Total Pageviews

Monday, October 21, 2013

மதுரை சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை வரவேற்க்கின்றது.



Welcome to Madurai Sivakumar's Website

மதுரை சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை வரவேற்க்கின்றது.



http://mdusskadl.blogspot.com// ·  விழிப்புணர்வு.

http://madurai-pcl-sivakumar.blogspot.com//· படித்ததில் பிடித்தது.

http://wwwsithancom-sivakumar.blogspot.com/. பொது அறிவுச்செய்திகள்

 http://maduraisskadl.blogspot.com//   சிறுகதை:

 http://www.mdusskadlsk.blogspot.in/     நகைச்சுவை.காம்.

http://www.sskganesh.blogspot.in/   பார்த்ததில் பிடித்தது

http://mduadlssk.blogspot.com//            TAMIL CLASSICAL SONGS


http://ssktamilquotes.blogspot.in/     தமிழ் பொன் மொழிகள்


https://plus.google.com/110659488613257381414/posts?hl=en&partnerid=gplp0

Friday, September 6, 2013

கழுதையும் ஓநாயும்





·         ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை.ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது.

ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம்... நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க. முடியாது நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவு செய்து கேட்க வேண்டும்,'' என வேண்டிக் கொண்டது.நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதை சீக்கிரம் சொல்". என உறுமியது ஓநாய்.ஓநாயாரே என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காலில் முள் உள்ள நிலையில் நீ என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உன் தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உன் உயிரையும் வாங்கி விடும். அதற்கு தயவு கூர்ந்து முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடு. அதற்குப் பிறகு நீ என்னை அடித்துத் தின்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,என கழுதை கூறிற்று.

ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது.கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்து,ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என தேடும் வேலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்தது.கழுதையின் உதை தாங்காமல் ஓநாய் துடிதுடித்து சரிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது.

Sunday, August 18, 2013

புதிய வியாபாரி


ஒருபுகைவண்டிநிலையத்தில்பிச்சைக்காரன்ஒருவன்தனதுகைப்பைநிறையபென்சில்களைவைத்துக்கொண்டுஅமர்ந்திருந்தான்.ஒருகணவான்அந்தவழியாகச்சென்றபோது5ரூபாய்நாணயத்தைபிச்சைக்காரனின்திருவோட்டில்போட்டார்.பிறகுபுகைவண்டியில்ஏறிஅமர்ந்தார்.  

அவரதுமனதில்ஒருகருத்துஉதித்தது.எழுந்துவேகவேகமாகஅதேபிச்சைக்காரனிடம்சென்று,"அவனதுபையிலிருந்தபென்சில்களைஎடுத்துக்கொண்டு5ரூபாய்க்குச்சமமானபென்சில்களைஎடுத்துக்கொள்கிறேன்.என்னஇருந்தாலும்நீயும்தொழில்செய்கிறாய்அல்லவா?",என்றுகூறிவிட்டுபுகைவண்டியில்தனதுஇருக்கைக்குத்திரும்பினார்.
 ஆறுமாதங்களுக்குப்பிறகுஅந்தகணவான்ஒருவிருந்தில்கலந்துகொள்ளச்சென்றார்.அந்தவிருந்தில்6மாதங்களுக்குமுன்னாலேஇரயில்நிலையத்தில்பிச்சையெடுத்துக்கொண்டுஇருந்தவனும்அமர்க்களமானகோட்மற்றும்டைசகிதமானஉடையில்கனகச்சிதமானகணவானாகவிருந்தில்பங்குகொள்ளவந்துஇருந்தான்.அவன்இந்தக்கணவானைஅடையாளம்கண்டுகொண்டுஇப்படிக்கூறினான்.

அன்பரே..நீங்கள்என்னைமறந்துபோகியிருக்கலாம்.ஆனால்நான்உங்களால்தான்இப்படிநல்லநிலைமைக்குவந்துஇருக்கிறேன்.நான்நல்லநிலைமைக்குவருவதற்குநீங்கதான்காரணம்."அந்தகோட்சூட்வாலிபன்கணவானிடம்பழையநிகழ்வுகளைநினைவூட்டினான்.

கணவான்,"எனக்குநினைவுவந்துவிட்டது.இப்போதுஎன்னசெய்கிறாய்.உடைகளிலும்நல்லமாற்றம்தென்படுகிறது,என்னப்பா?".என்றுகேட்டார்

கோட்சூட்வாலிபன்சொன்னான்,"நீங்கள்தான்என்னுடையமாற்றத்துக்கும்வளர்ச்சிக்கும்காரணம்.என்னுடையவாழ்நாளிலேஉங்களைமறக்கமுடியாது.என்வாழ்க்கையில்என்னைஒருமனிதனாகமதித்தமுதல்மனிதர்நீங்கள்தான்.5ரூபாயைஎனதுதிருவோட்டில்இட்டபின்சிறிதுநேரத்த்திற்குப்பிறகுவந்துஅந்தரூபாய்க்குச்சமமானபென்சில்களைஎன்னிடமிருந்துபெற்றுச்சென்றீர்கள்".

