Total Pageviews

Friday, February 26, 2016

எனக்கு ஒரு பெண் பிறந்து விட்டாள் !

புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதியரிடையே ஒரு ஒப்பந்தம்.

இன்று யார் வீட்டிற்கு வந்தாலும் கதவைத் திறக்க கூடாது என்று.

சிறிது நேரத்திலேயே கணவனின் பெற்றோர்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு கதவைத் தட்டினர். கணவனுக்கு கதவைத் திறந்து விட வேண்டும் என்று மனதிற்குள் ஆசை. ஆனால் அக்ரிமென்ட் நினைவிற்கு வந்ததால் போகவில்லை. வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து அவர்கள் சென்று விட்டார்கள்.

சில மணிநேரம் கழித்து வீட்டின் கதவு தட்டப்படும் ஓசை. இப்போது மனைவியின் பெற்றோர்கள் வாசலில். மனைவியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. என்னால் முடியாதுங்க என கண்ணீரைத் துடைத்து கொண்டு சென்று கதவைத் திறந்தாள் மனைவி. கணவன் எதுவும் சொல்லவில்லை.

வருடங்கள் உருண்டோடின. இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். அதைத் தொடர்ந்து ஒரு பெண் குழந்தை பிறந்தாள். கணவன் மிகவும் செலவு செய்து மகள் பிறந்த சந்தோசத்தை கொண்டாடினான். மனைவிக்கோ மிகுந்த ஆச்சரியம். கணவனிடம் கேட்டே விட்டாள். என்னங்க, முதலில் பிறந்த இரண்டு மகன்களுக்கும் இந்த அளவிற்கு கொண்டாட்டம் இல்லை. பொண்ணு பிறந்ததற்கு மட்டும் என்ன இவ்வளவு மகிழ்ச்சி.

கணவனின் கண்களில் லேசான கண்ணீர். எனது வயதான காலத்தில் வீட்டுக்கதவை திறந்து விட எனக்கு ஒரு பெண் பிறந்து விட்டாள் என்றான் கர்வத்துடன். 

No comments:

Post a Comment

சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு !

  ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங...