Total Pageviews

Friday, February 17, 2012

சோம்பேறி விரும்பும் பெண்




பெரியவர் ஒருவர் ஆற்றங்கரை ஓரமாக வந்து கொண்டிருந்தார். அங்கே ஒருவன் தூங்கி வழிந்தபடி ஆற்றில் தூண்டில் போட்டுக் கொண்டு இருந்தான்.
தூண்டில் தக்கை நீருக்குள் அமிழ்வதைக் கண்ட அவர், "உன் தூண்டிலில் மீன் சிக்கி உள்ளது. வெளியே இழு" என்றார்.

"ஐயா! நீங்களே அந்த மீனை வெளியே இழுத்து எனக்கு உதவி செய்யுங்கள்" என்றான் அவன்.

அவரும் தூண்டிலை இழுத்தார். அதில் பெரிய மீன் சிக்கி இருந்தது. "நல்ல பெரிய மீன்" என்றார் அவர்.

"ஐயா! தயவு செய்து தூண்டிலில் இருக்கும் அந்த மீனை எடுத்துப் பக்கத்தில் இருக்கும் கூடையில் போட்டு விடுங்கள்" என்றான் அவன்.
அவரும் அப்படியே செய்தார்.

"ஐயா! உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும். இங்கே இருக்கும் புழுவைத் தூண்டில் முள்ளில் கோர்த்துத் தண்ணீரில் போட்டு விட்டுச்
செல்லுங்கள்" என்றான்.

"மீண்டும் மீன் பிடிக்க நினைக்கிறாய். நல்லது. அப்படியே செய்கிறேன்" என்ற அவர் தூண்டில் முள்ளில் புழுவைக் கோர்த்து நீரில் போட்டு விட்டுக் கழியை அவன் கையில் கொடுத்தார்.

"நீங்கள் நல்லவர்" என்றான் அவன்.

"நான் பார்த்ததிலேயே பெரிய சோம்பேறி நீதான். யாரையாவது திருமணம் செய்து கொண்டு ஒரு மகனைப் பெற்றெடு. அந்த மகன் உன்னுடன் வருவான். தூண்டிலில் புழு கோர்ப்பது. மீனைக் கூடையில் போடுவது போன்ற எல்லா வேலைகளையும் செய்வான்" என்றார் அவர்.

"நீங்கள் சொல்வது நல்ல யோசனைதான். நான் திருமணம் செய்து கொள்வதற்கு கர்ப்பிணியான ஒரு பெண் வேண்டும். எங்காவது கிடைப்பாளா? சொல்லுங்கள்" என்று கேட்டான் அவன்.

No comments:

Post a Comment

தேடுனாலும் கிடைக்காது....

கல்லூரியில் படிக்கும் ஒரு பையன் தன்னுடன் படிக்கும் பெண்ணிடம் ஒரு காதல் கடிதம் வைக்கப்பட்ட புத்தகத்தை கொடுத்தான். அதில் அவன்... "*நீ என்...