Total Pageviews

Tuesday, December 20, 2011

அமைதி

அந்த ரயில் பெட்டியில் கண்பார்வையற்ற ஒருவர் பிச்சை கேட்டு வந்த போது அவரவர் கையிலிருந்த சில்லரைகளைப் போட மகிழ்ச்சியாக அடுத்த பெட்டி நோக்கி நகர்ந்தார் அவர். சிறிது நேரத்தில் பத்து வயது சிறுவன் அழுக்கு உடையுடன் கையேந்தியபடி வந்தான். அவனுக்கு காசு போட யாருக்கும் மனசு வரவில்லை.

 ''ஏண்டா கை கால் நல்லாத்தானே இருக்கு, வேலை செஞ்சு பொழைக்கிறத விட்டுட்டு பிச்சை எடுக்கிற? போடா அந்த பக்கம்!'' ஐம்பது வயது பெரியவர் தனது நரைத்த மீசையை முறுக்கியபடி சொன்னார். 

சிறுவன் அவரது மிரட்டலுக்கு பயந்து அந்த இடத்தைவிட்டு நகர முயற்ச்சிக்கையில் குமார் அவனது கையில் பத்து ருபாயை திணித்துவிட்டு படித்துக்கொண்டிருந்த நாவலை மீண்டும் தொடர்ந்தான். 

'' எதுக்கு இந்த மாதிரி பசங்களுக்கு காசு கொடுத்து என்கரேஜ் பண்றீங்க? பெரியவர் நேரடியாகவே கேட்டார். ''அந்த பையன் வேலை செஞ்சு பொழைக்கலாம்தான் இருந்தாலும் இண்னைக்கு பிச்சை எடுக்கிறதுன்னு முடிவு பண்ணி வந்துட்டான், யாருமே அவனுக்கு பிச்சை போடலையின்னா அவன் எப்பிடி சாப்பிடுவான் அவனுக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்குல்ல!'' குமார் சொன்ன போது யாரிடமும் பதிலின்றி அமைதியானது அந்த பெட்டி ரயில் சத்தத்தை தவிர. 

நன்றி :பாக்யா

நல்லெண்ணம்

சீனிவாசனும் அவனது நண்பர் வேணுகோபாலும் முடிவெட்டிக்கொள்ள சலூண் கடைக்கு வந்தார்கள்

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நான்கு பேர் வரிசையில் முடிவெட்டிக்கொள்ள காத்திருந்தார்கள் இருவரும் சலித்தபடியே வெளியில் வந்து வேடிக்கை பார்த்தார்கள்.

 " சீனு பக்கத்து கடையுல ஒரு சிகரெட் பத்த வெச்சுட்டு வந்துடலாம் வா" வேணுகோபால் அழைத்தபோது வேண்டாம் என மறுத்த சீனிவாசனை ஆச்சரியமாகப் பார்த்தான் வேணுகோபால்.


 ஐந்து நிமிடத்துக்கொரு தரம் சிகரெட் பிடிக்கும் சீனிவாசன் இப்பொழுது மட்டும் வேண்டாமென்று சொன்னதை அவனால் நம்ப முடியாமல் அதுக்கு என்ன காரணமென்று நேரடியாகவே கேட்டான். "


முடிவெட்டுறவங்க நம்ம முகத்துக்கு பக்கத்துல நின்னு முடி வெட்டுறப்போ நாம சிகரெட் புடிச்சுட்டு போய் உட்கார்ந்தா நம்ம வாயிலிருந்து வர்ற சிகரெட் வாசம் அவருக்கு பிடிக்காம போய் முகம் சுளிக்கலாம் அதனாலதான் இப்போ வேண்டாமுன்னு சொன்னேன்" அவனது பதிலில் வெளிப்பட்ட நல்லெண்ணத்தை நினைத்து அவனை பெருமையாகப் பார்த்தான் வேணுகோபால்.

நன்றி :பாக்யா

வீரன்

ஜல்லிக்கட்டில் திமிறிய காளையை துரத்தி வந்து அதன் திமிலைப்பிடித்து அடக்கினான் லிங்கம். வெற்றிக்களிப்பில் கறிச்சோறு தின்றுவிட்டு பரிசாக கிடைத்த பணமுடிப்பை கையில் வைத்துக்கொண்டு தன்னை திருமணம் செய்ய மறுத்து வரும் முறைப்பெண் வசந்தியைப் பார்க்கப் புறப்பட்டான். 

