ஒர் நள்ளிரவில் கழுதை கத்தியது
வீட்டுக்காரன் கதவைத்திறந்துகொண்டு வெளியே வரவில்லை.
மீண்டும் கழுதை கத்தியது.
வீட்டுக்காரன் கதவைத்திறந்துகொண்டு வெளியே வந்தான்.
கைத்தடியால் ஒங்கி ஒரு போடுபோட்டன். கழுதை அலறிப்போயிற்று.
நாய் சொன்னது. ‘நானும் குலைக்கிறேன் இப்போது நம் வீட்டுக்காரன் என்னை என்ன செய்கிறான் பார்’ என்றது.
கழுதை அதையும் பார்ப்போம் என்றது.
சொல்லியபடியே நாய் குலைக்க வீட்டுக்காரன் கதவைத்திறந்துகொண்டு வெளியில் வந்து சுற்றிச் சுற்றிப்பார்த்துவிட்டு பின் கதவு தாளிட்டுக்கொண்டான்.
கழுதைக்கு ஆத்திரமாய் வந்தது.
நாய் சமாதானம் சொன்னது.’ இந்த இடம் சரிவராது ஆளுக்கு ஆளுக்கு ஒரு சட்டமாய் இருக்கு. நாம் இருவரும் இந்த எஜமான் வீட்டைவிட்டு ஒடிவிடுவோமா’
‘
நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ஆனாலும்’ கழுதை லேசாக இழுத்து நிறுத்தியது
ஏன் என்ன சொல்கிறாய்’ நாய்த் திருப்பிக் கேட்டது.
‘
நம் எஜமானனுக்கும் அவன் மனைவிக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு வரும்’
‘
வந்தால்’ ‘ உன்னைப் போய் நான் கட்டிகிட்டதுக்கு தெருவுல கட்டிக்கிடக்கிற அந்தக் கழுதைய கட்டிகிட்டுகுடும்பம் பண்ணுலாம்’ இப்படியேத்தான் அடிக்கடி நம் எஜமான் மனைவியிடம் புலம்புகிறார் என் நீண்ட காதுகளால் நானே கேட்டிருக்கிறேன்’.
‘ அப்புறம்’
‘ ஒருக்கால் எஜமான் அப்படி ஒரு நோக்கத்தோடு என்னைத்தேடி வரும்போது நான் இங்கு இருக்கவேண்டும் அல்லவா அதான் பார்க்கிறேன்’ என்றது கழுதை..
‘
நீ சொல்வதும் ஒரு விதத்தில் சரித்தான்’ நாய் பதில் சொன்னது.