Total Pageviews

Sunday, November 27, 2011

பகல் கனவு



"அம்மா நான் பாசாயிட்டேன்

குமாருக்கு இதய துடிப்பு அதிகரித்துகொண்டே இருந்தது. அவனுடைய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளிவருகின்றன

இது அவனுடைய வாழ்கையின் போக்கையே மாற்றப்போகும் தினம் என்பது தெளிவாக உணர்ந்திருந்தன். அவனுடன் படித்த நண்பர்கள் வசதியில் உயர்ந்தவர்களாகவும், இன்று தோற்றால் மறுபடி பரீட்சை எழுதி வெற்றி பெற பண பலமும், சுற்றத்தார் உதவியும் நிறைந்தவர்கள்.  


குமாருக்கு அப்படி இல்லை. அவன் வீட்டுக்கு ஒரே பையன், அவன் அப்பாவும் அம்மாவும் அந்த சிறிய கிராமத்தில் விவசாய கூலிகளாக வேலை செய்கிறார்கள். வருமானம் குறைவாக இருந்தாலும் மகனை படிக்க வைக்க முயற்சித்து பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளனர். அதுவும் பள்ளி கட்டணம், புத்தகம் எல்லாம் இலவசமாக கிடைப்பதால் ஏதும் பிரச்சினை இல்லாமல் இருந்தது

ஆனால் விதி ஊரை ஒட்டிய நெடுஞ்சாலையில் புதியதாக திறந்திருக்கும் பெட்ரோல் பங்கினால் வந்தது. அந்த பங்கின் முதலாளி குமார் அப்பா வேலை செய்யும் பண்ணையாருடையது. அவர் உரிமையோடு குமாரின் அப்பாவை கூப்பிட்டு "என்னப்பா உன் பையன் பத்தாவது பரீட்சை எழுதி இருக்கானாமே, எப்படி, தேறுவானா மாட்டானா,
எப்படி இருந்தாலும் பரவாயில்லை உன் பையனை என்னோட பெட்ரோல் பங்குல கேசியர் வேலைக்கு போடறேன், உடனே அவன வேலையில போய் சேர சொல்லு" என்றார்.  

குமாரின் அப்பாவுக்கோ அவரின் கட்டளையை மீற முடியாத தர்மசங்கடமான நிலை. குமாரின் அம்மாவிடம் இதை பற்றி விவாதித்து கொண்டிருக்கும் போது குமார் வீட்டினுள் நுழைந்தான். "இங்க பாருங்க, அவன படிக்க வைக்க நாம இது வர ஒன்னும் பெரிய செலவு ஒன்னும் பண்ணதில்ல, அவன் படிக்கணும் என்று ஆசை  படறான், அவன் படிச்சு முன்னேறினா நமக்கு தானுங்க பெரும, அதனால அவன் தொடர்ந்து படிக்கட்டும்" என்றார். குமாரின் அப்பாவும் இதற்க்கு ஒத்து கொண்டார் ஒரு நிபந்தனையோடுபாஸாயிட்டா  தொடர்ந்து படிக்கலாம், ஆனா பெயிலாயிட்டா பெட்ரோல் பங்க் வேலைக்கு போகணும் என்று.  

 நண்பன் பேப்பரை கொடுத்து பரீட்சை நம்பரை பார்க்க சொன்னான். "அம்மா நான் பாசாயிட்டேன்" "அம்மா நான் பாசாயிட்டேன்"

 டேய் குமார், குமார் என்னடா பகல் கனவு, கஸ்டமர் வந்து இருக்காங்க பாரு, போய் பில்லு போடற வழியை பாரு என்றபடி கல்லாவில் உட்கார்ந்தார் பண்ணையார்.