வசந்தி குளத்தங்கரையில் துணி துவைத்துக்கொண்டு நின்றாள். அவளுக்கு முன்பாக நெஞ்சை நிமிர்த்தியபடி வந்து நின்றான் லிங்கம். '' பார்த்தியா காளைய அடக்கி பணமுடிப்பும் வாங்கியிட்டேன், இப்ப சொல்லு இந்த வீரன கட்டிக்கிறியா இல்ல அந்த ஒல்லிப்பிசாசு தங்கவேலுவ கட்டிக்கப்போறியா?'' 

'' தங்கவேலு உன்ன விட வீரன், நான் அவனத்தான் கட்டிக்குவேன்!'' வசந்தி முடிவாகச்சொன்னாள். " என்னவிட அவன் எந்த விதத்துல வீரன் சொல்லு!'' கோபம் கொப்பளிக்க கேட்டான் லிங்கம். 

 '' தெருக்கோடியுல இருக்கிற டீக்கடையுல இருந்த இரட்டை டம்ளர் முறையுல டீ குடிக்க கூடாதுன்னு போராடி, அத வேரோட பிடுங்கி எறிஞ்சி எல்லாரையும் ஒரே டம்ளர்ல டீ குடிக்க வெச்சானே தங்கவேலு, என் பார்வைக்கு அவன்தான் வீரனா தெரியறான்!'' 

வசந்தி சொன்னபோது தங்கவேலு வீரன் என்பதை ஒத்துக்கொண்டு வந்தவழியே திரும்பி நடந்தான் லிங்கம், அவளை மறந்தபடி.. 

 நன்றி :பாக்யா

குலதெய்வம்

ஐந்தாம் வகுப்பில் படிக்கும் எனது மகள் மதிவதனியோடு சாமி கும்பிட்டு வரலாமென்று தீர்மானித்து இருவரும் ஹோண்டா சிட்டியில் புறப்பட்டோம். நான்கு கிலோ மீட்டர் தள்ளியிருந்தது வழக்கமாக நாங்கள் சாமி கும்பிடும் அந்த குலதெய்வக்கோவில். சின்னவேடம்பட்டியை தாண்டி செல்கையில் அங்கிருந்த முருகன் கோவிலில் பறையொலி சத்தம் காதைப் பிளக்க, சிறப்பு பூஜை நடந்து கொண்டிருந்தது. பெண்கள் வரிசையாக நின்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 

" அம்மா எதுக்கு அவ்வளவு தூரத்துல இருக்குற கோவிலுக்க்கு சாமி கும்பிடப்போகணும், வழியில இருக்கிற இந்த கோவில்லயே சாமி கும்பிட்டுட்டு போலாமே!" மதிவதனி கேட்டபோது எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன். என் மகள் விடவில்லை ,மீண்டும் கேட்கவே நான் மென்று விழுங்கியபடி அந்த உண்மையைச் சொன்னேன். 

 " அது தாழ்ந்த சாதிக்காரங்க கும்புடுற கோவில், நாம அங்கயெல்லாம் போகக்கூடாது!" என்றேன். " அப்போ அந்த கோவில்ல இருக்குற முருகன் சாமியும் தாழ்ந்த சாதி கடவுளா?" 

மதிவதனி வெகுளியாய் கேட்டபோது எனக்கு சுருக்கென்றிருந்தது. மனுஷங்கதான் உயர்ந்தவன், தாழ்ந்தவன்னு பிரிஞ்சு கிடக்கிறாங்க, 

அவங்க தனித்தனியே சாமி கும்பிடுறதால தெய்வங்கள் மேல தவறான எண்ணம் அந்த பிஞ்சு மனதில் பதிந்துவிடக்கூடாதென்று வண்டியை திருப்பி வழியிலிருந்த அந்த முருகன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்பினோம் எங்கள் குலதெய்வத்தை மறந்தபடி..

 நன்றி :பாக்யா

என் கேள்விக்கு என்ன பதில்?

ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் எனது மகன் இளமதியன் அன்று காலை அவனது தமிழ் பாடத்திலுள்ள மாவட்ட ஆட்சியாளரின் பணிகள் பற்றிய பாடத்தை சத்தம் போட்டு படித்துக்கொண்டிருந்தான். 

நான் அவன் பக்கத்தில் வந்தமர்ந்து அவன் படிக்கும் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். " மாவட்ட ஆட்சி யாளரின் பணிகள் பாடத்துல உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா என்னக்கேளு, நான் விளக்கம் சொல்றேன்!'' என்று தெனாவெட்டாகக் கேட்டேன். அவன் பதில் சொல்லாமல் பாடத்தை படிப்பதிலேயே கவனமாக இருந்தான். 

மறுபடியும் நான் கேட்டு தொந்தரவு செய்யவே, " எனக்கொரு சந்தேகம் இருக்கு, ஆனா அதுக்கு நீங்க பதில் சொல்லமாட்டீங்க!" என் இம்சை தாங்க முடியாமல் சொன்னான் இளமதியன். எனக்கு கோபம் தலைக்கேறியது . எம்.ஏ படித்திருக்கும் என்னிடம் அவனது கேள்விக்கு பதில் இல்லாமல் போகுமா? எனக்குள் கர்வம் வந்தமர்ந்து உசுப்பேற்றிக்கொண்டிருந்தது. ''அட சும்மா கேளுடா, நான் பதில் சொல்றேன்!'' அவனிடம் மல்லுக் கட்டி நின்றேன்.

 அவன் தொண்டையை ஒரு முறை கனைத்துவிட்டு கேட்டான். " ஒரு மாவட்ட ஆட்சியாளர் ஆகணுமுன்னா அதுக்கு ஐ.ஏ.எஸ் படிச்சு பாஸ் பண்ணியிருக்கணும், அப்பறம் உதவி கலைக்டரா இருந்து அனுபவப்பட்டு அப்பறம் தான் ஒரு மாவட்டத்துக்கு கலைக்டரா போடுவாஙக, சாதாரண ஒரு மாவட்டத்த நிர்வாகம் பண்றதுக்கே ஐ.ஏ.எஸ் படிப்பு தேவையின்னு இருக்கிறப்போ,

மொத்த மாவட்டத்தையும் நிர்வாகம் பண்ற முதல்வர் மட்டும் ஏன் வெறும் அஞ்சாம் கிளாஸ் படிச்சிருந்தாகூட தேர்தல்ல ஜெயிச்சா போதுமுன்னு உட்கார வைக்கிறீங்க, கட்சியில ஐ.ஏ.எஸ் படிச்சவங்களே கிடையாதா? அவங்கள தேர்தல்ல நிக்க வெச்சு முதல்வர் பதவியுல ஏன் உட்கார வைக்கிறதில்ல..!" 

இளமதியனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒருகணம் தடுமாறி அந்த இடத்தைவிட்டு மெல்ல நகர்ந்தேன். விடையற்ற அவனது கேள்வி மட்டும் என்னை அரித்துக்கொண்டே இருந்தது. 

