விஜயநகரத்திலே அரசர் கிருஷ்ணதேவராயரின் அரண்மனையில் மறுநாள் நடைபெற இருக்கும் அரசரின் தாயார் வருட திவசத்திற்கான காரியங்கள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஆனால் அரசர் கிருஷ்ணதேவராயர் சோகமாக கவலையோடு அமர்ந்திருந்தார்.
ராஜகுரு அரசரிடம் அவருடைய நிலைக்கு காரணமென்ன என்று கேட்கிறார்.
தன்னுடைய தாயார் இறக்கும் தறுவாயில் திங்க மல்கோவாவா வகை மாம்பழம் கேட்டார். ஆனால் அந்தப் பருவம் மாம்பழங்கள் காய்க்கும் பருவம் இல்லையாதலால், அந்த சாம்ராஜ்யத்தின் நாலாதிசைகளுக்கும் வீரர்களை அனுப்பியும் அம்மாம்பழம் கிடைக்கவில்லை. அதற்குள் தாயார் இறந்துவிட்டார். நிறைவேறாத ஆசையுடன் அவர் இறந்துவிட்டதே தன்னுடைய கவலைக்கு காரணமென்று அரசர் கூறினாராம்.
இதுதான் நல்ல சந்தர்ப்பம் சம்பாதிப்பதற்கு என சட்டென்று திட்டம் போட்ட ராஜகுரு, அரசருக்கு ஒரு யோசனை கூறினார்.
“ஐந்து அந்தனர்களுக்கு 5 தங்க மாம்பலங்களை நாளைய திவசத்தின் முடிவில் கொடுத்து விட்டால் இறந்தவருடைய ஆத்மா சாந்தியடையும்”
ஆனால் மீண்டும் இது மாம்பழ பருவம் இல்லாததால் மாம்பழங்கள் எங்கிருந்து கிடைக்கும்? என மன்னன் கேட்டாராம்.
ராஜகுரு சாமர்த்தியமாக ஒரு யோசனை கூறியிருக்கிறார்
“மல்கோவாவா மாம்பழங்களுக்கு பதிலாக தங்கத்தினால் செய்த மாம்பழங்களை கொடுத்துவிடலாம்”
மன்னருக்கு இந்த யோசனை முழுமையாக புரியாவிட்டாலும் ராஜகுருவின் யோசனை என்பதால் ஒத்துக் கொண்டார்.
ராஜகுரு தன்னுடைய ஆட்கள் சிலரை அந்தனர்கள் போல் வேடமிட வைத்து மறுநாள் திவசத்திற்கு சென்று தங்கத்தினால் செய்த மாம்பழங்களை பெற்று அதில் பாதியை தன்னிடம் கொடுத்து விடவேண்டும் என்ற ஒப்பந்த்துடன் அனுப்பி வைத்தாராம்.
மறுநாள் திவசமெல்லாம் முடிந்தவுடன் அரசர் தங்கத்தினாலான மாம்பழங்களை அந்த ஐந்து அந்தனர்களுக்கும் பல மரியாதைகளுடன் தாம்பாழத்தில் வைத்து கொடுத்தாராம்.
இவை எதுவும் குறித்து முன்னமே எதுவும் தெரியாத தெனாலிராமன் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தானாம்.
இதில் ஏதோ சூது இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட தெனாலிராமன், பக்குவமாக புத்திசாலித்தனமாக இவ்விசயத்தில் மன்னருக்கு உண்மையை புரியவைக்க முடிவு எடுத்து, ஒரு திட்டம் தீட்டினானாம்.
தங்கத்தினாலான மாம்பழங்களை தானமாக பெற்றுக் கொண்டு வெளியேற இருந்த அந்தனர்களை அழைத்து, தானும் தன் தாயாருக்கு சிரார்தம் கொடுக்க வேண்டும், தன்னுடைய தாயாருக்கும் கடைசி நேரத்தில் ஒரு ஆசை இருந்தது அதை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறினானாம்.
ஒரே நேரத்தில் இரண்டு தானம் கிடைக்கும் மகிழ்ச்சியில் அந்த அந்தனர்களும் சந்தோசமாக அந்த தானத்தை வாங்கிக் கொள்ள சம்மதித்தார்களாம்.
காவலர்களை அழைத்து பழுக்க காய்ச்சிய 5 இரும்புக் கம்பிகளை கொண்டு வரச் சொன்னானாம்
எதற்கு என்று புரியாமல் அந்தனர்களும், ராஜகுருவும் மற்றும் அங்கிருந்த அனைவரும் முழித்துக் கொண்டிருந்தார்களாம்.
அப்பொழுது தெனாலிராமன் கூறினானாம்
என் தாயார் இறக்கும் தறுவாயில் எனக்கு பழுக்க காய்ச்சிய இரும்புக் கம்பியால் சூடு வைக்க விரும்பினார்கள் ஆனால் அந்த ஆசை நிறைவேறாமலே அவர்கள் இறந்துவிட்டார்கள் ஆகவே உங்களுக்கு அதனைக் கொடுத்து அவர்கள் ஆத்மா சாந்தியடைய செய்ய விரும்புகிறேன் என்றானாம்
பயந்து போன அந்தனர்கள் எங்களுக்கு சூடு வைப்பதால் அவர்களுக்கு எவ்வாறு திருப்தி ஏற்படும் என்றார்களாம்.
அரசரின் தாயார் சாப்பிட விரும்பிய மாம்பழத்திற்காக உங்களுக்கு தானம் கொடுப்பதால் அவர்கள் ஆத்மா திருப்தியடையுமென்றால் என் விசயத்தில் மட்டும் ஏன் நிகழாது என்றானாம்
ஐந்து அந்தனர்களும் தானம் வாங்கிய தங்கத்தினாலான மாம்பழங்களை திருப்பிக் கொடுத்துவிட்டு, ஆளைவிடுமாறு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பயந்து ஓடிவிட்டார்களாம்
தெனாலிராமனின் புத்திசாலித்தனத்தை பாராட்டி அதில் இரண்டு தங்க மாம்பழங்களை அவனுக்கு மன்னர் பரிசாக அளித்தாராம்!