ஒரு முறை
நாரதருக்கு நம்மை காட்டிலும் நாராயணன் மேல் பக்தி உள்ளவர்கள் யாருமே இல்லை
என்று கர்வம் வந்துவிட்டதாம் அதை எம்பெருமான் திருமுன்னாலும் சொல்லிவிட்டாராம்
உடனே நாராயணர் அப்பனே நாரதா அப்படி கர்வம் கொள்ளாதே உன்னை காட்டிலும் என்
மீது பக்தி கொண்ட ஒருவன் கைலாசபுரத்தில் இருக்கிறான் என்றாராம் நாரதர்க்கு உடனே
அந்த பக்தனை காணவேண்டும் என்று ஆவல் பிறந்து விட்டதாம் பெருமாள் சொன்ன அந்த
ஊருக்கு ஒரு நாள் காலையில் போய் அந்த குடியானவனை பார்த்தாராம் அவன் காலையில்
கண்விழித்ததும் அப்பனே நாராயணா என்று மட்டும் சொல்லிவிட்டு ஏர்கலப்பையை தூக்கி கொண்டு
வயலுக்கு போனானாம்
நாரதரும் அவன்
கூடவே வயலுக்கு போனார் அவன் உச்சி வெயில் வரும்வரை ஏர் உழுதான் அதன் பிறகு பழைய
சாதத்தை சாப்பிட்டு விட்டு மரத்தடியில் சற்று நேரம் ஓய்வு எடுத்தான்
பிறகு வரப்பு வெட்டுதல் களையெடுத்தல் என்று வேலைகளை ஒவ்வொன்றாக பார்த்து விட்டு
மாலை சூரிய அஸ்தமனம் ஆனவுடன் வீட்டுக்கு வந்தானாம் வந்தவன் இரவு சாப்பாட்டை
முடித்து விட்டு படுக்கையில் படுக்கும் போது அப்பனே நாராயணா
என்று சொல்லி நன்றாக உறங்கி விட்டானாம்
நாரதருக்கு எதுவும் புரியவில்லை ஒரு நாளில் விழிக்கும் போது உறங்கும் போதும் மட்டுமே கடவுளை நினைக்கும் இவன் எப்போது பார்த்தாலும் கடவுளையே நினைத்து கொண்டிருக்கும் என்னை விட எப்படி உயர்ந்தவன் என்று எண்ணினார் இதை நாராயணனிடமே கேட்டும் விட்டார் அதற்கு எம்பெருமான் ஒருவன் எத்தனை முறை என்னை நினைக்கிறான் என்பது முக்கியமல்ல எப்படி நினைக்கிறான் என்பதே முக்கியம் என்று சொன்னாறாம் அதாவது நீ கடவுளை வணங்குவது ஒரே ஒரு நிமிடமாக கூட இருக்கலாம் அந்த ஒரு நிமிடத்தையும் அவருக்காக முழுமையாக செலவிடு என்பதே நமது மதத்தின் ஆதார சுருதியாகும்

No comments:
Post a Comment