 

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம் . கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார் .

" எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற . ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு " . 

இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது . அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம் . 

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார். கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்.

இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார். பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார் ,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?" 

பண்டிதர் உடனே ஆமாம் என்றார்
.
கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்தார்.

"மீசை வேணுமுன்னிங்களே சாமி. இந்தாங்க " . பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய். அதிர்ச்சியில் உறைந்து போனார். 

நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார் . அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,

"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா ?" 

இப்போது பண்டிதர் சுதாரித்தார்.

"வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான் " . உடனே சொன்னார். 

"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம் . வேண்டவே வேண்டாம்".

நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார் .

"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது ". என்றபடி கண்ணாடி அவர் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்.

நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல் , முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல் , அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது. 

கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு நடையைக் கட்டினார்.

நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல. இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்.!!!!!!!

Saturday, March 19, 2016

தேவதை !




இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.
 
”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.
°•○●
கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?
 
(வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்).
°•○●
 
தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.
 
அவள் சொன்னாள்
 
விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்; உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?
 
அவன் சொன்னான், "என்ன கேட்டாலும் தருகிறேன்” சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,
 
♡♡♡ "தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”.
 
°•○●
 
இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது. இவனுக்கு நாடும் கிடைத்தது. அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.
 
அவள் கேட்டாள்
 
"நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.
 
அவள் சொன்னாள்,
 
"நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;
 
ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன்.
 
இதில் எது உன் விருப்பம்?” என்றாள்.
 
அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான் "இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்; முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று, அவள் சொன்னாள், "முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்.
°•○●
 
ஆம்!
 
பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.

அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!

👆🏻👆🏻👆🏻👆
🏻👆🏻
Thanks to C.Malathi

Friday, March 18, 2016

கைத்தடி! ஆசை !!

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?'' என்று கேட்டார்.
வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார், ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.

- இராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை

Monday, March 14, 2016

மனக்கணக்கு !

=சத்குருவின் குட்டிக் கதை =

ஒரு அழகான சிறுமி, தன் கைகளில் இரண்டு ஆப்பிள்களை வைத்திருந்தாள்...
அங்கு வந்த அவளின் தாய், "நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கிறாய்.. ஒன்று எனக்கு கொடு.!." என்றாள்...


தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள். அடுத்ததாக இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்...


தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...


உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்...


"அம்மா இந்த ஆப்பிள்தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க.!. என்றாள்...


நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.,.


எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்.,.


அறிவு விஸ்தீரமாகவும் இருக்கலாம்.,.


ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்...


அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து, அவரை அறியவும்...


நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்...


எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்...


மனக்கணக்கு தவறலாம், மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது.!!.

- SADHGURU -

இறைவனின் அருட்கொடை !




ஒரு கட்டுமான எஞ்சினியர்…13 வது…
மாடியிலே வேலை செய்து
கொண்டு இருந்தார்…

ஒரு
முக்கியமான வேலை…

கீழே ஐந்தாவது
மாடியில் வேலை செய்து கொண்டு
இருந்த கொத்தனாருக்கு முக்கியமான
செய்தி சொல்ல வேண்டும்…

செல் போனில் கொத்தனாரை
கூப்பிட்டார் எஞ்சினியர்..

ம்ஹும்..கொத்தனார் வேலை
மும்முரத்தில், சித்தாளுடன் பேசிக்
கொண்ட இருந்தார்…

போனை எடுக்க
வில்லை..

என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்..

அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே
பார்க்கவில்லை…

இவ்வளவுக்கும்…
கொத்தனார் வேலை செய்யும் இடத்தில்
இருந்து , அவரால் என்ஜினியரை
நன்றாகப் பார்க்க முடியும்…

எஞ்சினியர் என்ன செய்வதென்று
யோசித்தார்…

ஒரு பத்து ரூபாய்
நோட்டை எடுத்து, மேலே இருந்து,
கொத்தனார் அருகில் போட்டார்…

ரூபாயைப் பார்த்த கொத்தனார், அதை
எடுத்து பையில் போட்டுக்
கொண்டார்…

ஆனால்சற்றும், மேல்
நோக்கிப் பார்க்கவில்லை…

என்ஜினியருக்கு ஒரே கோபம்..