"எனக்குள்ஒழிந்திருந்தவியாபாரிஅப்போதுதான்எனக்கேதெரியவந்தான்.அதுவரையில்பிச்சையெடுத்துத்திரிந்தநான்அந்தஒருநிமிடத்தின்தாக்குதலில்ஒருவியாபாரியாகஉருவெடுத்துஉழைக்கஆரம்பித்தேன்".

"அந்தஒருநிமிடத்துக்குமுன்னர்வரையில்சோம்பேறியாகஅழுக்காகபுகைவண்டிநிலையத்தின்பிச்சைக்காரர்களின்வரிசையில்ஒருவனாகயாராலும்மதிக்கப்படாத,உருப்படாதவனாகஇருந்தநான்உங்கள்நடவடிக்கையால்திருந்தினேன்.

என்னுள்ளேசாக்ரடீஸின்கொள்கைகளைத்தூண்டிவிட்டவர்நீங்கள்தான்.பிறகுதான்சிந்திக்கஆரம்பித்தேன்."நான்யார்?எனதுகொள்கைஎன்ன?

எதற்காகவோபிறந்துவிட்டேன்.ஆனால்சாகும்போதாவதுஎதையாவதுசாதித்துவிட்டுசாகலாமே.எனமுடிவெடுத்தேன்.பிச்சையெடுப்பதைநிறுத்திஎனதுபுதியவாழ்க்கையைஆரம்பித்தேன்.நான்உங்களுக்குநன்றிகூறுவதற்குஎன்றென்றும்கடமைப்பட்டுள்ளேன்.நன்றிகள்பலகோடிஅய்யா",என்றான்.



அனைவருக்குள்ளும்ஏதாவதுஒருதிறமைஒளிந்திருக்கும்.அதைசரியானநேரத்தில்பயன்பயன்படுத்தினால்வாழ்கையில்முன்னேறலாம்! 

Tuesday, July 16, 2013

""நான் செத்த பிறகு வா!''



உலகப் பிரசித்தி பெற்ற துறவி ஒருவர் ஒரு நாட்டுக்கு விஜயம் செய்தார். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் ஒரு குடிசைபோட்டுத் தங்கி, நாட்டு மக்களுக்கு உபதேசம் செய்யத் தொடங்கினார்.

மக்கள் தங்கள் குறைகளை அவரிடம் சொல்லி, அவரின் ஆசியைப் பெற்றுச் செல்லத் தொடங்கினர். அவர் சொன்னதெல்லாம் நடக்கிறது என்ற செய்தி நாடு முழுவதும் பரவிவிட்டது.


இந்த விஷயம் அந்த நாட்டு மன்னனின் காதுக்கு எட்டியது.


உடனே, சில முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு, துறவியின் இருப்பிடத்துக்குச் சென்றார்.


அப்போது அந்தத் துறவி தன் குடிசையைச் சுற்றி சில மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருந்தார். அதனால் மன்னன் வந்திருப்பதை அவர் கவனிக்கவில்லை.
உடனே மன்னன், ""துறவி மகானே! நான் மன்னன் வந்திருக்கிறேன்!'' என்றார்.


துறவி திரும்பாமல், ""போ!'' என்று சொல்லிவிட்டு, தன் வேலையைத் தொடர்ந்தார்.


மன்னனுக்குக் கோபம் வந்தது.


""துறவியே! உம்மைத் தேடி நானே வந்திருக்கிறேன். 


சிறிது கூட மரியாதையே இல்லாமல் போ என்கிறீரே!'' என்று கத்தினான்.


துறவி மீண்டும் திரும்பாமல், ""மறுபடியும் சொல்கிறேன், நீ போகலாம்!'' என்றார்.


மன்னனுக்குக் கோபம் பொங்கியது. அதைக் கண்ட அமைச்சர் அமைதியாக இருக்கும்படி, சைகை காட்டினார்.


மன்னன் சிரமப்பட்டு, தன்கோபத்தை அடக்கினான்.


""துறவி மகானே! இப்போது நான் போகிறேன். 

மறுபடியும் எப்போது நான் வரட்டும்?'' என்று கேட்டான் மன்னன்.


""நான் செத்த பிறகு வா!'' என்றார் துறவி.


அதைக் கேட்டு மன்னன் உள்பட அமைச்சர் பிரதானிகள் அனைவரும் திடுக்கிட்டனர்.


