Total Pageviews

Thursday, May 23, 2013

இளவரசி புனிதவள்ளி

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு புனித வள்ளி என்ற அழகு தேவதை ஒருத்தி மகளாக இருந்தாள்.

அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க  ஜோதிட வித்வான் ம்ற்றும் சகல கலைகளும் அறிந்த பண்டித வித்வான் ராஜசிம்மனை ஆசிரியராக நியமித்தார் மன்னர். அந்த ராஜசிம்மனுக்கு தன்னிடம் கல்வி கற்க்கும் இளவரசி புனிதவள்ளி மேல நாட்டம். தன் விருப்பத்தைத் இளவரசி புனித வள்ளியிடம் தெரிவித்தான்  ராஜசிம்மன். இளவரசி புனிதவ்ள்ளி மறுத்தாள்.

இளவரசி புனித வள்ளியை அடைந்தே தீர வேண்டும் என  எண்ணிய ராஜசிம்மன் என்ன செய்தான் தெரியுமா?

மன்னா உங்கள் மகள் புனித வள்ளி ஜாதகத்தில் கட்டம் சரிய்ல்லை. அவளால் உனக்கும் இந்த நாட்டுக்கும் ஆபத்து. இதிலேயிருந்து நீங்களும் நாடும் தப்பிக்கவேண்டுமானால் புனித வள்ளியை ஒரு பொட்டியில வைத்து ஆற்றில் விட்டுவிடு என்றான் ராஜசிம்மன்.

இதை நம்பிய மன்னனும் அப்படியே செய்துட்டான். பெட்டி ஆற்றில் மிதந்துகொண்டே வந்தது. காட்டில் வேட்டையாடிக் கொண்டு இருந்த பக்கத்து நாட்டு  இளவரசன் அந்தப் பொட்டியப் பாத்து, எடுத்து திறந்து பாத்தான். அதில் புனித வள்ளி மயங்கிய நிலையில் இருந்தாள். அவளிடம் கேட்டு உண்மையைத் தெரிந்துகொண்டான் இளவரசன்

பின்னர் அவளைத் திருமணம் செய்துகொண்டான். பின்னர் அவன் வேட்டையாடிய புலியைப் பெட்டியில அடைத்து ஆற்றில் விட்டான். காட்டில் காத்துக்கொண்டிருந்த ஆசிரியர் ராஜசிம்மன் பெட்டியை கொண்டுபோய் ஒரு வீட்டில் வைத்தான். நல்லா அலங்காரம் செய்துவிட்டு கதவை சாத்தி தாழ்பாள் போட்டான். கனவுலகில் சன்சரித்தான். இராசா மகளை அனுபவிக்கப் போகின்ற ஆசையில் பெட்டியைத் திறந்தான். அடிபட்டுக் கிடந்த புலி ராஜசிம்மன் மேல் பாய்ந்து கொன்றது.“

கதையின் நீதீ

ஆசிரியர் தொழில் புனிதமானது. அத்தொழிலுக்குக் களங்கம் ஏற்படும் வகையில் தப்பு செய்ய நினைப்பவன் அழிவான்

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...