Total Pageviews

Sunday, January 19, 2014

நிலவும் சாட்சி சொல்லும் !






மாடசாமிக்கும் கந்தசாமிக்கும் அடுத்தடுத்து நிலங்கள் இருந்தன.
இதில் மாடசாமிதான் அடிக்கடி தகராறு செய்து வந்தான்.

ஓர் இரவு நேரம்.  நல்ல  பௌர்ணமி. இவர்கள்  இருவரும்  தங்கள் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தனர்.

வழக்கம் போலவே தகராறு.

மாடசாமி, தன்கையில் இருந்த மண்வெட்டியால் கந்தாசாமியை வெட்டி விடுகிறான்

கந்தசாமி சாகும்போது, "நிலவே நீ தான் சாட்சி" என சொல்லி விட்டு சாகிறான்.

அடபோடா இந்த நிலவா வந்து சாட்சி சொல்லபோகிறது என்று சிரித்தான்.

கந்த சாமியை யார் கொன்றது எனத்தெரியாமல் போகிறது.

சிலகாலம் போனது.

மாடசாமி இரவு சாப்பிட்டு விட்டு கைற்றுக்கட்டிலை வெளியே எடுத்துபோட்டு படுத்தான்.

அன்றும் பௌர்ணமி.
அவனுக்கு கந்தசாமியின் ஞாபகம் வந்து போனது.
பெரிதாக சிரித்தான்.

திடிரென்று தன்புருசன் சத்தம் போட்டு சிரித்ததை கண்டு காரணம் கேட்டாள் அவன் மனைவி.

இவனும் ஏதோதோ சொல்லி சமாளித்து பார்த்தான்.

அவள் சமாதானம் அடையவில்லை.

சரி யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லி, கந்தசாமியை தான் கொன்ற கதையை சொன்னான்.

சில நாட்கள் சென்றன.

மாடசாமிக்கும் அவன் மனைவிக்கும் சண்டை.

அவளை அடிஅடின்னு அடித்தான்.
கோபம் தலைக்கேறி மண்வெட்டியை எடுத்து வெட்ட வந்தான்.

அவள் பெரிதாக சத்தம் போட்டுக்கொண்டே தெருவில் வந்து கத்தினாள்.

"
அய்யோ என்ன காப்பாத்துங்க. அன்னைக்கு கந்தசாமிய கொன்னமாதிரி என்னையும் கொல்ல வரான் என் புருசன்"

அப்பத்தான் கந்தசாமிய கொன்றது மாடசாமிதான்னு ஊர்மக்களுக்கு தெரிந்தது.

‪‎
பெண்களிடம் ரகசியம் தங்காது என்பது உண்மையா ?





Tuesday, December 31, 2013

புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்.



ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன.

பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும்.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது.

குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.

குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.

''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.

புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது,   புத்தியில்லாத செயல்.

25வயதில் கிழவன் ஆக வேண்டுமா...?

 
ஒரு நிருபர் மூணு தாத்தாக்களை அவர்களது இளமையின் ரகசியம் பற்றி பேட்டி எடுத்தார்...

முதல் தாத்தா : எனக்கு மது, புகை மாதிரி எந்த கெட்ட பழக்கமும் இல்லை...நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
முதல் தாத்தா : 95
நிருபர் : வாவ் ! வெரிகுட் !

ரெண்டாவது தாத்தா : எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு..ஆனால் மது பழக்கம் இல்லை..நானும் நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
ரெண்டாவது தாத்தா : 85
நிருபர் : வாவ் ! வெரிகுட் !

மூணாவது தாத்தா : எனக்கு மது, புகை, பொண்ணுக சகவாசம்னு எல்லா பழக்கமும் இருக்கு..சாப்பிடாமகூட இருந்துருவேன் ..தண்ணி அடிக்காம இருக்க மாட்டேன்..தண்ணி அடிக்கலேன்னா கை, காலெல்லாம் அப்பிடியே உதர ஆரம்பிச்சிரும்.
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
மூணாவது தாத்தா : 25

நிருபர் : ?????????

சிரித்ததுடன் சிந்திக்கவும் வேண்டும் இளைஞர்களே, 25வயதில் கிழவன் ஆக வேண்டுமா...?

இந்த மொபைல் போன் யாரோடது...?


ஒருவன் டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தான்..

டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது..

எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு 'ஹலோ' சொன்னான்..

'என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா...'

'எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா...'

'இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க...'

'ஒண்ணு போதுமா டார்லிங்... இரண்டா எடுத்துக்கோ..'

'சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா...'

'ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..' என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்...

சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்...

'என்னடா இது உன் பொண்டாடிக்கு இவ்ளோ செலவு பண்றா நீ சரின்னு சொல்லிட்ட... நீ அவ மேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க... கிரேட் மச்சி...' என்றார்கள்...

ஆனால் அவனோ அருகே அமர்ந்து இருந்தவர்களிடம்
விசாரித்து கொண்டிருந்தான்,'

எக்ஸ்கிஸ் மி சார்..

