Total Pageviews

Monday, September 23, 2019

விவாகரத்து!







ராமநாதபுரத்தில் இருக்கும் அந்த முதியவர், ஆஸ்திரேலியாவில் இருக்கும் தன் மகனுக்கு தொலைப்பேசியில் அழைக்கிறார்!

... நான் தான் அப்பா பேசுறேன்..!

ஆங்.. சொல்லுங்கப்பா எப்படி இருக்கீங்க.. அம்மா எப்படி இருக்காங்க.. வேலை பளு அதிகம் பா.. முன்ன மாதிரி அடிக்கடி போன் செய்யமுடியல..!

வார்த்தை தடுமாறி சோகம் இழையோட முதியவர் தழுதழுத்த குரலில் "நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்ப்பா. இதை சொல்லி உன்னை கஷ்டப்படுத்த விரும்பல, அதே நேரம் சொல்லாம இருக்க முடியல!

என்னப்பா ஆச்சு , என்னமோ மாதிரி பேசுறீங்க.. சீக்கிரம் சொல்லுங்கப்பா... அவசரப்படுத்தினான் மகன்!

முதியவர் தொடர்ந்தார், எனக்கும் உங்கம்மாவுக்கும் நாளை மறுநாள் விவாகரத்து.. ! இந்த வயதில் விவாகரத்து என்று நினைக்கும்போதே வேதனையாகவும், அசிங்கமாகவும் உள்ளது.. ஆனா வேற வழியில்லை பா..!

அப்பா ஆஆஆஆஅ... மகனிடம் இருந்து அதிர்வலைகள்!

இல்லப்பா, 28 வருட திருமண வாழ்க்கை.. வேதனைகள் அதிகம்.. சலிச்சு போச்சு.. போதும்பா.. இதுக்கு மேல வாழ ஒன்னும் இல்ல, வாழவும் பிடிக்கலடா... சரிப்பா இது பத்தி மேற்கொண்டு பேச எனக்கு மனசு ஒப்பல... அதனால, குவைத்ல இருக்க உன் தங்கச்சிக்கும் நீயே போன் போட்டு சொல்லிடு.. வைச்சுடறேன்..

அப்பா..அப்பா. அம்மா கிட்ட கொடுங்க.. அம்மா கிட்ட கொடுங்.... என்று மகன் அலறியதை பொருட்படுத்தாமல் தொலைபேசி தொடர்பை துண்டித்தார்..

உடனடியாக குவைத்துக்கு போன் பறந்தது , தன் தங்கையை தொடர்பு கொண்டான்..

அண்
ணா! எப்படி இருக்கே.. குட் நியூஸ்.. எனக்கு 28% இன்கிரிமென்ட் வந்திருக்கு..

அவன் காதில தங்கை சொன்னது துளி கூட ஏறவில்லை.. அப்பா பேசினார் மா என்று ஆரம்பித்து, .. பதற்றத்துடன் அனைத்தும் சொல்லி முடித்தான்..

அடக்கடவுளே, என்ன ஆச்சு அவங்களுக்கு.. எதுக்கு இந்த முடிவு.. நம்ம இங்கே இருக்கறது மறந்து போச்சா.. ஆவேசப்பட்டாள் தங்கைக்காரி..

சரி சரி , நீ இரு.. நான் பார்த்துக்குறேன்.. கவலைப்படாதே, அப்பா கிட்ட
பேசிட்டு, இன்னும் 5 நிமிசத்துல உனக்கு பன்றேன்...

உடனே ராமநாதபுரத்துக்கு போன் பறந்தது..

அப்பா.. என்ன இது , ஏன் இப்படி ஒரு முடிவு.. நல்லா தானே இருந்தீங்க.. என்ன திடிர்னு.. இதோ பாருங்கப்பா... நான் உங்க செல்லப்பொண்ணு தானே.. நான் சொல்றத கேளுங்க.. நான் இப்போவே அண்ணா கூட பேசறேன்.. நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா.. உடனே கிளம்பி , நானும் அண்ணாவும் நாளைக்கு காலையில ராம்நாட் ல இருப்போம்.. ப்ளீஸ் பா.. அது வரைக்கும் பொறுமையா இருங்கப்பா .. ப்ளீஸ்.. பட பட வென பொறிந்து தள்ளினான்..

தொலைப்பேசி துண்டிக்கப்படுகிறது.

போனை வைத்துவிட்டு, முதியவர் தன் மனைவியிடம் திரும்பினார்... கவலைப்படாதேம்மா.. எல்லாம் நினைத்தபடியே நடக்கும்..நம்ம பசங்க ரெண்டு பேரும் தீபாவளியை நம்ம கூட கொண்டாட கிளம்பி வந்துகிட்டு இருக்காங்க..

மூனு வருஷமாச்சு புள்ளைங்கள பார்த்து.. சோகம் அப்பிய வெற்று சிரிப்புடன் இருவரும் காத்திருக்க தொடங்கினர் தங்கள் பிள்ளைகளின் வரவுக்காக..

==============================================

வேலையிலிருந்து 2 நாள் விடுப்பெடுத்து உங்கள் உறவுகளை தேடி செல்வதால், உங்கள் தலையில் வானம் இடிந்து விழுந்து விடாது..!

வேலை, பணம் தேவை.. ஆனால் அது மட்டுமே வாழ்க்கையில்லை .. பணத்தையும் தான்டி உலகம் உள்ளது என்றூ உணருங்கள் நன்பர்களே..!

நான் சாகணும்னு யாரும் நினைக்கக்கூடாது!


சிவப்பிரகாசத்துக்கு வலது கை தூக்க முடியாமல் போனபோதே புரிந்து போனது. பக்கவாதம். வயது எழுபத்தைந்து ஆகிறது. 