""நீங்கள் செத்த பிறகு வரவா? அப்போது வந்து உங்களை எப்படிப் பார்ப்பது? உங்களிடம் எப்படிப் பேசுவது?'' என்று கேட்டான் மன்னன்.


துறவி இப்போது அவனை ஏறிட்டுப் பார்த்தார்.


""நான் செத்த பிறகு என்றால், என் மறைவுக்குப் பிறகு என்று அர்த்தமல்ல... நான் குறிப்பிட்ட "நான்' என்பது உன்னுள் இருப்பது. உன் அகந்தையை விட்டு, ஒரு சாதாரண மனிதனாக வந்து என்னைப் பார் என்பதுதான் நான் சொன்னதன் பொருள்!'' என்றார் துறவி.


தன் அகந்தையை எண்ணி தலை கவிழ்ந்தான் மன்னன் .

Thursday, May 23, 2013

இளவரசி புனிதவள்ளி

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு புனித வள்ளி என்ற அழகு தேவதை ஒருத்தி மகளாக இருந்தாள்.

அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க  ஜோதிட வித்வான் ம்ற்றும் சகல கலைகளும் அறிந்த பண்டித வித்வான் ராஜசிம்மனை ஆசிரியராக நியமித்தார் மன்னர். அந்த ராஜசிம்மனுக்கு தன்னிடம் கல்வி கற்க்கும் இளவரசி புனிதவள்ளி மேல நாட்டம். தன் விருப்பத்தைத் இளவரசி புனித வள்ளியிடம் தெரிவித்தான்  ராஜசிம்மன். இளவரசி புனிதவ்ள்ளி மறுத்தாள்.

இளவரசி புனித வள்ளியை அடைந்தே தீர வேண்டும் என  எண்ணிய ராஜசிம்மன் என்ன செய்தான் தெரியுமா?

மன்னா உங்கள் மகள் புனித வள்ளி ஜாதகத்தில் கட்டம் சரிய்ல்லை. அவளால் உனக்கும் இந்த நாட்டுக்கும் ஆபத்து. இதிலேயிருந்து நீங்களும் நாடும் தப்பிக்கவேண்டுமானால் புனித வள்ளியை ஒரு பொட்டியில வைத்து ஆற்றில் விட்டுவிடு என்றான் ராஜசிம்மன்.

இதை நம்பிய மன்னனும் அப்படியே செய்துட்டான். பெட்டி ஆற்றில் மிதந்துகொண்டே வந்தது. காட்டில் வேட்டையாடிக் கொண்டு இருந்த பக்கத்து நாட்டு  இளவரசன் அந்தப் பொட்டியப் பாத்து, எடுத்து திறந்து பாத்தான். அதில் புனித வள்ளி மயங்கிய நிலையில் இருந்தாள். அவளிடம் கேட்டு உண்மையைத் தெரிந்துகொண்டான் இளவரசன்

பின்னர் அவளைத் திருமணம் செய்துகொண்டான். பின்னர் அவன் வேட்டையாடிய புலியைப் பெட்டியில அடைத்து ஆற்றில் விட்டான். காட்டில் காத்துக்கொண்டிருந்த ஆசிரியர் ராஜசிம்மன் பெட்டியை கொண்டுபோய் ஒரு வீட்டில் வைத்தான். நல்லா அலங்காரம் செய்துவிட்டு கதவை சாத்தி தாழ்பாள் போட்டான். கனவுலகில் சன்சரித்தான். இராசா மகளை அனுபவிக்கப் போகின்ற ஆசையில் பெட்டியைத் திறந்தான். அடிபட்டுக் கிடந்த புலி ராஜசிம்மன் மேல் பாய்ந்து கொன்றது.“

கதையின் நீதீ

ஆசிரியர் தொழில் புனிதமானது. அத்தொழிலுக்குக் களங்கம் ஏற்படும் வகையில் தப்பு செய்ய நினைப்பவன் அழிவான்

உலக்கை சாமியார்

“ஒரு கிராமத்தில் தாமோதரன்  என்பவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு  தினமும் ஒரு சாமியாரை வீட்டுக்கு அழைத்து வந்து சாப்பாடு போட்டால்,  கடவுளே  வீட்டிற்க்கு வந்து  சாப்பிட்டு சென்றதாக உணர்வுவான்.  சாமியார் யாராவது ஒருவர் தனது வீட்டில் சாப்பிட்ட பின்னர்தான் அவன் சாப்பிடுவான். இது அவன் மனைவிக்குப் பிடிக்கவில்லை. இதைத் தடுத்து நிறுத்த நினைத்தாள்.

