Total Pageviews
Wednesday, November 4, 2015
ஏழை...
பேரரசன் ஒருவன் அடுத்த நாட்டைக் கைப்பற்ற நினைத்தான்.
பெரும்படையுடன் பனி
படர்ந்த மலைகளைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அங்கே துறவி ஒருவர்
இடுப்பில் கோவணத்துடன் தவம் செய்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த
பேரரசன் அந்தத் துறவியின் மீது இரக்கப் பட்டான்.
இந்தக் குளிரில் இவர் மேலாடை இன்றி நடுங்குவாரே. இவருக்கு உதவி செய்ய வேண்டும்' என்று நினைத்தான் அவன். தன் மேலாடையைக் கழற்றி அவர் மீது போர்த்தினான்.
விழித்த துறவி, ""தாங்கள் தந்த மேலாடை எனக்கு வேண்டாம். என்னை விட ஏழை யாருக்காவது தந்து விடுங்கள்!'' என்றார்.
கோவணத் துணியைத் தவிர இவருக்கு என்று சொந்தம் ஏதும் இல்லை, இவரை விட ஏழையான மனிதர் இந்த உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது' என்று நினைத்தான் அவன் உங்களை விட ஏழையை நான் எங்கே காண்பேன்?'' என்று கேட்டான்.
துறவி அவனைப் பார்த்து, ""நீ யார்? இவ்வளவு பெரும்படையுடன் எங்கே செல்கிறாய்?'' என்று கேட்டார்.
பேரரசன் நான். என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. பக்கத்து நாட்டைக் கைப்பற்றுவதற்காகப் பெரும்படையுடன் செல்கிறேன்!'' என்று பெருமையுடன் சொன்னான். உன்னிடமே ஏராளமான செல்வம் இருக்கும்போது, ஏன் பக்கத்து நாட்டின் மீது படை எடுக்கிறாய்?''
அந்த நாட்டுச் செல்வமும் சேர்ந்தால், நான் இன்னும் பெரிய செல்வனாகி விடமாட்டேனா? என் ஆணை அந்த நாட்டிலும் செல்லுமே!'' என்றான் அவன்.
இருக்கின்ற செல்வம் போதாது, இன்னும் வேண்டும் என்று நினைக்கிறாய். நீதான் உண்மையான ஏழை...
நீயே போர்வையை வைத்துக் கொள்!'' என்று நீட்டினார் அவர். தலை
கவிழ்ந்த அவன் படையெடுக்கும் எண்ணத்தை விட்டுவிட்டு நாடு திரும்பினான்.
Thanks to R.P.Karthik
Saturday, July 11, 2015
சென்னையில் இப்படி இருந்த தான் வசதியா வாழ முடியும் !
கிராமத்தில் இருந்து சென்னை அடுக்கு மாடிக்கு ....
சென்னையில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன் தன்னுடைய கிராமத்திற்கு சென்று அவனின் அப்பாவிடம் நான் சென்னையில் ஒரு வீடு வாங்க போகிறேன் .. ரூ. 5 லட்சம் பணம் கேட்டான் , அதற்கு அவர் இன்னும் உன்னக்கு திருமணமே ஆகவில்லை அதற்குள் ஏன் அவசரம் என்றார் .இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் வாங்கிவிடலாம் பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம் தேவைப்படும் ... தினம் தினம் விலை ஏறி கொண்டேபோகிறது என்றான் ...
யோசித்த அப்பா சரியான முடிவு தான் .. ஆனால் நான் ஒரு விவசாயி உன்னை படிக்க வைக்க வாங்கிய கடனை உண் சம்பளத்தில் தான் அடைக்க ஆரம்பித்து இருகின்றோம் . திடீரென்று 5 லட்சம் கேட்டால் எப்படி??? நமது விவாசய நிலத்தில் ஒரு பகுதியை விற்றுவிட்டு இங்கு வாங்கிய கடனை அடைத்துவிட்டு மீதம் உள்ள பணத்தில் சென்னையில் வீடு வாங்கலாம் என்றான் ...