மனைவி போய்ச் சேர்ந்துவிட்டாள். 


பசங்க நான்கு பேரும் நான்கு ஊர்களில் வசதியாகருக் கிறார்கள்.  பெண்  அமெரிக்காவில்.

சொல்றேன்னு தப்பா நினைக்காத சிவா, இந்த நிலையில் நீ உன் சொத்துக்களை பிரிச்சி எழுதிக் கொடுத்திட்டின்னா உன்னை நடு வீதியில் விட்டுருவாங்க பசங்க' 


என்றார் வக்கீல் செந்தில்நாயகம்.


எல்லாம் ஒரு லாஜிக்தான் செந்தில்'

என்ன?


நான் சொத்துக்களை பிரிச்சிக் கொடுக்கலைன்னா எப்படா கிழம் மண்டையைப் போடும்னு என்னோட சாவைப் பத்தியே நினைச்சிட்டு இருப்பாங்க!
நான் பிரிச்சிக் கொடுத்திட்டா! 

என்னை காப்பாத்தாம மறந்துரு வாங்கதான்!


ஆனா நான் சாகணும்னு நினைக்க மாட்டாங்களே!
நான் பாட்டுக்கு ஒரு ஓரத்தில் எங்காவது கிடந்துட்டுப் போறேன்!
நான் மீதி இருக்கிற நாளை வாழ நினக்கறேன் சார்!


நான் சாகணும்னு யாரும் நினைக்கக்  கூடாது!

Monday, July 1, 2019

இன்று எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையது...


ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

"அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு    அவனுடையது தான். .

 

"அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை      கொடுத்து வாங்க பலரும் தயாராக      இருந்தனர். ஆனால் இவன்      விற்கவில்லை.
 

"இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே    எரிந்து கொண்டிருந்தது.

"ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை      பார்த்துக் கொண்டி ருந்தார்கள்.  தீ      முழுவதுமாக பரவிவிட்டதால் அதை  அ
னைத்தும் பிரயோஜனம் இல்லை என்று      எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .
 

வணிகனோ செய்வதறியாமல் கண்ணில்      நீரோடு புலம்பி கொண்டிருந்தான்.

"ஐயோ என் வீடு ! என் வீடு ! என்று
 அலறினான்.

"அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து     ஒரு விஷயத்தை சொல்கிறான்  “தந்தையே     ஏன் அழுகிறீர்கள் ?
 

"இந்த வீட்டை நான் நேற்றே மூன்று
மடங்கு லாபத்திற்கு விற்று விட்டேன். .

"இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று      கூறினான்.
 

"இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி !
 

"அவனது சோகம் அனைத்தும் மறைந்து      மகிழ்ச்சி உண்டானது !
 

" இப்போது வணிகனும் கூடி இருந்த
கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை     பார்க்க தொடங்கினான்

" அதே வீடு தான் " ,
 

" அதே நெருப்பு தான் " ,

"ஆனால் சில வினாடிகளுக்கு முன்
இருந்த தவிப்பும் சோகமும் இப்போது     அவனிடம் இல்லை !
 

 

 சிறிது நேரத்தில் வணிகனின் 2வது மகன் ஓடி வந்து “தந்தையே     ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்?  நாங்கள் விற்ற இந்த    வீட்டிற்கு முன்பணம் மட்டுமே     வாங்கியுள்ளோம்.  முழு தொகை இன்னும்    வரவில்லை.
 

"வீட்டை வாங்கியவன் இப்போது மீதி   பணத்தை தருவானா என்பது சந்தேகமே”     என்றான். 


"இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி  அடைந்தான். மீண்டும் சோகத்தில்     ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப   ஆரம்பித்தான்.
 

"தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது!
 

"சில மணித்துளிகள் பின்பு வணிகனின்    மூன்றாவது மகன் ஓடி வருகிறான். தந்தையே கவலை வேண்டாம். இந்த   வீட்டை வாங்கிய மனிதன் மிகவும்     நல்லவன் போலும்.
 

 "இந்த வீட்டை வாங்க அவன் முடிவு
   செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று
    உங்களுக்கும் தெரியாது எனக்கும்
    தெரியாது.

"ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம்! என்று என்னிடம் இப்போது தான் சொல்லி      அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான்

"இதை கேட்ட வணிகனுக்கோ ஏக
 சந்தோஷம்.

"கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி    மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய் விட்டது!
 

"மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

 " இங்கு எதுவுமே மாறவில்லை!


"அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு ",

"இது என்னுடையது என்று நினைக்கும்போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.

"இது என்னுடையது அல்ல என்று நினைக்கும்போது  உங்களை சோகம் தாக்குவது இல்லை. .

"உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை."

"ஒருவனுக்கு மட்டுமே சொந்த மானது இல்லை. அனைத்துமே அழிய கூடியது.

"நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட  காலத்திற்கு பின் அழிய க்கூடியது அல்லது  வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது !

இதைத்தான் அனைத்து மதமும்   சொல்கிறது !

எதை நீ இழந்தாய்... 

எதற்காக அழுகிறாய்...
 

இன்று எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையது...
 

மாற்றம் என்பது மட்டுமே மாறாதது....
 

கடமையை செய்... 

பலனை எதிர்பாராதே...

ஏனெனில் கடமைக்கான பலனை  இறைவன் தர மறப்பதில்லை!

அன்பாய் இருப்போம்..


பண்பாய் இருப்போம்..


நட்பாய் இருப்போம்..

அனைவரின் நெஞ்சில் நீங்காமலிருப்போம்...

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...