Total Pageviews

Thursday, January 9, 2025

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

 

ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொண்டி ருந்தாள். அந்த கன்டிசன்களை எல்லாம் கேட்ட மாப்பிள்ளை கள்  இவளைக்கல்யாணம் செய்து வாழமுடியாது என தலை தெறிக்க ஓடித் தப்பித்துக் கொண்டு இருந்தார்கள். நல்ல அழகான பெண்ணாக தேடிக்கொண்டு இருந்த ஒருத்தனுக்கு இந்த பெண்ணைப் பற்றிய தகவல் கிடைத்தது அவன் தன் அம்மாவிடம் அந்த பெண்ணை பார்த்து பேசிக் கல்யாணம் செய்யலாம் எனச் சொல்லி இருக்கிறான்.

அவன் அம்மா ஏற்கனவே இந்த பெண் பற்றி கேள்விப்பட்டு இருந்ததால் வேண்டாம் என்று மறுத்திருக்கிறாள். இருந்தும் இவன், நான் அந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்வதாக உள்ளேன் எனச் சொல்லவும், சரி வா பெண் பார்த்துப் பேசுவோம் என அவனும் அவனுடைய அம்மாவும் சேர்ந்து அங்கே போனார்கள்.

போகும்போதே அம்மாவிடம் சொல்லிவிட்டான்: “அவள் எந்த கன்டிசன் போட்டாலும் தலையாட்டி சரி என சொல்லிவிடு அம்மா”

அம்மாவும் சரி என்று சொல்லிவிட்டார்.

பெண்வீட்டிற்குப் போய்ப் பெண் பார்த்து முடிக்கும்போது, பெண் போட்ட அத்தனை கன்டிசனுக்கும் அவன் சம்மதித்துவிட்டான். ஆனால் அவன் அன்னை நொந்து போய்விட்டதோடு மனதில் நம் மகனின் வாழ்க்கை சிக்கலாகப் போகிறது என்று நினைத்தார்.

மணப்பெண்ணும் நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்று  திருமணத்துக்கு ஒத்துக் கொண்டாள்.

திருமணமும் நன்றாக முடிந்து மனைவியை வீட்டுக்கு அழைத்துக்

கொண்டு அவன் திரும்பி வந்து கொண்டிருந்தான். வரும் வழியில் ஒரு மாடு பாதையில் நின்று கொண்டு இருந்தது.

இவன் சட்டென அருகில் கிடந்த உலக்கையை எடுத்து மாட்டை அடித்து இனிமேல் போகும் பாதையில் நிக்காதே என்று சொல்லிக் கத்தியிருக்கிறான்..

அடுத்து வழியில் ஒரு நாய் படுத்து இருந்தது. இவன் தன் காலால் அந்த நாயைப் பலமாக உதைந்து, இனிமேல் போகும் பாதையில்

படுப்பாயா என்று சொல்லி இருக்கான். வலி தாங்காத நாயும் அலறலோடு ஓடியிருக்கிறது.

அடுத்ததாக, வீட்டுக்குள் நுழையும் முன்பு வீட்டு வாசலில் நின்ற சேவல் கூவியது. இவன் சட்டென்று சேவலைப் பிடித்து இனிமேல் எப்படிக் கூவுவாய் என்று பார்க்கிறேன்” என்று சொல்லியவாறு சேவலின் தலையைப் பிடித்து பலமாகத் திருகி அதைக் கொன்றுவிட்டான்.

இதையெல்லாம் வழியெங்கும் பார்த்துகொண்டே வந்த அவனுடைய புது மனைவி, பயத்தில் உறைந்துபோனதோடு, தான் போட்ட கன்டிசன்களை எல்லாம் மறந்து, அவனுக்கு அடங்கி வாழ்ந்தாள்.

இதுதான் மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை!

விருந்தும் மருந்தும் மூன்று நாள்!

 

புதிதாக திருமணம் இளைஞன் ஒருவன் மாமியார் வீட்டுக்கு கிளம்ப தயராக இருந்தானாம். போகும் போது தனது தாயிடம்" அம்மா, நான் எனது மாமியார் வீட்டிற்கு போய் வருகிறேன் நான் எப்போது திரும்பி வரட்டும்" என்று கேட்க அதற்கு அவனது தாயார், உனது முகம் எப்போது உனக்கு தெரிகிறதோ அப்போது நீ கிளம்பி வந்து விடு". என்று கூறினார்.

புது மாப்பிள்ளை தனது மாமியார் வீட்டிற்கு சென்றதும் மாப்பிள்ளை பெண்ணுடன் வந்ததும் மாமியாருக்கு தலையும் வாலும் புரியவில்லை. தினம் தினம் புது புது பலகாரம் செய்து போட மருமகன் ஆகா என்று எண்ணி வக்கனையா வாய்க்கு ருசியாக சாப்பாடு கிடைக்க தன் ஊர் நினைப்பே வரவில்லை. மாமியாரும் இதோ இன்று ஊருக்கு கிளம்பிவிடுவார் நாளை கிளமபுவார் என் நினைக்க நினைப்பு பொய்த்து போனது.

எத்தனை நாளைக்கு தான் வகைவகையாய் சமைத்து போடமுடியும்? எனவே முதலில் சாப்பாட்டில் இனிப்பு வகை குறைக்கப்பட்டது. ஆனால் மருமகன் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து நன்கு சாப்பிட்டு வந்தார். அடுத்து சில நாட்களில் சாப்பாட்டில் இருந்து கூட்டு வகையறா குறைந்தது. அப்பவும் மருமகன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்து சில நாட்களில் பொரியல் குறைந்தது. அதையும் மருமகன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

மாமியாரும் பொறுதது பார்த்து சாப்பாட்டில் இருந்து ரசம் நீக்கப்பட்டது. அப்போதும் மருமகன் அசைந்து கொடுக்கவில்லை. அடுத்து சாம்பார் மோர் மட்டுமே பரிமாறப்பட்டது. அதற்கும் மருமகன் ஒன்றும் கூறவில்லை. அடுத்து வந்த நாட்களில் சாப்பாட்டில் சாம்பார் மாயமானது.

இந்நிலையில் ஒருநாள் ஒரு பாத்திரத்தில் சிறிது கஞ்சி கொண்டு வந்து வைத்தார் மாமியார். மருமகனும் ஏதோ புதிய ஐயிட்டமாக இருக்கும் என்று எண்ணி பாத்திரத்தில் என்ன உள்ளது என்று பார்க்க குனிந்தான். அதை பார்த்த அவனுக்கு அப்பாத்திரத்தில் கஞ்சி காய்ச்சி வைக்கப்பட்டு இருந்தது. அதில் அவன் முகம் தெரிந்தது. அப்போதுதான் அவனுக்கு அவன் தாயார் கூறிய வார்த்தை நினைவுக்கு வந்தது.

இதென்ன இதில் நமது முகம் தெரிகிறது. முகம் தெரிந்தால் வந்து விடு என்று தாயார். கூறியது இதைத் தானோ என்று என்னி உடனே ஊருக்கு கிளம்பிவிட்டார்.

விருந்தும் மருந்தும் மூன்று நாள். மனிதர்கள் வாழ்விலும் இப்படித்தான். குடும்பத்தில், நண்பர்களிடத்தில், அலுவலகத்தில், சமூகத்தில் தங்கள் எல்லை எதுவரை என்பதை உணர்ந்து அளவாக அடியெடுத்து வைப்பவர்கள் வாழ்வில் வென்று விடுவார்கள்.

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...