கை மேல் ஒரு பலன


ண்களில் ஒரு வித மிரட்சியுடன் பஸ்ஸில் உட்கார்ந்திருந்தாள் பவித்ரா. முந்தின நாள் ஒரு கல்லூரி மாணவன் தன் நண்பனிடம் சவால் விட்டுவிட்டுப் போயிருந்ததே அவளின் மிரட்சிக்குக் காரணம்.

தினமும் அவர்கள் இருவரும் வேண்டுமென்றே பெண்கள் மேல் விழுந்துவிட்டு 'சாரி' சொல்வதும், புடவைத் தலைப்பை இழுப்பதும், முதுகில் கையை படரவிடுவதும், ஃ பிளையிங் கிஸ் கொடுப்பதும்.. நினைக்க நினைக்க அவள் முகமெங்கும் வியர்வை முத்துக்கள் அரும்பத் தொடங்கின. முந்தின நாள் ஒரு படி மேலே போய் "நாளைக்கு பஸ்ஸிலிருந்து இறங்கறப்ப இவங்க இடுப்பைக் கிள்ளி விட்டு இறங்கலேன்னா என் பெயரை மாத்திக்கறேன்டா" என்று அவள் காது படவே சொல்லிவிட்டுப் போயிருந்தான் அந்தக் கல்லூரி மாணவன்.

அவன் வந்திருக்கிறானா என்று பஸ்ஸினுள் ஒரு நோட்டம் விட்டாள். சவால் விட்ட ஃபங்க் தலையன் அவள் பக்கத்தில் நின்று கொண்டு அவளையும் அவள் மடியையும் வெறித்துப் பார்ப்பதை கவனித்தாள்.

பஸ் அடுத்த ஸ்டாப்பிங்கை நெருங்கும் சமயம் "டேய் நல்ல வேளை இன்னிக்காவது தெரிஞ்சுதே! இல்லேன்னா நேத்து போட்ட சவாலில் ஜெயிப்பதற்காக இடுப்பைக் கிள்ளிட்டு இந்நேரம் கம்பி எண்ணிக் கொண்டிருப்பேன். இவ்வளவு நாளா எப்படிடா நாம பண்ணின சில்மிஷங்களை பொருத்துகிட்டிருந்தாங்க?"

நண்பனிடம் கூறிவிட்டு அந்த ஸ்டாப்பிங்கிலேயே இறங்கிப் போய்விட்டான் அந்த ஃபங்க் தலையன். அவனைத் தொடர்ந்து அவன் நண்பனும் இறங்கிவிட்டான்.

அடுத்த ஸ்டாப்பிங்கில் "ரொம்ப தாங்க்ஸ்" என்றவாறே பவித்ராவிடம் கொடுத்து வைத்திருந்த தன் யூனிபார்மை வாங்கிக் கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கிப் போனார் ஒரு பெண்மணி.

ஒரு பெண் போலீஸின் கையில் வைத்திருந்த போலீஸ் யூனிபார்மை வாங்கி தன் மடியில் வைத்திருந்ததற்கு இப்படி கை மேல் ஒரு பலனா?

நிம்மதியாக பெருமூச்சு விட்டாள் பவித்ரா.

நரியைப் பின்பற்று


ருவன் காட்டுவழியே நடக்கும்போது ஒரு காட்சியைக் கண்டான்.

புலி ஒன்று கால் முறிந்து வேட்டையாட முடியாமல் கிடந்தது. ஆனால் ஆச்சர்யப்படும்படி ஒரு நரி அந்தப் புலிக்கு உணவு கொண்டுவந்து தந்தது. 'ஆகா கடவுளின் செயல்கள் வியக்கத்தக்கவை' என நினைத்தான் அந்த மனிதன். 'நானும் இந்தப் புலிபோல இங்கேயே படுத்திருந்தால் கடவுள் எனக்கும் இதுபோல உணவு தந்து காப்பாற்றுவார்', எனச் சொல்லி அந்த இடத்திலேயே படுத்துவிட்டான்.


சில நாட்கள் ஆயின யாரும் வரவில்லை. பசியால் வாடினான். இன்னும் சில நாட்கள் பசி மயக்கத்தில் கழிந்தன. இறக்கும் நிலையில் இறைவனை வேண்டினான். 'ஏன் கடவுளே? அந்தப் புலிக்குக் காட்டும் இரக்கம் எனக்கு கிடையாதா?', என்றான். கடவுள் அவன் முன்னே தோன்றினார், 'மகனே அந்தக் காட்சி உனக்கு கிடைத்தது அந்தப் புலியைப் பின்பற்ற அல்ல அந்த நரியைப் பின்பற்ற' என்றார்.

ஆத்திகன் 'கடவுள் இல்லையோ?' என் சந்தேகப் படுவது போல நாத்திகனுக்கும் 'ஒருவேளை கடவுள் இருந்தால்?' என்கிற சந்தேகம் எழும். சோதனை நேரத்தில் கடவுளை வேண்டாதவர் யார்? அப்படி வேண்டும்போது 'கடவுளே இந்தத் தொல்லையிலிருந்து யாராவது என்னை மீட்கமாட்டார்களா, யாரையாவது அனுப்ப மாட்டியா?' எனக் குரலெழுப்புகிறோம். என்றாவது 'கடவுளே. இன்று நான் யாருக்காவது உதவ வேண்டுமா? அதற்கு எனக்கு வழிகாட்டு' என வேண்டியிருக்கிறோமா

Friday, November 25, 2011

வாத்தியாரம்மா


"மாலா, நாளையிலிருந்து சாயந்திரம் 4 மணிக்கு பேத்தி ஆர்த்தியை டியூஷனுக்குக் கூட்டிப் போகணும். டியூஷன் முடிந்ததும் மறுபடியும் கூட்டி வரணும் என்ன?' என்றாள் மல்லிகா.

"சரிம்மா. யாரும்மா டியூஷன் எடுக்கறாங்க. நல்லா சொல்லித் தருவாங்களா?' என்றாள் வேலைக்காரி.

"ஏன் உனபேத்தியையும் அங்கே சேர்க்கலாம்னு நினைக்கிறயா?'
"ஏம்மா, அங்கே என் பேத்தியைச் சேர்க்கக் கூடாதா?'

"அங்கே படிக்கிற பசங்கெல்லாம், பணக்கார வீட்டுப் பசங்க. மாதம் 7400 சம்பளம் தரணும். உன் மாதிரி வேலைக்காரி வீட்டுப் பசங்க அங்கே எப்படிச் சேர முடியும்?' கர்வத்துடன் கேட்டாள் மல்லிகா.

"அம்மா, டியூஷன் சொல்லித்தர்ற வாத்தியாரம்மா பேர் என்ன?'
"ஏன், பெயரைத் தெரிந்து என்ன செய்யப் போறே? பக்கத்துத் தெருவிலே...

விமலான்னு பேரு. போதுமா? இல்லை இன்னும் ஏதாவது கேட்கணுமா?' நக்கலாகக் கேட்டாள்.

"அம்மா அந்த விமலா என் பொண்ணுதான்' என எப்படிச் சொல்வாள் மாலா.



Posted by Dinamalar

கல்யாணம் - யாரைப் பிடிக்குதோ அவளைத் தானே கட்டிக்க முடியும்


“டேய்! இது தப்புடா!” பெண்பார்க்க வந்த இடத்தில் இராம்குமாரின் தந்தை அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

“என்னப்பா தப்பு? நான் தானே கல்யாணம் பண்ணிக்கப் போகிறவன்?

எனக்கு யாரைப் பிடிக்குதோ அவளைத் தானே கட்டிக்க முடியும்?” ராம் சீறினான்.

“மாப்பிள்ளை என்ன சொல்றாரு?” தீபாவின் அப்பா, இன்னும் மாமனார் ஆகாதவர், கேட்டார்.

