Total Pageviews

Friday, March 18, 2016

கைத்தடி! ஆசை !!

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ''அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?'' என்று கேட்டார்.
வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார், ''அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?''

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.

- இராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை

Monday, March 14, 2016

மனக்கணக்கு !

=சத்குருவின் குட்டிக் கதை =

ஒரு அழகான சிறுமி, தன் கைகளில் இரண்டு ஆப்பிள்களை வைத்திருந்தாள்...
அங்கு வந்த அவளின் தாய், "நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கிறாய்.. ஒன்று எனக்கு கொடு.!." என்றாள்...


தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள். அடுத்ததாக இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்...


தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...


உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்...


"அம்மா இந்த ஆப்பிள்தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க.!. என்றாள்...


நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.,.


எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்.,.


அறிவு விஸ்தீரமாகவும் இருக்கலாம்.,.


ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்...


அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து, அவரை அறியவும்...


நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்...


எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்...


மனக்கணக்கு தவறலாம், மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது.!!.

- SADHGURU -

இறைவனின் அருட்கொடை !




ஒரு கட்டுமான எஞ்சினியர்…13 வது…
மாடியிலே வேலை செய்து
கொண்டு இருந்தார்…

ஒரு
முக்கியமான வேலை…

கீழே ஐந்தாவது
மாடியில் வேலை செய்து கொண்டு
இருந்த கொத்தனாருக்கு முக்கியமான
செய்தி சொல்ல வேண்டும்…

செல் போனில் கொத்தனாரை
கூப்பிட்டார் எஞ்சினியர்..

ம்ஹும்..கொத்தனார் வேலை
மும்முரத்தில், சித்தாளுடன் பேசிக்
கொண்ட இருந்தார்…

போனை எடுக்க
வில்லை..

என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்..

அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே
பார்க்கவில்லை…

இவ்வளவுக்கும்…
கொத்தனார் வேலை செய்யும் இடத்தில்
இருந்து , அவரால் என்ஜினியரை
நன்றாகப் பார்க்க முடியும்…

எஞ்சினியர் என்ன செய்வதென்று
யோசித்தார்…

ஒரு பத்து ரூபாய்
நோட்டை எடுத்து, மேலே இருந்து,
கொத்தனார் அருகில் போட்டார்…

ரூபாயைப் பார்த்த கொத்தனார், அதை
எடுத்து பையில் போட்டுக்
கொண்டார்…

ஆனால்சற்றும், மேல்
நோக்கிப் பார்க்கவில்லை…

என்ஜினியருக்கு ஒரே கோபம்..

இருந்தாலும் பொறுத்துக் கொண்டு…

ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார்
மேல் போட்டார்…

அதையும்
எடுத்து சட்டைப் பையில் வைத்துக்
கொண்டு… கொத்தனார் மும்முரமாக
இருந்தார்…

எஞ்சினியர்.. பொறுமை
இழந்து ஒரு சின்ன கல்லை எடுத்து,
கொத்தனார் மீது போட்டார்…

அது அவரது தோள் மீது பட்டு நல்ல
வலியோடு, மேலே பார்த்தார்…

அப்பொழுதுதான் எஞ்சினியர் தன்னை
அழைத்தார் என்பதை உணர்ந்தார்…

மனிதனும் அப்படித்தான்…
மேலே
இருந்து இறைவன் அவனை அழைப்பது
அவனுக்கு புரிவதில்லை… உலக
மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான்..
இறைவன் அவனுக்கு அருட்கொடைகளை அளிக்கின்றான்..

அப்பொழுதும் அவன் இறைவனை
ஏறிட்டுப் பார்ப்பதில்லை..

ஆனால் ஒரு
துன்பம் நேரும் பொழுது தான் இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான்.

📢துன்பங்கள் வரும் நேரம்…இறைவன்
உன்னைத் தேடி அழைக்கும் நேரம்
என்று பொருள்

Sunday, March 13, 2016

புலி !


ஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள்.

முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.

மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து வந்து விட்டாள். மறுநாள் சென்றாள் புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனாலும் திரும்பி விட்டாள்.

அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.

புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.

முனிவர் கூறினார் இனி உனக்கு மூலிகை தேவையில்லை. நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய். அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன?”

முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது.அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்.

Friday, March 11, 2016

நாம் மேலே இருக்கிறோம் !

ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன, திடீரென்று கோயிலில் திருப்பணி நடந்தது அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி பறந்தன வழியில் ஒரு தேவாலயத்தை கண்டன.

அங்கு சில புறாக்கள் இருந்ததன.

அவைகளோடு இந்த புறாக்களும் அங்கு குடியேறின. சில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ் வந்தது. தேவாலயம் புதுப்பிக்க தயாரானது இப்போது இங்கு  இருந்து சென்ற பறவைகளும் அங்கு  இருந்த பறவைகளும் வேறு இடம் தேடி பறந்தன .

வழியில் ஒரு மசூதியை கண்டது அங்கும் சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின சில நாட்கள் கழித்து ரமலான் வந்தது  வழக்கம் போல்  இடம் தேடி பறந்தன.


இப்போது மூன்று  இடத்திலும் உள்ள புறாக்களும் கோயிலில் குடியேறின.

கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக் கொண்டு இருந்தனர்.

ஒரு குஞ்சுப்புறா  தாய் புறாவுடன் கேட்டது  "ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?"  என்று...

அதற்கு அந்த தாய் புறா சொன்னது "நாம் இங்கு இருந்த போதும்  புறா தான், 

தேவாலயத்துக்கு போனபோதும் புறா தான், 

மசூதிக்கு போன போதும் புறா தான் ",

"ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் இந்து"
"சர்ச்க்கு போனால் "கிறிஸ்த்தவன்"
"மசூதிக்கு போனால் "முஸ்லிம்" என்றது;

குழம்பிய குட்டி புறா "அது எப்படி நாம் எங்கு  போனாலும் புறா தானே அதுபோல தானே மனிதர்களும் "என்றது.

அதற்கு தாய் புறா  "இது புரிந்ததனால் தான் நாம் மேலே இருக்கிறோம்,

இவர்கள் கீழே இருக்கிறார்கள்" என்றது. .

குருடி! குரு டி!




ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண் இல்லை. அவள் கணவன் திடிரென ஒரு நாள் இறந்து விட்டார். கணவரின் இறப்பிற்கு பின்பு அவளது வாழ்வின்
ஒவ்வொரு நொடியும் தன் மகனின் எதிர்கால வாழ்வை குறித்த சிந்தனையாகவே இருந்தது.
 
தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்தாள்.
மீதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளுக்கு தயார் செய்திருந்தாள்.

நல்ல ஒழுக்கமிக்க மகன் இரக்கமானவன்  புத்தி சாலி ஊரில் எல்லோரும் புகழும் வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன  பரிட்சையில் முதல் தரத்தில் தேறினான்
 
இந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த தாய் ஆவலுடன் பாடசாலை நோக்கி ஓடினாள் மகனின்
வகுப்பறை எது என அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள்.

இறைவனை புகழ்ந்தாள் சந்தோஷத்துடன் வீடு வந்து அவனுக்கு பிடித்தமான உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.

மகனின் வருகையை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள் மகன் வந்தவுடன் வாஞ்சையுடன் அருகில் சென்றாள். ஆனால் மகன்
முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன் பேச வில்லை.  நேராக அறைக்குள் சென்று படுத்து விட்டான்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பதற்றத்துடன்
ஓடிச்சென்று என்னவென்றாள் கவலையுடன். மகன் சொன்னான், " நீ ஏன் என் பள்ளிக்கு வந்தாய்?.
 