 ஒரு நாள் ஒரு சாமியாரை அழைத்து வந்து வீட்டில் விட்டு விட்டு சாப்பிட இலை வாங்கப் போனான். சாமியார் விருந்தை எதிர்பார்த்து ஆசையோடு உட்கார்ந்திருந்தார். தாமோதரனின் மனைவி வீட்டில் இருந்த நெல்லு குத்துகிற உலக்கையைக் கழுவி, விபூதி பூசி, மாலை போட்டு சாமியாரு பார்வையில் படுகிற மாதிரி வைத்தாள். சாமியாருக்குப் புரியவில்லை. ‘உலக்கைக்கு ஏன் மாலை போட்டு வைத்திருக்கிறாய்’ என்று கேட்டார்.

‘எங்கள் வீட்டுக்காரர் உங்களிடம் ஒன்றும் சொல்லவில்லையா’ என்று அவள் கேட்டாள். சாமியார் ‘இல்லை’ என்று சொன்னார்., அவள் உடனே முகத்தை சோகமா வைத்துக்கொண்டு ‘எங்க வீட்டுக்காரர் தினம் ஒரு சாமியாரை அழைத்துக்கொண்டு வந்து வயிறார சாப்பாடு போட்டு, இந்த உலக்கையால் நன்கு அடித்து அனுப்புவார்; அவருக்கு அப்படியொரு வேண்டுதல்’ என்றாள்.

இதைக் கேட்ட சாமியார் மெதுவாக நழுவி வீட்டை விட்டுப் போயிட்டார். அப்பொழுது அவள் வீட்டுக்காரன் தாமோதரன் வீட்டுக்கு வந்தான். சாமியாரைக் காணோம். மனைவியைக் கூப்பிட்டு சாமியார் எங்கே என்று கேட்டான். ‘சாமியார் இந்த உலக்கையை கேட்டார். உங்கள் அம்மா வைத்திருந்த உலக்கையாச்சே, நான் தரமுடியாது என்று சொன்னேன். அவர் கோபித்துக்கொண்டு இப்பொழுதான் போனார்’ என்று சொன்னாள்.

 ‘சாமியார் கேட்டால் கொடுக்க வேண்டியதுதானே! உலக்கயைக் கொடு’ என்று உலக்கையை கையில் எடுத்துக்கொண்டு சாமியாரை நோக்கி ஒடினான். இவன் உலக்கையோட வருவதைப் பார்த்த சாமியார் தன்னை அடிக்க வருவதாக நினைத்து பள்ளம் மேடு, குண்டு, குழி, முள், பாராமல் குதித்து ஓடினார். அவருக்கு எப்படியாவது உலக்கையை கொடுத்துவிட எண்ணி தாமோதரன் துரத்த, சாமியார் ஓடியே போயிட்டார்”.

கதையீன் நீதி

உழைத்து வாழ் வேண்டும் பிறர்  உழைப்பில் வாழ்ந்திடாதே!

Friday, March 29, 2013

தர்மத்துக்கு என் சொத்து




ஒரு ஊரில் மிகப் பெரிய செல்வந்தர் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் மிகவும் கருமியாக கஞ்சத்தனத்துடன் வாழ்ந்து வந்தார்.

அந்த ஊரில் நடைபெறும் கோவில் சீரமைப்பு, பள்ளிக் கட்டடம் கட்டுதல், கிராம மேம்பாடு போன்ற பல நல்ல செயல்பாடுகளுக்காக ஊர் பொதுமக்கள் பலமுறை போய் கேட்டும் ஒரு பைசா கூட கொடுக்காதவர்.

தீடிரென படுக்கையில் விழுந்தவர் சாகும் தருவாயை அடைந்தார். உடனே ஊர் பொதுமக்களை அழைத்து "எனக்குப் பிறகு எனது சொத்துக்கள் அனைத்தும் தருமத்திற்கே!" என்றார்.

ஊர் மக்களுக்கெல்லாம் அதிர்ச்சி, ஆச்சரியம்.

உடனே அங்கிருந்த ஊர் முக்கிய பிரமுகர் செல்வந்தரிடம், "ஐயா! உங்கள் சொத்துக்கள் அனைத்தும் தருமத்திற்கு தர ஒப்புக் கொண்டதற்கு மிக்க நன்றி! இந்த சொத்துக்களை கல்வி வளர்ச்சிக்காக உபயோகிக்கலாமா? அல்லது மருத்துவமனை கட்ட உபயோகிக்கலாமா?" என்று கேட்டார்.

அதற்கு அந்த பெரியவர் "அட நீங்க ஒண்ணு, இந்த சொத்துக்கள் அனைத்தும் எனது மனைவி தருமம் என்கிற தருமாம்பாளுக்கே சொந்தம்” என சொன்னாராம்.

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...