5 லட்சம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள தொகைக்கு என்ன பண்ணுவ என்று கேட்க .. மகன் -அதை வங்கி லோன் தரும் ..நாம் அதை மாதம் தவனை முறையில் 20 வருஷதிருக்கு செலுத்தலாம் என்றான் ... எந்த மாதிரியான வீடு எப்டி இருக்கும் என்று கேட்க .. 300 வீடு கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு ,சகல வசிதிகளும் இருக்கும் ..அடுக்குமாடி என்றவடுன் அவர் முகம் மாறியது .. ஆனால் மகன் ஆசைகேற்ப ஒரு பகுதி விவசாய நிலத்தை விற்று வீடு வாங்க பணம் கொடுத்தார் ..
வீடு வாங்கிய பின்பு அப்பாவை சென்னை வாருங்கள் என்றான் .. அவரும் புதிய வீட்டை பார்க்க மிகுந்த ஆசையோடு வந்து அடைந்தார் ...ஒவ்வொரு வீட்டுக்கும் நல்ல இடைவெளி விட்டே பார்த்து பழகிய மனிதன் இப்படி ஒரு வீட்டை பார்த்து அசந்து நின்றார் ..
உள்ளே சென்று 900 சதுர அடி வீட்டை பார்த்து இதை வாங்கவா நம்மக்கு சோறு போட்ட நிலத்தை விற்க சொன்ன என்றார் ....இது எல்லாம் உங்களுக்கு புரியாது இங்க அப்டிதான் ...என்னோட லைப் சென்னையில்தான் இன்னிமே நம்ம ஊருக்கு விசேசத்துக்கு மட்டும் தான் வர போறேன் .. இங்க தனி வீடு எல்லாம் வாங்க முடியாது அதுக்கு கோடி கணக்குல பணம் வேணும் ...பேசாம தூங்குங்க வந்தது அசதியா இருக்கும் ...மனம் கேட்காமல் உறங்கினர் ....
மாலை வேலையில் வீட்டை விட்டு வெளியே வந்தார் .. மற்ற வீடுகள் அனைத்தும் உள்ளே பூட்ட பட்டு இருந்தது ... கீழ இறங்கி வந்தவர் சில பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளை பூங்காவில் விளயாட வைத்து கொண்டு இருந்தார்கள் ... இவருக்கு மனதில் ஒரு சந்தோஷம் அதை பார்த்த படி நின்று கொண்டுஇருந்தர் ...பக்கத்தில் வந்த செக்யூரிட்டி அய்யா நீங்க சரவணன் சார் அப்பாவா என்றான்... அமாம் என்றார் .. சார் சொல்லிட்டு தான் போனாரு ... வாங்க சார் டீ சாபிடலாம் என்றான்... சரி என்று நகரும் போது ஏன் பா இங்க யாருமே ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்க மாட்டாங்களா எல்லாம் வீடு உள்ள பூட்டிகிறாங்க ????
அது எல்லாம் அப்படிதான் அய்யா ... எல்லாத்துக்கும் நிறைய வேலை ...காலையில ஆரம்பிச்சு நைட் வரைக்கும் .. பல வீட்ல கணவன் மனைவி ரெண்டு பேரும் வேளைக்கு போறாங்க ... அவுங்க சின்ன பசங்கள பக்கதுல இருக்க ஹோம் ல விட்ருவாங்க .. நைட் யாரு முதல வரங்களோ அவுங்க கூட்டிட்டு வருவாங்க ...பெத்த புள்ளைய யாருகிட்டயோ விட்டு போவாங்கள ??? ஏன் அவுங்க அப்பா அம்மா எல்லாம் எங்க வர மாட்டங்கள ??? அதுவா இவங்கு இருக்க பிஸில ... பெதவுங்கள பார்க்க முடியாதுனு ....ஒன்னும் அவுங்க சொந்த ஊர்ல விட்ருவாங்க ..இல்லாட்டி முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்ட்ருவங்க .. இதை கேட்ட ஆச்சிரியத்தில் நின்று கொண்டு இருக்க .. இதோ போராறே சேகர் சார் உங்க வீட்டுக்கு எதிர்த்த வீடு தான் இப்போ கூட இவர் பையன அங்க இருந்து தான் கூட்டிட்டு வரறாரு ...