அங்கு அழகான பணக்காரர்கள் மட்டுமே வருவார்கள்.  நீயோ குருடி. என் நண்பர்கள் என்னை குருடியின் மகன் என கூப்பிடுகின்றனர். இது பெரிய
அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என் பள்ளி கூடம் பக்கமே வராதே" என கத்தினான் கோபமாக. அதிர்ந்து போனாள் தாய். ஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது என
சத்தியம் செய்தாள்.

இப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட ஆரம்பித்தது.  தன்னை தேடி வரும் நண்பர்கள் முன் வர வேண்டாம் என தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற பின், தனக்கு குருடியுடன் இருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான். 

ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான். அவள் கதறி துடித்தாள், தினமும் தன் மகனை நினைத்து.
 
இறுதி பரீட்சையில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரிக்கு மகன் தேர்வானது அவளுக்கு தெரியவந்தது. தலை நகர் சென்று படிக்க வேண்டும்.

நிறைய செலவாகும். தனது மீதமிருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று மகனுக்கு கொடுத்து அனுப்பினாள். 5 வருடம் பறந்து சென்றன.
 
இப்போது அவளது மகன் ஒரு டாக்டர்.
 
அவனை பார்க்க ஆசையாய் இருந்தால் பல முறை
முயற்ச்சி செய்தும் அவனனை பார்க்க முடியவில்லை அவன் அனுமதிக்கவும் இல்லை. ஒரு கடிதம் மகனிடம் இருந்து வந்தது.

அதில், அம்மா நான் இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த டாக்டர்களில் ஒருவன். எனக்கும் ஒரு செல்வந்தரின் மகளுக்கும் திருமணம் நடக்க உள்ளது. அவளும் ஒரு டாக்டர். உன்னை போல் குருடியின் மகன் டாக்டர் என தெரிந்தால் என் திருமனமும்,கௌரவம் பாதிப்படையும். ஆதலால்  நான் இந்த நாட்டை விட்டும் உன் பார்வையை விட்டும் கண் காணாத தேசம் செல்கிறேன். இனி என்னை தேடாதே இது தான் அந்த கடிதத்தின்வரிகள். துடித்து போனாள் தாய்.
 
சில வருடங்கள் கடந்தன. முதுமையும், வறுமையும், அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம் எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி காரணமாக ஒரு பணக்கார வீட்டில் உணவுக்காகவேலை செய்து வந்தாள் அந்த தாய். அந்தவீட்டின் எஜமானி இளம்வயது பெண். நல்லஇளகிய குணம் படைத்தவள்.இரட்சிக்கபட்டவள். அவளும்ஒரு டாக்டராகவே இருந்தாள். இந்ததாயை தனது தாயாகநேசித்து போஷித்து வந்தாள். எல்லாம் நன்றாகவே நடந்தன. அந்த எஜமானியின்கணவன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தான். 

தனது எஜமானியின் கணவர் வருகிறார்என்பதனால் வாய்க்கு ருஷியாக நல்ல உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள் அந்த வேலைகாரியான குருட்டு தாய்.

வீடு வந்த அவளது கணவன், சாப்பிட அமர்ந்தான். உணவை இளம் மனைவி பரிமாற ஆசையாக சாப்பிட்டான். திடீரென அவன் முகம் மாறியது. டக்கென்று திரும்பி தன் மனைவியின் முகத்தை பார்த்து கேட்டான், "இதனை நீ சமைத்தாயா?" என்று. 

மனைவி குழப்பத்துடன் இல்லையே என்றாள். " அப்படியானால் யார் சமைத்தது? என்றான். வீட்டு வேலைக்காரி சமைத்தாள்

என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன் அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான். உள்ளே அவனது குருட்டு தாய்.

அதிர்ந்து போனான். இவள் இன்னும் உயிரோடு இருக்கிறாளா என்று ஆத்திரமும், வெறுப்பும் அவன் மூளையை ஆட்டுவித்தது. அந்த தாய்க்கோ என் மருமகளா என் எஜமானி என்றும் தன் மகனை கண்ட சந்தோஷமும், மகிழ்ச்சியும் அந்த தாயின் இதயத்தை நிரப்பின. உணர்ச்சிகளால் இருவருமே பேசவில்லை.

மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த கணவன் சொன்னான் தன் மனைவியை பார்த்து, "இந்த குருடியை உடனடியாக அனுப்பி விடு என்று கத்தினான் அவன் சத்தம். அடுப்படியில் நின்ற அந்த அபலை தாயின் இதயத்தில் முட்டி மோதி நின்றது. துவண்டு போனாள். 

வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ வேண்டுமா என எண்ணி அழுதாள்.

அந்த இளம் மனைவியோ அது தனது கணவனின் தாய் என்று தெரிந்ததும் இங்கேயே இருக்கட்டும் என்று எவ்வளவோ சொல்லியும் தனது கணவனின் பிடிவாதமும், கோபமும், ஆவேசமும் எல்லை மீறி செல்லவே வேறு வழியின்றி அந்த தாய்க்கு போதுமானபணம் கொடுத்து முன்பு அவள் வாழ்ந்து வந்த ஊருக்கே மீண்டும் அனுப்பி வைத்தாள் வேதனையுடன்...

காலம் கடந்தது  இப்போது அந்த டாக்டரின் தலை மயிர்கள் பழுக்க ஆரம்பித்து விட்டன. உடல் பலம் சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின் சுயநலன், நன்றி மறத்தல் போன்ற காரணங்களினால் கருத்து மோதல் ஏற்பட்டு அவன் மனைவியும் விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம் புரிந்து கொண்டாள்.

இப்போது டாக்டரிடம் பணத்தை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.

எதிர்காலங்கள் சூனியமான நிலையில், ஆறுதலுற்கு கூட யாரும் இன்றி தனி மரமாக நின்றான்.
 
மெல்ல மெல்ல தான் தன் தாயிற்கு செய்த துரோகங்கள், அநியாயங்கள், நோகடிப்பு அவன் உள்ளத்ததை வந்து தொட ஆரம்பித்தன.

ஒரு முறை ராத்திரியில் எழுந்து அம்மா என கதறி அழும் அளவிற்கு அவனிற்கு தனது பாவங்களின் புரிந்தது.

தாயை பார்க்கவேண்டும் என நினைத்தான். ஆனால் போக வில்லை.

ஒரு நாள் காலையில் அவன்
 
தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது.
 
அவனது தூரத்து உறவினர் ஒருவர் பேசினார். "உன் தாய் மரண தறுவாயில் இருக்கிறாள் நீ உடனே வா என்பதே அந்த செய்தி. உடனடியாகவே அவன் தனது காரில் கிளம்பி தன் தாய் இருக்கும் இடத்திற்கு சென்றான். அவன் சென்ற போது, அவளது உயிர் பிரிந்து விட்டது.

உயிர் போன நிலையில் அவளை கட்டிலில் படுக்க வைத்திருந்தனர். இப்போது அம்மா என கண்ணீர் விட்டு கதறினான்... அழுதான்..

தன் தாயை நல்ல முறையில் அடக்கம் செய்ய உதவினான். எல்லாம் முடிந்தது அப்போது ஒரு கடிதத்தை அவனது உறவினர் கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன் வருவானாக இருந்தால் மட்டும் கொடுக்குமாறும், இல்லையெனில் எரித்து விடுமாறும் தயார் கடைசி தருவாயில் வேண்டிக் கொண்டதாகவும் அவர் சொன்னார். பிரித்து வாசித்தான். அவன் கண்களில் இருந்த கண்ணீர் வழிந்தது.

அதில் இருந்த வரிகள் இதுதான்....

என் அன்பு மகனே , எனக்கு தெரியும், என் உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும் பிடிக்காது என்று. அதனாலேயே, எனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால் மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன்.மற்றபடி எனது அன்பு என்றும் மாறாதது. அது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த விஷயம். மகனே நான் குருடி தான். உன் தாய் குருடியாக இருந்திருக்க கூடாது தான். எனக்கு உன் உள்ளம் புரிகிறது.