இந்த மொபைல் போன் யாரோடது...?

மூளை இருக்கா ????????


ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது. அக்கடையில் முதலாளியே தொழிலாளி.

ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், முதலாளி மூளையிருக்கா? என்று கேட்பான். அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான்.

இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.

நாட்கள் நகர்ந்தன.

ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, அட இவ்வளவு தானே, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று நண்பனும் கூறினான்.

கடையை மூடப்போகும் சமயம், அத் திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம், முதலாளி மூளையிருக்கா? என்று வழக்கம் போலக் கேட்டான்.

அதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்து, இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உனக்குத்தான் இல்லை என்றான்.

திமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த,
கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி.

Wednesday, December 25, 2013

ஆணின் வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள்



“கையில் என்ன ‌பொட்டலம்?”

“மல்லிகை பூ சார்! மனைவிக்கு வாங்கிட்டுப் போறேன்…!”

“அவ்வளவு பிரியமா உங்களுக்கு?”

“ஆமா சார்… என்னுடைய வெற்றிக்கெல்லாம் அவதா‌னே காரணம்!”

“உங்க வெற்றிக்கு மட்டுமா… ‌அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஆண்ட்ரூ ஜாக்சன். கல்யாணத்துக்கு முன்னாடி அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவருக்குப் படிக்கச் சொல்லிக் கொடுத்து… அவருக்கு அமெரிக்க ஜனாதிபதியாக ஆகக்கூடிய தகுதியை ஏற்படுத்தினதே அவருடைய மனைவி தானே..!”

“அப்படியா?”

“மோட்டார் மன்னர் யென்றி போர்டு தெரியுமில்லே, அவரு தன்னுடைய ஆராய்ச்சியிலே தோல்வி கண்டு வந்தப்போ பக்கத்துலே இருந்தவங்கள்லாம் அவரைப் பைத்தியம்ன்னு கேலி பண்ணாங்க!”

“‌அய்யோ பாவம்!”

“அந்த சமயத்துலே அவரு மனைவி தான் அவருக்கு உற்சாகம் ஊட்டினாங்க… மனசு சோர்ந்து போயி்டாதீங்க… நீங்க நிச்சயம் வெற்றி பெறுவீங்க… அதுக்கான எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு… அப்படின்னு சொல்லிக்கிட்டே வந்தாங்க. அதனாலேதான் அவரு கடைசியிலே மோட்டார் காரைக் கண்டுபிடிச்சார்..!”

“பார்த்தீங்களா? ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள்-ன்னு சொல்றது எந்த அளவுக்குச் சரியா இருக்கு பாருங்க!”

“சரி… இப்போ நீங்க அடைஞ்ச வெற்றி என்ன?”

“அருமையா ஒரு நாவல் எழுதி முடிச்சிருக்கேன் சார்..!”

“இதுக்கு உங்க மனைவி ரொம்ப உதவி பண்ணாங்களா..?”

“ஆமாங்க”

“எப்படி?”

“அதை  நான் எழுதி முடிக்கிறவரைக்கும் அவ தன்னுடைய அம்மா வீட்டுக்குப் போயிருந்தாசார் !”

நன்றி : தென்கச்சி கோ. சுவாமிநாதன்

தேடி சென்றால் ஏமாற்றம்....நாடி வந்தால் சந்தோசம்..

 
ஒரு நாள் ஒரு சின்ன பையன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான்.அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோப்பா என்றார்.

ஆனால் அந்த பையன் சாக்லேட்டை எடுக்கவே இல்லை.கடைக்காரர் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் எடுக்கவில்லை.அதை பார்த்த அவன் அம்மா சாக்லேட் பாட்டிலில் இருந்து எடுத்துக்கோ என்றார்.அப்பவும் அவன் சாக்லெட்டை எடுக்கவே இல்லை.

பிறகு அந்த கடைக்காரரே சாக்லேட்டை அள்ளி அவன் கைகளில் வைத்தார்.அவன் ஆசையுடன் இரண்டு கைகளாலும் வாங்கிகொண்டான்.

வீட்டிற்கு போனவுடன் அவன் அம்மா ஏன் சாக்லேட்டை பாட்டிலில் இருந்து நீயே எடுத்து கொள்ளவில்லை என்று கேட்டார்.

அம்மா என் கையை பாருங்கள் எவ்வளவு சின்னதா இருக்குது.நானே பாட்டிலில் இருந்து எடுத்து இருந்தால் எனக்கு கொஞ்சமாக தான் கிடைத்திருக்கும் இப்ப பாருங்க அவர் எடுத்து கொடுத்ததால் எவ்வளவு அதிகமா சாக்லேட் கிடைச்சிருக்கு பாருங்கள் என்றான்.

எதையுமே நாமளா நாடிப்போனா குறைவா தான் கிடைக்கும் அதுவா தேடி வந்தா அதிகமா கிடைக்கும்...
...
தேடி சென்றால் ஏமாற்றம்....நாடி வந்தால் சந்தோசம்..

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...