இருந்தாலும் பொறுத்துக் கொண்டு…

ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார்
மேல் போட்டார்…

அதையும்
எடுத்து சட்டைப் பையில் வைத்துக்
கொண்டு… கொத்தனார் மும்முரமாக
இருந்தார்…

எஞ்சினியர்.. பொறுமை
இழந்து ஒரு சின்ன கல்லை எடுத்து,
கொத்தனார் மீது போட்டார்…

அது அவரது தோள் மீது பட்டு நல்ல
வலியோடு, மேலே பார்த்தார்…

அப்பொழுதுதான் எஞ்சினியர் தன்னை
அழைத்தார் என்பதை உணர்ந்தார்…

மனிதனும் அப்படித்தான்…
மேலே
இருந்து இறைவன் அவனை அழைப்பது
அவனுக்கு புரிவதில்லை… உலக
மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான்..
இறைவன் அவனுக்கு அருட்கொடைகளை அளிக்கின்றான்..

அப்பொழுதும் அவன் இறைவனை
ஏறிட்டுப் பார்ப்பதில்லை..

ஆனால் ஒரு
துன்பம் நேரும் பொழுது தான் இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான்.

📢துன்பங்கள் வரும் நேரம்…இறைவன்
உன்னைத் தேடி அழைக்கும் நேரம்
என்று பொருள்

Sunday, March 13, 2016

புலி !


ஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள்.

முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.

மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து வந்து விட்டாள். மறுநாள் சென்றாள் புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனாலும் திரும்பி விட்டாள்.

அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.

புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.

முனிவர் கூறினார் இனி உனக்கு மூலிகை தேவையில்லை. நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய். அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன?”

முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது.அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்.

Friday, March 11, 2016

நாம் மேலே இருக்கிறோம் !

ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன, திடீரென்று கோயிலில் திருப்பணி நடந்தது அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி பறந்தன வழியில் ஒரு தேவாலயத்தை கண்டன.

அங்கு சில புறாக்கள் இருந்ததன.

அவைகளோடு இந்த புறாக்களும் அங்கு குடியேறின. சில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ் வந்தது. தேவாலயம் புதுப்பிக்க தயாரானது இப்போது இங்கு  இருந்து சென்ற பறவைகளும் அங்கு  இருந்த பறவைகளும் வேறு இடம் தேடி பறந்தன .

வழியில் ஒரு மசூதியை கண்டது அங்கும் சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின சில நாட்கள் கழித்து ரமலான் வந்தது  வழக்கம் போல்  இடம் தேடி பறந்தன.


இப்போது மூன்று  இடத்திலும் உள்ள புறாக்களும் கோயிலில் குடியேறின.

கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக் கொண்டு இருந்தனர்.

ஒரு குஞ்சுப்புறா  தாய் புறாவுடன் கேட்டது  "ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?"  என்று...

அதற்கு அந்த தாய் புறா சொன்னது "நாம் இங்கு இருந்த போதும்  புறா தான், 

தேவாலயத்துக்கு போனபோதும் புறா தான், 

மசூதிக்கு போன போதும் புறா தான் ",

"ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் இந்து"
"சர்ச்க்கு போனால் "கிறிஸ்த்தவன்"
"மசூதிக்கு போனால் "முஸ்லிம்" என்றது;

குழம்பிய குட்டி புறா "அது எப்படி நாம் எங்கு  போனாலும் புறா தானே அதுபோல தானே மனிதர்களும் "என்றது.

அதற்கு தாய் புறா  "இது புரிந்ததனால் தான் நாம் மேலே இருக்கிறோம்,

இவர்கள் கீழே இருக்கிறார்கள்" என்றது. .

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...