நன்றி :பாக்யா

மாலதி ஐ லவ் யூ

மூன்றாவது மாடியிலிருந்து கீழே எட்டிப்பார்த்த பார்வதி அந்த காட்சியைக் கண்டு திடுக்கிட்டாள். முதல்மாடியின் படிக்கட்டில் நின்று கொண்டு தனது மகன் பிரசாந்தும், தன்னிடம் டியூசன் படிக்க வரும் மாலதியும் நெருக்கமாக நின்றிருந்தார்கள். பிரசாந்த் கடிதம் ஒன்றை நீட்ட, மாலதி அதை வாங்கி தன் ஜாக்கெட்டுக்குள் திணித்தாள். பார்வதிக்கு எல்லாமே புரிந்தது. ' வரட்டும் அவ!' மனதிற்க்குள் கறுவிக்கொண்டாள். சற்று நேரத்தில் மாலதி வந்து சேர்ந்தாள். " என் மகன் உனக்கு லெட்டர் குடுத்தானா?" சற்று மிடுக்காகவே கேட்டாள் பார்வதி. " டீச்சர் அது வந்து...." தடுமாறி தலை குனிந்தாள் மாலதி. " எல்லாத்தையும் பார்த்துகிட்டுதான் நின்னேன், அந்த லெட்டர குடு!" பார்வதி முறைக்க வேறுவழியின்றி ஜாக்கெட்டுக்குள்ளேயிருந்து அந்த கடிதத்தை எடுத்து தந்துவிட்டு டியூசனுக்குக்கூட காத்திருக்காமல் வேகமாய் மாடிப்படியிறங்கி ஓடினாள் மாலதி. கடிதத்தை படித்த பார்வதியின் முகம் சுருங்கியது. மகனுக்கு புத்திமதி சொல்லி திருத்தவேண்டும் என்று அவனுக்காக காத்திருந்தாள். அரைமணி நேரம் கழிந்து வந்த பிரசாந்திடம் பொரிந்து தள்ளினாள் பார்வதி. " என்ன புள்ளடா நீ, இப்பிடியா பண்றது, உன்ன என் புள்ளயின்னு சொல்லவே வெட்கமா இருக்கு, ஒரு பொண்ணுக்கு இப்பிடியா லெட்டர் எழுதி தருவ? அந்த பொண்ணே வலிய வந்து அவ காதல உன்கிட்ட சொன்னதுக்கு ` முடியாது, வீட்டுல அம்மா அப்பாவுக்கு தெரிஞ்சா பிரச்சனையாயிடும் என்ன மறந்துடு! இப்பிடியா எழுதி அவகிட்ட குடுப்ப, காதலுக்கு நானும் உன் அப்பாவும் எப்பவுமே தடையா இருக்கமாட்டோம், காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டா ஜாதி, மதம் பார்க்கவேண்டியதில்ல, வரதட்சணையின்னு பொண்ணு வீட்டுக்காரங்கள வேதனப்படுத்த வேண்டியதில்ல, போய் மாலதிகிட்ட உன் காதல சொல்லு!" பார்வதியின் வார்த்தைகளைக்கேட்டு மின்னல் வேகத்தில் பறந்தான் பிரசாந்த், மாலதியிடம் ஐ லவ் யூ சொல்ல. நன்றி :பாக்யா

ஐம்பது ருபாய்க்கு முப்பதாயிரம்

"ஜாமிட்டிரி பாக்ஸ் பென்சில் பாக்ஸ் ரெண்டுல ஏதாவது ஒண்ணு வாங்கு" அடம் பிடிக்கும் தனது மகன் ஜானுவிடம் அமைதியாய் சொன்னார் சீனிவாசன். ``முடியாது எனக்கு ரெண்டும் வேணும்!'' என்று மறுபடியும் அடம் பிடித்தான் ஜானு. 

சீனிவாசனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வர அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்தார் அழுகையும் ஏமாற்றமும் கன்னத்தில் வாங்கிய அடியும் அவனை உலுக்க அன்றைய இரவு சங்கடத்தோடு நகர்ந்து போனது. 

மறுநாள் காலை பள்ளிக்கூடம் போக தயாராகையில் ஜானுவுக்கு தலை சுத்துவதுபோல் தோன்ற தனது ஞாபசக்தியை மொத்தமும் இழந்து நின்றான் ஜானு. அவனை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்கரிடம் காட்டி பதட்டமானார் சீனிவாசன். 

 "ஜானுவுக்கு வந்திருக்கிறது டிஸ்ஸோஸியேட் அம்னீஷியங்கிற வியாதி, இது மன அழுத்தத்தாலயும், பயத்தாலயும் வர்ற நேய், மூணு மாசம் தொடர்ந்து சிகிட்சை எடுத்தா இழந்த ஞாபகசக்திய திரும்ப கொண்டு வந்துடலாம் அதுக்கு முப்பதாயிரத்துக்கு மேல செலவாகும்"

 டாக்டர் சொல்லி முடித்த போது ஐம்பது ருபாய் பென்சில் பாக்ஸ் வாங்கி தராமல் போனதற்க்கு இத்தனை பெரிய செலவா என்று மயங்கி சரிந்தார் சீனிவாசன் 

நன்றி :பாக்யா

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...