ஒரு பெண் ஒரு
கிளியை விலைக்கு வாங்கினாள். ஆனால் பிறகு மிகவும் கவலைப்பட்டாள் . அதற்க்காக அவள் நல்ல
விலை கொடுத்திருந்தாள். கிளி அழகாக இருந்தது. ஆனால் அது பேசும் ஒரு விஷயம் ஆபத்தாக
இருந்தது.
அடிக்கடி அந்த
கிளி உரக்க, “ நான் ஒரு கெட்ட பெண்மணி” என்று கூறியது.
இதில் ஏதோ விஷயம்
இருக்கிறது . அந்தப் பெண் தனியாக வாழ்பவள். மிகவும் மதப்பற்றுள்ளவள். இல்லை யென்றால்
ஏன் தனியாக வாழவேண்டும்? அவள் மிகவும் கடுகடுப்பான பெண்.
இந்த கிளி மீண்டும்
, மீண்டும் ,”நான் மிகவும் கொடுமைக்காரப் பெண்” என்று கூறியது.
அவள் பூசாரியிடம்
சென்று “ இது மிகவும் மோசமானது. நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறேன். கிளி
மிகவும் அழகாக இருக்கிறது . எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கின்றன, இது ஒன்றைத் தவிர”
என்று கூறினாள்.
பூசாரி சொன்னார்
:
“ கவலைப்படாதே.
என்னிடம் இரண்டு பக்தியுள்ள கிளிகள் இருக்கின்றன. ஒன்று வழிபாடு செய்யும் ; மற்றொன்று
மணியடிக்கும் . நீ உன் கிளியைக் கொண்டு வா, இந்த கிளிகளுடன் கொஞ்ச நாள் உன் கிளியை
விட்டுச் செல். நல்ல நட்பு எப்போதும் உதவி செய்யும். பின்னர் உன் கிளியை எடுத்துச்
செல்லாம் ! “
அந்த பெண்ணுக்கு
இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. அவள் ஒப்புக் கொண்டு கிளியை எடுத்து வந்தாள்
. பூசாரி தன் கிளிகளுக்கு அந்த கிளியை அறிமுகப் படுத்தி வைத்தார். ஆனால் அவர்கள் எதுவும்
பேசும்முன் அந்தக் கிளி கூறியது . “ நான் மிகவும் கொடுமைக்காரப் பெண் .”
பூசாரியும்
என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்.
அப்போது வழிபாடு
செய்து கொண்டிருந்த கிளி வழிபாட்டை நிறுத்திவிட்டு அடுத்த கிளியிடம் ,” முட்டாளே !
இன்னும் ஏன் மணியாட்டிக்கொண்டிருக்கிறாய் ? நம் பிராத்தனைகள் நறைவேறி விட்டன “ என்று
கூறியது .
அவை ஒரு பெண்னுக்காகப் பிராத்தனை செய்து வந்திருந்தன