திகைத்து நின்ற பெரியவர் .. தான் மகனிடம் ஏதும் கேட்காமல் ஒரு வாரம் பல்லை கடித்து கொண்டு கடந்தார் ...ஒரு நாள் மாலை கீழே நின்று கொண்டு இருக்கும் போது .. பக்கத்தில் வந்த சேகரை பார்த்தார் ... என்ன தம்பி ஆச்சிரியமா இருக்கு ..இன்னக்கி வேலை இல்லையா ?? இல்ல அய்யா .. லீவ் போட்டுட்டேன் ... எதுவுமே பிடிக்கலே ... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு ... ஓஹோ சரி சரி ... எங்க உங்கள் மனைவி என்றார் ... அவளுக்கு செகண்ட் ஷிபிட் நைட் 12 மணி ஆகும் .. அதுவரைக்கும் நான் பையன பார்த்துக்குவேன் ...
அப்புறம் கலையில நான் வேளைக்கு போயிருவேன் ... அவ வீடு வேலையெல்லாம் முடிச்சுட்டு பையன பக்கத்துக்கு ஹோம் ல விட்டுட்டு வேளைக்கு போய்டுவா என்றான் சேகர் ... அப்போ நீங்க ரெண்டு பேரும் பேசிக்கவே மாட்டிங்கள ??? சண்டே மட்டும் தான் பேச முடியும் அதுவம் அவளுக்கு முன்றாவது ஷிபிட் நைட் 10 மணிக்கு போய் கலையில் 6 மணிக்கு வருவா .. அப்போ ஒரே தூக்கம் தான் .. சாய்ந்தரம் எதாவது ஹோட்டல் போய்ட்டு சாப்பிட்டு வருவோம் என்றான் ... எதுக்கு பா இப்டி கஷ்ட படனும் ??? இப்படி இருந்த தான் இங்க வாழ முடியும் .. அதற்கு அந்த பெரியவர் .. நீங்க சொல்றது தப்பு இப்படி இருந்த தான் வசதியா வாழ முடியும் அப்டி சொல்லுங்க .. என்றார் .. அதை கேட்டவுடன் செவியில் அறைந்தது போல இறந்தது சேகருக்கு ...
அடுத்த நாள் தான் மகனிடம் நான் ஊருக்கு போறேன் பா என்றார் பெரியவர் ..என்ன அப்பா இவளவு அவசரம் ....ஒன்னும் இல்ல படிச்சா நல்ல இருக்கலாம் ...அப்டிங்கற எண்ணத்துல தான் உன்னை கடன வாங்கி படிக்க வச்சேன்.. ஆனா நீ இன்னும் உன் வாழ்கையே ஆரம்பிகல அதுக்குள்ள அடுத்த 20 வருஷத்துக்கு கடன்காரன் அயிட்ட ... இனிமே உனக்கு கல்யாணம் பண்ண அவளுக்கு அப்புறம் உன் குழந்தைக்கு சேர்த்து உன் மனைவியும் வேலைக்கு போகணும் ... கடைசியா படிப்பு உன்ன ஒரு கடன் காரண தான் ஆக்கும் நு தெருஞ்சு இருந்த உன்ன படிக்கவே வச்ருகமட்டேன் ....
விவசாயம் செஞ்சாலும் நான் யார்கிட்டயும் உண் படிப்க்கு தவிர கடன் வாங்கல .... இனிமே உன் வாழ்கையில நிமதியே கிடயாது அப்டிங்க்ரத நினைக்கிற போது தான் கஷ்டமா இருக்கு ...
மீண்டும் திரும்பி வருவாய் என்று நம்பிகையுடன் கிளம்புகிறேன் என்று தனது கிராமத்திற்கு சென்றார் ...
அவருக்கு எப்படி தெரியும் இந்த சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும் தான் எக்ஷிட் கிடையாது என்று ...
சரவணனும் ,சேகரும் அவர் அவர் வேலையை செய்ய தொடிங்கினர்கள் ......
எழுதியவர்: Jainul Abdulwaha
எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் - தென்கச்சி கோ.சுவாமிநாதன்
ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரைப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க.
முனிவர்கிட்ட அந்த 4 பேரும்”சாமி உலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே ,அதுக்கு என்ன வழின்னு” கேட்டாங்க.
அதுக்கு அந்த முனிவர்”தெரியலயேப்பா’ன்னு” ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு.
ஆனாலும் வந்தவங்க விடாம.”என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!” அப்டின்னு கேட்டாங்க.
அதுக்கு முனிவர் அவங்ககிட்ட “சரி இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன்.
அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்துச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்” அப்டின்னாரு.
சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.
கொஞ்ச தூரம் போன பிறகு ஒரு இடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பிறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு இரை தேடி அந்தப் பக்கமா போனது.
அந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு வந்திச்சி.
மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதைக் கொன்னு தானும் சாப்பிட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்பிட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம்.
இந்தப் பக்கமா தன் அம்மாவ பறிகொடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்ன’ன்னு கேட்டாரு.
அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. உடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு.
அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,”ஏம்பா உன் கருத்து என்னன்னு?
ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு இவன்,” இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு.
ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு.
இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு”. ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி.
கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,”ஏம்பா உன் கருத்து என்னன்னு”, அதுக்கு அவன்,”தெரியலயே சாமின்னு”, சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.
நீதி: நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம்,
அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.
நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

கடவுள் இருக்கின்றாரா ! கண்ணுக்கு தெரிகின்றாரா !
கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான். அருகிலுள்ள தீவில் அவன் கரையேறுகிறான்.
“இறைவா… இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை
பார்க்கவேண்டாமா??” என்று பிரார்த்திக்கிறேன்.
பார்க்கவேண்டாமா??” என்று பிரார்த்திக்கிறேன்.
ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து
எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை.
எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை.
இப்படியே நாட்கள் ஓடுகின்றன. தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள், மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான். அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கி வந்தான்..
இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை தேற்றிக்கொண்டான். ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது.
பட்ட காலிலே படும் என்பது போல… எது நடக்ககூடாதோ அது நடந்துவிட்டது. இவன் தங்குவதுகென்று இருந்த ஒரே குடிசையும் வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியிருந்தன. அதை பார்த்த இவன் அலறித் துடித்தான். எல்லாம் போய்விட்டது. இவனிடமிருந்த மிச்ச சொச்ச பொருட்களும் போய்விட்டது.“இறைவா… என்னை காப்பாற்றும்படி தானே உன்னை மன்றாடினேன். நீ என்னவென்றால் இருப்பவற்றையும் பறித்துக் கொண்டாயே… இது தான் உன் நீதியோ…?” என்று கதறி அழுகிறான்.
மறுநாள் காலை ஒரு கப்பலின் சப்தம் இவனை எழுப்பியது. இவன் தீவை நோக்கி அது வந்துகொண்டிருந்தது. “அப்பாடா… நல்ல வேளை… ஒரு
வழியாக இங்கிருந்து தப்பித்தோம். யாரோ நம்மை காப்பாற்ற வருகிறார்கள்.”
என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான். கப்பல் சிப்பந்திகள் இவனை,
லைஃப் போட்டில் வந்து அழைத்து சென்றார்கள். தான் இங்கே தீவில்
மாட்டிக்கொண்டிருப்பது எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்க, “தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதை பார்த்தோம்….

யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி சிக்னல் கொடுக்கிறார்கள் என்று நினைத்தோம்” என்கிறார்கள் அவர்கள்.
அப்போது இறைவன் குடிசையை எரித்த காரணம் இவனுக்கு புரிந்தது. இறைவனுக்கு நன்றி சொன்னான். அந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது. அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான். வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக எடைபோட்டுவிடுகிறோம்.
நம்மை காக்கவே அவன் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான். அவன் தரும் சோதனைகள் அனைத்தும் நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே என்று நாம் புரிந்துகொண்டால், எதைப் பற்றியும் அலட்டிகொள்ளவேண்டியதில்லை.
எனவே சோதனை என்றால்… இறைவனின் அருட்பார்வை உங்கள் மீது விழுந்துவிட்டது விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புங்கள் !
Sunday, May 17, 2015
குறுக்குப் பாதை !
ஒரு
மாட்டு வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான்
ஒருவன்.குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.
‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.
‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.
‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’
‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.

சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு மாட்டு வண்டிக்காரனுக்குக் கோபம்.‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.
‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.
சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது.
தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்திக் கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.
”எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண் பதறிவு” -
குறள் 423
Thanks to DINAKARAN.COM
'முதியோர் இல்லம் !