“வந்து..” அப்பா மென்று முழுங்கிக் கொண்டிருக்க, ராம் போட்டு உடைத்தான்

“நான் சொல்றேன் சார். எனக்கு உங்க ரெண்டாவது பொண்ணைத் தான் பிடிச்சிருக்கு!” கேட்டவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

“இப்போ சின்னவளுக்குக் கல்யாணம் செய்யுறதா இல்லை. அவளுக்குப் பார்க்க ஆரம்பிக்கும் போது உங்களுக்குச் சொல்லிவிடச் சொல்லுறேன்”

சீக்கிரமே அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு விட்ட தீபாவின் தாயார் வரவழைத்துக் கொண்ட புன்முறுவலுடன் சொல்லி நிலைமையைக் கொஞ்சம் சரி செய்தார்.

******************
ஒரு வாரம் கழித்து அடுத்த சுற்று பெண் பார்க்கும் படலம்.
“டேய் ராமா, இங்கேயும் முறைகெட்டத் தனமா ஏதாவது சொல்லிகிட்டிருக்காதே. அவங்க கேட்கிற பொண்ணைப் பிடிச்சிருந்தா, பிடிச்சிருக்குன்னு சொல்லு. இல்லைன்னா இல்லைன்னு சொல்லு. அதை விட்டுட்டு தங்கச்சியக் கட்டிக்கிறேன்., கெழவியைக் கட்டிக்கிறேன்னு நின்னேன்னா இது தான் உனக்கு நான் பார்க்கிற கடைசி பொண்ணு.. அதுக்கப்புறம் நீயாச்சு உன் கல்யாணமாச்சு” அப்பா போன வாரத் தலைகுனிவிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை

“அவன் கேட்டதில் என்னப்பா தப்பு? அவனுக்கு விருப்பமானவளை அவன் சொல்லக் கூடாதா?” இளையவன் ரவி, பரிந்து கொண்டு வந்தான்.

“ரவி! இதெல்லாம் பார்த்து நீ கத்துக்கிடாதே. அப்புறம் என்ன செய்வேன்னு எனக்கே தெரியது?” என்றார் அப்பா. பிள்ளைகள் இருவரும் வேண்டா வெறுப்பாக முகம் திருப்பிக் கொண்டனர்.

*********

“என்ன ராம், பொண்ணு எப்படி?”

பிடிச்சிருக்கு என்று தலையசைத்தான் இராம். அப்பா பெருமூச்சு விட்டார். பெண்ணின் தந்தை முகத்தில் கண நேர மகிழ்ச்சி வந்தது.

“எதுக்கும் பெண்ணையும் ஒரு வார்த்தை கேளுங்களேன்..” என்றார் பெண் வீட்டுப் பெரியவர் ஒருவர்.

பெண்ணின் தந்தை எழுந்து உள்ளே போனார்.

“என்ன சொல்றா பொண்ணு?” இராம்குமாரின் தந்தை
“அது.. வந்து.. ” பெண்ணின் தந்தை தயங்கி மயங்கிப் பேச முயல, மணப்பெண் சுதா வெளியே வந்தாள்.

“சார்! எனக்கு உங்க சின்னப் பையனைத் தான் பிடிச்சிருக்கு. உங்களுக்குச் சம்மதம்னா..”

இராம்குமார் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.

“என்னடா ராம். என்ன சொல்றே இப்போ?” அப்பா அவன் காதுக்குள் கேட்டார்.

“அப்பா அந்த தீபாவையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் பா..” என்றவனின் குரலில் ஒரு தெளிவு இருந்தது.

யாரது, சொல்லாமல் நெஞ்அள்ளி போவது!!


சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்த காலம் அது.அலுவலகத்தில் 40 % பெண்களே. அவ்வப்போது எதாவது கிறுக்கி (எழுதி ) காட்டுவேன்.

அதில் அனைவருக்கும் ஒரு சந்தோசம். உலகில் கவிஞர்களை உருவாக்குவதும் வாழவைப்பதும் பெண்கள்தான் இதை யாரும் மறுக்க முடியாது. படைக்க தெரிந்தவர்களை ரசிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.அந்த அலுவலகத்திலும் ஒருத்தி இருந்தாள் அவள் பெயர் நிலா.... மாநிறம், பூசினார் போல தேகம், அறிவும், திறமையும், பொறுமையும், பரிவும், நிதானமும் கலந்த கலவை அவள். லேசான சுருட்டை முடி. அதில் ஒன்றிடண்டு முன்னால் வந்து நிற்கும். அரிதாரம் பூசாத முகம் அவளின் சிறப்பு. சுற்றி இருக்கும் காட்டன் புடவை அவளை சுமக்கிறதா இல்லை அவள் புடவையை சுமக்கிராளா பாப்பையாவை வைத்து பட்டி மன்றமே நடத்தலாம் . அதிராத பேச்சு, நிதான நடை, பளிச் என்ற ஒரு தூய்மை. யாரையும் புண் படுத்தாத மனம்.நான் தேடிய மணியன் செல்வம் ஓவியம் அவள். அவளை நல்ல அழகு என்று சொன்னால் அது பிழை. அதையும் தாண்டி வார்த்தை தேடுகிறேன்.

ஒருமுறை கதிரவனில் புகைப்பட கவிதபோட்டி.எனக்கும் அவளுக்குமான சம்பவங்களை கோர்த்து எனது காதலை சொல்லி கவிதையை எழுதி அனுப்பிவைக்க அதற்க்கு பரிசும் கிடைத்தது . கவிதையை வாசித்தாள் பின் ஒன்றும் சொல்லவில்லை ஏற்று கொண்டாளா இல்லையா தத்தளித்தேன்.

 பதட்டம் உடலிலும் மனதிலும். அலுவலக இளசுகள் ட்ரீட் கேட்க அனைவரும் அருண் ஐஸ் கிரீம் பார் சென்றோம். வட்ட மேசை சுற்றி அமர்ந்து இருந்தோம். என் அருகில் வந்து அமர்ந்தாள். பேசி கொண்டிருக்கும் போதே யாரும் அறியாவண்ணம் இரண்டு பேருடைய ஐஸ் கிரீமையும் மாற்றி கொண்டாள். அவள் தின்ற பாதி இப்பொழுது என் முன்னே. எழுந்து நின்று ஆர்பரிக்க வேண்டும் போல தோன்றியது. முதல் காதல் அது ஏற்று கொண்ட தருணம். வானத்தில் இருந்து என்மேல் மட்டும் மழை பொழிவது போல இருந்தது.காதலித்து பாருங்கள் பட்டென்று பத்து வயது குறைந்து விடும்.

காதல் சுகம் கிடைக்காத மனிதன் உலகில் பாவப்பட்ட ஜீவராசி. காதல் ஒரு அபூர்வ உணர்வு. வரலாற்று ஆசிரியர்கள் போர்களங்களை எவ்வளவு பதிந்தார்களோ அதற்க்கு சமமாய் காதலையும் பதிந்தார்கள். உண்மையான காதல் துணை நினைத்தாலே உடலும் மனதும் பூரிக்கிறது. அலுவலகம் சுகமானது.விடுமுறையை வெறுக்க தோன்றியது. ஆணையும் பெண்ணையும் சேர்த்து படைத்த இறைவனக்கு என் மனமார்ந்த நன்றி.