உன் உணர்வுகளை நான் பெரிதும் மதிக்கின்றேன். நான் ஒரு நாளும் உன்னை சபித்ததோ, கோபப்பட்டதோ கிடையாது. உன் அப்பா இறந்தவுடன் எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும் என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம் முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன் ஆனால் நான் உனக்காகவே நான் வாழ்ந்தேன். அதை நீ புரிந்து கொள்ளாமல் போய் விட்டாயே??

மகனே உனக்கு தெரியுமா நான் ஏன் குருடியானேன் என்று அப்போது உனக்கு சின்ன வயது. சாலையில் ஓரத்தில நீ  
விளையாடி க்கொண்டிருந்தாய். ஏதோ ஒரு வித பொருள் உன் கண்ணில் பட்டு உனக்கு ஒரு கண் குருடாகி விட்டது.

டாக்டர்கள் இன்னொரு வெண்படலம் இருந்தால் மட்டுமே உனக்கு பார்வையை கிடைக்க வைக்கலாம் என்றனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரமும் போதாது.

அதனால்....

எனது ஒரு கண்ணை உடனடியகாவே தானம் செய்து உனக்கு பார்வை கிடைக்க செய்தேன்.

எனது கண்தான் இன்று உன் கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தையும் ஏன் இந்த கடிதத்தையும் கூட அந்த கண்களாளேயே பார்க்கிறாய்..

உனக்கு இதுவும் அவமானம் என்று உனது வலது கண்ணை பிடுங்கி எறிந்து விடாதே அதை அப்படியே விட்டு விடு. ஏனென்றால் அந்த கண்களால் தான் நான் உன்னை பார்த்துக் கொண்டிருப்பேன் என் அன்பு மகனே
 
இப்படிக்கு,
 
என்றுமே அன்புள்ள,
 
உன் அம்மா....

இதை படித்த அந்த டாக்டர் மகன் உருன்டு புரண்டு அழுதானாம்..


Friday, February 26, 2016

எனக்கு ஒரு பெண் பிறந்து விட்டாள் !

புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதியரிடையே ஒரு ஒப்பந்தம்.

இன்று யார் வீட்டிற்கு வந்தாலும் கதவைத் திறக்க கூடாது என்று.

சிறிது நேரத்திலேயே கணவனின் பெற்றோர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு கதவைத் தட்டினர். கணவனுக்கு கதவைத் திறந்து விட வேண்டும் என்று மனதிற்குள் ஆசை. ஆனால் அக்ரிமென்ட் நினைவிற்கு வந்ததால் போகவில்லை. வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து அவர்கள் சென்று விட்டார்கள்.

சில மணிநேரம் கழித்து வீட்டின் கதவு தட்டப்படும் ஓசை. இப்போது மனைவியின் பெற்றோர்கள் வாசலில். மனைவியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. என்னால் முடியாதுங்க என கண்ணீரைத் துடைத்து கொண்டு சென்று கதவைத் திறந்தாள் மனைவி. கணவன் எதுவும் சொல்லவில்லை.

வருடங்கள் உருண்டோடின. இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். அதைத் தொடர்ந்து ஒரு பெண் குழந்தை பிறந்தாள். கணவன் மிகவும் செலவு செய்து மகள் பிறந்த சந்தோசத்தை கொண்டாடினான். மனைவிக்கோ மிகுந்த ஆச்சரியம். கணவனிடம் கேட்டே விட்டாள். என்னங்க, முதலில் பிறந்த இரண்டு மகன்களுக்கும் இந்த அளவிற்கு கொண்டாட்டம் இல்லை. பொண்ணு பிறந்ததற்கு மட்டும் என்ன இவ்வளவு மகிழ்ச்சி.

கணவனின் கண்களில் லேசான கண்ணீர். எனது வயதான காலத்தில் வீட்டுக்கதவை திறந்து விட எனக்கு ஒரு பெண் பிறந்து விட்டாள் என்றான் கர்வத்துடன். 

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...