என்னங்க..! உங்க அம்மாவை
சேர்த்த 'முதியோர் இல்லத்தில்' இருந்து பேசினாங்க... "உங்களை நாளைக்கு அங்க
வரச் சொல்றாங்க"...!!!என்ற மனைவியை திரும்பிப் பார்த்தான் அவன்
ஏன் என்னவாம் ...? இப்ப தானே போன மாசம் போய் பார்த்துட்டு வந்தேன் என்றவனிடம் , "போய் என்னனுதான் பாத்துட்டு வாங்க"...? நீங்க பாட்டுக்கும் இது 'தான் சாக்குன்னு' இப்பவே கூட்டிகிட்டு வந்துடாதீங்க...! இங்க ஏற்கனவே ஏகப்பட்ட செலவு இருக்கு..! இதுக்கு நடுவுலே அவங்களை வேற பாக்க முடியாது. 'பொண்ணு படிப்புச்' செலவுக்கே இங்க 'முழி' பிதுங்குது, இதுலே உங்க அம்மா 'வைத்திய செலவு' வேற செய்யமுடியாது பார்த்துக்கங்க'...என்றாள்
சரி... சரி... விடு நான் பார்த்துக்கறேன் என்ற அவன் மனதிலும் அம்மாவை பற்றிய இனம் புரியாத பயமும், அதே நேரம் மனைவி மீது கோபம் கோபமாய் வந்தது.
மறுநாள் காலை அம்மாவை பார்க்க'முதியோர் இல்லம்' சென்ற சந்துரு அங்கிருந்த மேடத்திடம் விபரம் கேட்க, அவங்க அம்மா கொடுக்க சொன்னதாக அவர்கள் அவன் கையில் 'ஒரு கவரை' கொடுத்தாங்க. அதை பிரித்த பார்த்த போது அவன் பெயருக்கு '2 லட்ச ரூபாய்க்கான டி.டி யும்', ஒரு கடிதமும் இருந்தது. படித்த அவன் அதிர்ந்து போனான் .அதில்
அன்பு மகனுக்கு,
உன் தந்தை இறந்தபோது 'உன்னை நான் சுமையாக' அப்போது நினைக்கவில்லை.
இப்போதும் உனக்கு 'நான் சுமையாக' இருக்க விரும்பவில்லை.
உன் மனைவி எதிர்பார்ப்பது போல் என்னால் 'உடல் உழைப்பை தர முடியவில்லை.
நீ கஷ்ட படுவதை பார்க்க என்னால் முடியவில்லை. ஆகவே
இப்போதும் எனது "கிட்னீயை" விற்று அந்தப்பணத்தை உனக்கு கொடுத்திருக்கிறேன்.
கடனையெல்லாம் அடைத்து விட்டு என் 'பேத்தியை' நன்கு படிக்க வை..!.அவள் நாளை 'உன்னை உன் மனைவியை' காப்பாத்துவா.! பாத்துக்க எல்லாத்தையும்,
நீங்க எல்லாம் 'நல்லாருக்க' நான் அந்த கடவுள் கிட்ட வேண்டிகிறேன்...! நான் போகிறேன்...? அன்பு அம்மா ...!
அவன் அப்படியே 'இடிந்து' போய் விட்டான். இன்றுவரை
'மனதிற்குள் சொல்லி'... சொல்லி... 'அழுது' கொண்டுதான் இருக்கிறான்...! என் 'நண்பன்'...!
நீதி: 'அன்பு' என்பது 'அன்னையிடம்' மட்டுமே எல்லா காலங்களிலும் 'அமுதமாய்' கிடைக்கும். '
"தாயின் அன்பை யாருக்காகவும் தள்ளி வைக்காதீர்கள்"...!
அன்பு கொண்ட அனைவர்க்கும்'....!

Subscribe to:
Posts (Atom)
மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !
ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...
-
நவம்பர் 16 சர்வதேச சகிப்புத் தன்மை தினம். உலக மக்களிடையே சகிப்பு தன்மையை உருவாக்க வேண்டும் உலக மக்களிடையே சகிப்பு தன்மையை உருவாக்க வ...
-
ச னிக்கிழமைதோறும் தனது தாய் வீட்டுக்குப் போக வேண்டும் என்று அடம்பிடிக்கும் தனது மனைவி ஆனந்தியை கோபத்தில் முறைத்தான் தீபக் . வாரம்தோறும் ...
-
உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா ??? காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள். நிறுவ...