Total Pageviews

Monday, May 18, 2020

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை !

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை ?

 


கந்தசாமி என்ற ஏழை ஒருவர் திடீரென ஒருநாள் இறந்துவிடுகிறார். அவர் தான் இறந்துவிட்டதை உணரும் போது, கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் வந்து அவருக்கு காட்சி தருகிறார்.


அப்போது அவரின் அருகில் வந்த கடவுள் அவரிடம், மகனே.. நீ என்னுடன் வருவதற்கான நேரம் வந்துவிட்டது. இப்போது நீ என்னுடன் வர வேண்டும் புறப்படு என்று கூறுகிறார்.


அதற்கு கந்தசாமி, இப்பொழுதா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் எல்லாம் என்ன ஆவது? என்று கடவுளிடம் கேட்கிறார்.


அதற்கு கடவுள் மன்னித்துவிடு மகனே! உன்னை கொண்டு செல்வதற்கான நேரம் இது என்று கூறிவிட்டார். 


பிறகு கந்தசாமி, அந்த பெட்டியில் என்ன உள்ளது என்று கடவுளிடம் கேட்டார். அதற்கு கடவுள் உன்னுடைய உடைமைகள் தான் என்று பதிலளித்தார்.


உடனே கந்தசாமி ஆச்சரியத்துடன், என்னுடைய உடைமைகளா...என்னுடைய பொருட்கள், உடைகள், பணம் எல்லாமே இதில்தான் உள்ளதா? என ஆவலுடன் கடவுளிடம் கேட்கிறார்.


நீ கூறியவை அனைத்தும் உன்னுடையது அல்ல, அவைகள் பூமியில் நீ வாழ்வதற்கு தேவையானது மட்டுமே என்று கூறுகிறார். அப்படியானால் என்னுடைய நினைவுகளா என கந்தசாமி மீண்டும் கேட்கிறார்.


அதற்கு கடவுள், அவை காலத்தின் கோலம் என்று கூறுகிறார். கந்தசாமி மீண்டும் என்னுடைய திறமைகளா? என்று கடவுளிடம் கேட்கிறார். அவை உன் சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது என்று சொல்கிறார்.


அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் மற்றும் நண்பர்களா? என்று கடவுளிடம் கேட்கிறார். அதற்கு கடவுளும் இல்லை மகனே குடும்பமும், நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழிகள் மட்டுமே என்று சொல்கிறார்.


பிறகு சிறிது நேரம் யோசித்த கந்தசாமி, கடவுளிடம் என் மனைவி மற்றும் மக்களா என கேட்கிறார். அதற்கு கடவுள், உன் மனைவியும், மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் அல்ல. அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே என்று சொல்கிறார்.


சரி, என் உடலா என கேட்க, கடவுள் அதுவும் உனக்கு சொந்தமானதல்ல என்று கூறுகிறார்.


வேறு என்ன என் ஆன்மாவா என்று கேட்கிறார். அதுவும் உன்னுடையது அல்ல. அது என்னுடையது என்று கூறுகிறார். பிறகு கந்தசாமி மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப்பெட்டியை வாங்கி திறந்து பார்த்தார்.

பெட்டியை திறந்து பார்த்த கந்தசாமி மிகவும் அதிர்ச்சியடைந்தார். 

ஏனென்றால், அது வெறும் காலி பெட்டியாக இருந்தது. கண்ணில் நீர் வழிய கடவுளிடம், எனக்கு, என்னுடையது என்று எதுவுமே இல்லையா என்று கேட்டார்.


அதற்கு கடவுள், அதுதான் உண்மை. நீ வாழ்ந்த ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ வேண்டும். எல்லாமே உன்னுடையது என்று நினைக்காதே. ஒவ்வொரு நொடியும், உன்னுடைய வாழ்க்கையில் நிரந்தரமாகும் என்று கூறிவிட்டு கடவுள் மறைந்தார்.


நீதி :
 

நம் இறுதி காலத்தில் நாம் எதையும் நம்முடன் கொண்டு போக முடியாது. அதனால், வாழ்கின்ற ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.

No comments:

Post a Comment

சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு !

  ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங...