புதிதாக திருமணம் இளைஞன் ஒருவன் மாமியார் வீட்டுக்கு கிளம்ப தயராக இருந்தானாம். போகும் போது தனது தாயிடம்" அம்மா, நான் எனது மாமியார் வீட்டிற்கு போய் வருகிறேன் நான் எப்போது திரும்பி வரட்டும்" என்று கேட்க அதற்கு அவனது தாயார், உனது முகம் எப்போது உனக்கு தெரிகிறதோ அப்போது நீ கிளம்பி வந்து விடு". என்று கூறினார்.
புது மாப்பிள்ளை தனது மாமியார் வீட்டிற்கு சென்றதும் மாப்பிள்ளை பெண்ணுடன் வந்ததும் மாமியாருக்கு தலையும் வாலும் புரியவில்லை. தினம் தினம் புது புது பலகாரம் செய்து போட மருமகன் ஆகா என்று எண்ணி வக்கனையா வாய்க்கு ருசியாக சாப்பாடு கிடைக்க தன் ஊர் நினைப்பே வரவில்லை. மாமியாரும் இதோ இன்று ஊருக்கு கிளம்பிவிடுவார் நாளை கிளமபுவார் என் நினைக்க நினைப்பு பொய்த்து போனது.
எத்தனை நாளைக்கு தான் வகைவகையாய் சமைத்து போடமுடியும்? எனவே முதலில் சாப்பாட்டில் இனிப்பு வகை குறைக்கப்பட்டது. ஆனால் மருமகன் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து நன்கு சாப்பிட்டு வந்தார். அடுத்து சில நாட்களில் சாப்பாட்டில் இருந்து கூட்டு வகையறா குறைந்தது. அப்பவும் மருமகன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்து சில நாட்களில் பொரியல் குறைந்தது. அதையும் மருமகன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
மாமியாரும் பொறுதது பார்த்து சாப்பாட்டில் இருந்து ரசம் நீக்கப்பட்டது. அப்போதும் மருமகன் அசைந்து கொடுக்கவில்லை. அடுத்து சாம்பார் மோர் மட்டுமே பரிமாறப்பட்டது. அதற்கும் மருமகன் ஒன்றும் கூறவில்லை. அடுத்து வந்த நாட்களில் சாப்பாட்டில் சாம்பார் மாயமானது.
இந்நிலையில் ஒருநாள் ஒரு பாத்திரத்தில் சிறிது கஞ்சி கொண்டு வந்து வைத்தார் மாமியார். மருமகனும் ஏதோ புதிய ஐயிட்டமாக இருக்கும் என்று எண்ணி பாத்திரத்தில் என்ன உள்ளது என்று பார்க்க குனிந்தான். அதை பார்த்த அவனுக்கு அப்பாத்திரத்தில் கஞ்சி காய்ச்சி வைக்கப்பட்டு இருந்தது. அதில் அவன் முகம் தெரிந்தது. அப்போதுதான் அவனுக்கு அவன் தாயார் கூறிய வார்த்தை நினைவுக்கு வந்தது.
இதென்ன இதில் நமது முகம் தெரிகிறது. முகம் தெரிந்தால் வந்து விடு என்று தாயார். கூறியது இதைத் தானோ என்று என்னி உடனே ஊருக்கு கிளம்பிவிட்டார்.
விருந்தும் மருந்தும் மூன்று நாள். மனிதர்கள் வாழ்விலும் இப்படித்தான். குடும்பத்தில், நண்பர்களிடத்தில், அலுவலகத்தில், சமூகத்தில் தங்கள் எல்லை எதுவரை என்பதை உணர்ந்து அளவாக அடியெடுத்து வைப்பவர்கள் வாழ்வில் வென்று விடுவார்கள்.
No comments:
Post a Comment