மூன்று தங்கைகளுக்கு அக்காள் அவள். தனியார் வேலைக்கு சைக்கிள் ஓட்டிச்செல்லும் தந்தை. . சாலிகிராமத்தில் ஒரு சாதாரண குடும்பம் அவளுடையது. கனவு எல்லோருக்கும் சொந்தம்.காதலும் எல்லோருக்கும் சொந்தம். இதில் ஏழ்மை எங்கிருந்து வந்தது. நாங்களும் வாழ்ந்தோம் சந்தோஷ காதலர்களாய். பிரச்சனைகள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தொங்குகிறது.கடவுள் விரும்பாத வரை அது உங்களை அடைவதில்லை. அவர் விரும்பி விட்டால் தடுக்க எவருமில்லை.

காதல் பூத்து ஒரு வருடம் தாண்டி இருக்காது,ஒரு இரவு பொழுதில் தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் அலுவலக நண்பர்" நிலா தந்தை இறந்துவிட்டார் மருத்துவமனை வா "என்று. பதறினேன்.மருத்துவமனை சென்றேன். என்ன சொல்வேன் அவளிடம். இது காலில் அடிபட்ட புண்ணா சரியாகிவிடும் என்று சொல்ல. தீராத வலி. வீட்டில் ஆண்கள் இல்லாததால் அலுவலக நண்பர்கள் எல்லா வேலையும் செயதோம். வீடு வெறிச்சோடியது. அழுகை நிரந்தரமானது. சிறிது நாட்கள் வேலைக்கு வரவேண்டாம் என அலுவலகமும் அலுவலக நண்பர்களும் பண உதவி செய்தார்கள். தினமும் வீடு சென்று வந்தேன். என்னால் ஆனவற்றை செய்தேன்.இப்பொழுது புதிதாய் நிறைய உறவினர்கள் முளைதிருந்தார்கள்

வந்தான் எதிரி சித்தப்பா ரூபத்தில்.நல்ல வரன் என்றும், எதுவும் தரவேண்டாம் என்றும், குடும்பத்தை பார்த்து கொள்வான் என்றும் இன்னும் நிறைய என்றும் என்றும் சொல்லி எங்கள் காதலை தீயிட்டு கொளுத்தினான். இப்பொழுது என்ன அவசரம் என்றாள் " ஆம்பிள்ளை இல்லாத வீடு" என்றார். இப்பொழுது அழுகையுடன் வீட்டில் சண்டையும் சேர்ந்தது. அவள் அம்மா நோய்வாய் பட்டாள்.
ஒரு தீபாவளியின் முந்தய தினம். வீட்டிற்கு அழைத்திருந்தாள். சென்றேன். ஒரு அறையில் அமர வைத்து கதவை அடைத்து கொண்டாள்.தோளில் சாய்ந்து அழுது தீர்த்தாள். தன்னுடைய இயலாமையை சொன்னாள். மூன்று தங்கையை நினைவுட்டினாள். என்ன செய்ய என தெரியவில்லை என்றாள். பின் முதலும் கடைசியுமாய் என்னை முழுமையாக கட்டி பிடித்தாள் அழுதாள் திரும்பி நின்று நான் ஒரு ஜடமாக வாழ்ந்துவிட்டு போகிறேன்.என்னை மன்னித்துவிடு..போ என்றாள். ஒன்றுமே செய்ய இயலாதவனாக வெளியே வந்தேன்.  

வெளியே வராந்தாவில் அவள் அம்மா. என் அருகில் வந்தவர்கள் சட்டென என் காலை பிடித்து விட்டார்கள்.இனி வீட்டிற்கு வரவேண்டாம் என்றார்கள். நான் நிலைகுலைந்து போனேன். என்னம்மா இது...நான் சின்ன பையன் என்னிடம் போய் " என்றேன். அவள் மனசில் ஆசையை வளர்த்து விடாதே என்றார்கள். இல்லை இல்லை என்று தலை அசைத்தவனாக வெளியே வந்தேன். என் அழுகையை மறைக்க வானமும் சேர்ந்து அழுதது.

காதல் தோற்பதில்லை காதலர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் தோற்று விடுகிறார்கள்..

மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை !

  ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக் கொ ண்டி ருந்தாள். அந்த கன்...